2026 சட்டமன்றத் தேர்தலில்! அதிமுக கூட்டணி கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளும், தவெக, மற்றும் நாம் தமிழர் ஆகிய நான்கு முனை போட்டிகளில்! தமிழ்நாட்டில் யாருக்கு மெஜாரிட்டி? தொங்கு சட்டமன்றம் அமையுமா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய ஒரு கடும் சோதனையான போட்டி.

இதில், தனியார் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு மற்றும் உளவுத்துறையின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் மீறி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி களுக்கிடையே யாருக்கு மெஜாரிட்டி ? மேலும்,

இந்த போட்டியில் அதிமுக, திமுக ,கூட்டணிகள் பலம் வாய்ந்த கூட்டணிகள் ஆக இருந்தாலும், இங்கே மெஜாரிட்டி என்பது இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியில், வாய்ப்பு என்பது மிக, மிக குறைவு தான்.மேலும்,

இந்த போட்டியில்,அதிமுக, திமுக கூட்டணியில் யார்? அதிக இடங்களை வெற்றி பெறப் போகிறார்கள்? இதுதான் மிகப்பெரிய கேள்வி ? மேலும்,

கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில், மக்களின் வெறுப்பு அரசியல், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் ,பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அரசு ஊழியர்கள் முதல் பத்திரிகையாளர்களின் உரிமைப் பிரச்சினைகள் வரை, திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. அது தேர்தலில் எதிரொலிக்கும். மேலும்,

அவர்கள் செய்தது என்ன ?என்றால், மகளிர்க்கு இலவச பேருந்தும், மகளிர் உரிமைத்தொகை 1000 /- ரூபாய் இதுதான் அவர்களுடைய சாதனை.

இது தவிர, பல சாதனைகள் செய்திருக்கிறார்கள் ஊழலில் சாதனை, பொது சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, ஏரி மண், ஆற்று மண் எடுத்தது மட்டுமல்ல, மலைகளை அளித்து ,காடுகளை அழித்து, ஒரே வரியில் சொல்லப் போனால்,இயற்கை வளங்களை அழித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் திமுக நிச்சயம் விலை கொடுக்க வேண்டி தான் வரும். இயற்கையின் தண்டனையிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. யாரெல்லாம் இயற்கையை அழித்தார்களோ, அந்த இயற்கை கண்டிப்பாக அவர்களை ஜெயிலுக்கு அனுப்பும் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும்,மக்கள் பிரச்சனைகளை கிடப்பில் போட்டு வந்தது, சிறிய விஷயங்கள் கூட ,மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், அவர்களின் உரிமையில் பாதிப்பு, காவல்துறையின் நேர்மையின்மை,விலைவாசி உயர்வு, வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, இவை அத்தனையும் திமுக ஆட்சியில் பேசு பொருளாகியுள்ளது.

இது தவிர,இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டண வியாபார உயர்வு, கஞ்சா, போதைப்பொருள், டாஸ்மாக் அத்தனையிலும், திமுக ஆட்சி சாதனை படைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சந்தி சிரிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது. இவையெல்லாம் திமுக ஆட்சிக்கு எதிரான பல காரணங்கள் உள்ளன. இது தேர்தலில் மக்கள் மனதில் நிச்சயம் எதிரொலிக்கும்.

ஆனால், இதை சமாளிக்கவும் ,சமாதானம் செய்யவும் ,மக்களுக்கு இலவச பொருட்களும், மட்டன் பிரியாணி விருந்துகளும், இலவச பொருட்களும், பணமும் கொடுத்து ஓட்டை விலை பேசுவார்கள். இதை எப்படி தேர்தல் ஆணையம் சமாளிக்க போகிறது?

மேலும்,அரசியல் தெரியாதவர்கள், கூலி வேலைக்கு செல்லும் மக்களாகப் பார்த்து, திமுகவினர் விலை பேசுவார்கள். தொடர்ந்து இந்த ஓட்டு வியாபாரம் தான் நடக்கிறது. இது தவிர, சிறுபான்மை மக்களிடம் மதத்தை வைத்து அரசியல் செய்வார்கள். பிஜேபி தமிழ்நாட்டில் உள்ளே வரக்கூடாது. அது வந்தால் ஆபத்து. அது ஒரு மதவாத கட்சி, இப்படி எல்லாம் பிரச்சாரம் செய்து அரசியல் தெரியாதவனிடம் அரசியல் செய்து கொண்டு பிழைப்பு நடத்துகின்ற திமுக என்ன தான் முட்டி மோதினாலும், அதிமுக கூட்டணியை விட குறைந்த சீட்டுகள் தான் வாங்குவார்கள்.

இதற்கு என்ன காரணம் என்றால்?, சிறுபான்மை ஓட்டுக்களை வைத்து வெற்றி பெற்று வந்த திமுக, இனி அந்த ஓட்டுக்களை பெரும்பான்மையான ஓட்டுக்களை விஜயும்,சீமானும் பிரிப்பார்கள். இது தவிர, அதிமுக, திமுகவுக்கு எதிரான வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும், இளைஞர்களின் வாக்குகளும் விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளது.

எனவே, 2026 சட்டமன்ற தேர்தல் தொங்கு சட்டமன்றத் தேர்தலாக தான் இருக்கப் போகிறது. இதில், கூட்டணி ஆட்சி தான் தமிழ்நாட்டில் உருவாக 90% வாய்ப்புள்ளது. எனவே, விஜயின் அரசியல் திமுகவுக்கு மிகப் பெரிய அடி என்பதை 2026 சட்டமன்றத் தேர்தலில் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *