
சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! அதிமுக, தவெக, பிஜேபி, போன்ற அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளின் சலுகை ,விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கு வழங்கிட தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பி உள்ளது.
மேலும்,நாட்டில் கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக போராடுவது மிக, மிக குறைவு. இருப்பினும் அவர்களுக்கு தான் அதிகப்படியான அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இங்கே சமூக நலனுக்காக ,இந்த தேச நலனுக்காக, போராடுகின்ற பத்திரிகைகள் தேர்வு செய்து, அதற்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க தேர்தல் அறிக்கையில் அதிமுக ,பிஜேபி ,தவெக போன்ற அரசியல் கட்சிகளுக்கு உண்மையை மக்களிடம் திமுக ஆட்சிக்கு எதிரான அவலங்களை கொண்டு சேர்த்த பெருமை இந்த பத்திரிகைகளுக்கு நிச்சயம் உண்டு.
மேலும்,இது எந்தெந்த பத்திரிகை? என்பது செய்தி துறை அதிகாரிகளுக்கும் தெரியும். இதன் பார்வையாளர்களுக்கும் தெரியும். இது தவிர, ஒவ்வொரு பத்திரிக்கையின் இணையதளத்தை எடுத்து ,ஆய்வு செய்தாலே இந்த உண்மைகள் எல்லோருக்கும் புரியும்.
மேலும் ,மக்கள் அதிகாரம் இணையதளத்தில், வெளிவந்த செய்திகள், ஆய்வு செய்தால் ஊழலுக்கு எதிராக எத்தனை செய்திகள் வந்திருக்கிறது? என்பதும் ,இந்த பத்திரிகைகளின் உண்மையான செய்திகள் எவ்வளவு ?என்பதும் தெரிந்து விடும்.
அதே போல் தான், ஒவ்வொரு பத்திரிகைகள் பற்றிய செய்திகள் வியாபார நோக்கம் கொண்டதா? சமூக நோக்கம் கொண்டதா? ஊழலுக்கு எதிரானதா? என்பதை அவைகள் வெளியிடும் செய்திகள் மூலம், அதன் நோக்கம் பார்வையாளர்களுக்கும் தெரியும். படிப்பவர்களுக்கும் புரியும் .செய்தி துறை அதிகாரிகளுக்கும் தெரியும்.

எனவே, இது போன்ற பத்திரிகைகளை மத்திய ,மாநில அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுத்து ,அதன் வளர்ச்சிக்கு ஊக்கு விக்கும் போது, அது இந்த தேச நலனுக்கும், சமூக நலனுக்கும் முக்கிய பங்காற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மட்டுமல்ல,
திமுகவின் அராஜகங்கள், நடுநிலையாக செய்திகளை வெளியிட்டுள்ளது. அது பற்றியும் நீங்கள் ஆய்வு செய்து கொள்ளலாம். மேலும்,
2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கான ஆட்சியை கொடுக்கக்கூடிய அரசியல் கட்சிகள், இந்த கோரிக்கையை ஏற்று, தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது .