
அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் ஆர். பி .உதயகுமார் அரசியலுக்கு வந்து, பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து ,இன்று அதிமுகவும், திமுகவும் தமிழகத்தில் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், இது போன்ற பலர் அவர்களுடைய ஆதங்கத்தை தொலைக் காட்சிகளில் புலம்பி தவிக்கிறார்கள்.
மேலும்,அதிமுக, உதயகுமாருக்கு விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை இருக்கலாம். யாருமே அரசியல் அனுபவத்தை வந்த உடனே கற்றுக் கொள்வதில்லை. ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது, அவருடன் வந்த கட்சிக்காரர்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருந்தது? ஆனால் ,ஒன்று மட்டும் உண்மை! விஜய்க்கு ஊழல் செய்யும் அனுபவம் இல்லை. அதற்காக தான் மக்கள் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அது ஏன் ?உங்களுக்கு இன்னும் புரியவில்லை?
மேலும்,அரசியல் என்பது யாருக்கானது என்று மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். அதனால்தான் அதிமுக, திமுகவை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்றம் தேவை என்பதன் நோக்கமே இன்னும் புரியாமல் இவர்கள் புலம்புகிறார்கள்.

மேலும்,மக்களுக்காக மாற்றம் இல்லாமல் ,இவர்களுக்காக அரசியல் என்ற அடிப்படை மாறிவிட்டதே என்பதுதான், இவர்கள் புலம்பலின் முக்கிய நோக்கம்.தவிர, இதில் அனிதா ராதாகிருஷ்ணன் ,ஒரு படி மேலே சென்று ஸ்டாலின் தன்னுடைய தொகுதி, மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்? பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது அதுவே தவறானது என்பது இன்னும் இவர்களுக்கு புரியவில்லையா?

மேலும்,ஒரு ரூபாய் கூட கொடுக்காத விஜய், இன்று மக்கள் முதல்வர் ஆக்கிவிட்டார்களே என்ற புலம்பல் அவர் மனதில் இருந்து வெளி வரும் ஆதங்கம்.அது மட்டுமல்ல, இவர்களெல்லாம் பணத்தை கொடுத்து மீண்டும் பணத்தை எடுப்பதற்காக அரசியலுக்கு வருபவர்கள்.
மக்கள் இவர்களைப் போன்ற ஊழல்வாதிகளை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடிப்பவர்கள். இதில் திமிங்கலமும் பிடிப்பார்கள். இப்படிப்பட்ட இந்த அரசியல் மாற்றத்தை மக்கள் கொண்டு வந்தது, இவர்களால் தாங்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல ,எப்படியாவது குறுக்கு வழியில் ஆவது, ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று இது போன்ற ஆட்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அதற்கு தான் தவெக எம்எல்ஏக்களையும், விலை பேசி இருக்கிறார்கள். இப்படி பதவி வெறிக்கும், பண வெறிக்கும், அலையும் இந்த கூட்டம், மக்களையும், மனதில் வசைப்படுகிறார்கள் .

மேலும்,பணத்தை வாங்கிக் கொண்டு ,ஓட்டு நமக்கு போடவில்லையே! என்ற வெறுப்பு ஒரு பக்கம், இருப்பினும், ஒருத்தன் ,ரெண்டு பேர், அல்லது பத்து பேர், 50 பேர் என்றால் கூட அவர்களை அடித்து துவைத்து விடுவார்கள். ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில்,இருப்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவர்களுடைய ஆதங்கம் மக்களுக்கு புரிகிறதா? ஆனால்,மக்களுக்கு அரசியல் புரிந்து விட்டது என்பது இந்த ஊழல்வாதிகளுக்கு இன்னும் ஏன் புரியவில்லை?
