அரசியல்வாதிகள் ஊடகத்தை தேடுவதும், ஊடகம் அரசியல்வாதியை தேடுவதும் இயல்பான ஜனநாயக செயல்பாடு! ஆனால்! அது அதிகார வட்டமாக மாறி, செய்தி துறையில் கோலோச்சுவது தான் ஜனநாயகத்திற்கு எதிரானது – முதலமைச்சரின் பார்வைக்கு இச்செய்தி! ஆசிரியர் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து இப் பிரச்சனைகளை வலியுறுத்தி வந்தும், இன்னும் செய்தி துறை மாறவில்லை என்று தான் நினைக்கிறேன்.

தற்போதைய இயக்குனர் அருண் தம்புராஜ் முதலில் சந்திக்கும் போது, நான் இன்னும் ஸ்டடி பண்ணவில்லை என்றார் .அது எல்லோருக்கும் இயல்பான ஒன்று .ஒரு துறைக்கு வந்தவுடன் அந்த துறையை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் ,அவர் உடனே இந்த துறையின் அனைத்தும் படித்து விட முடியாது.

இதை நாங்கள் 35 ஆண்டுகளாக படித்துக் கொண்டிருக்கிறோம். அதனால், எங்களுக்கு தெரியும். தெரிந்த உண்மைகளை செய்தித் துறை அதிகாரிகளுக்கு, மீண்டும் இது ஒரு தவறான பாதையில் கொண்டு செல்லக்கூடிய அணுகுமுறைதான் இதில் தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள்.

இதில் நீதி கிடைக்கவில்லை என்றால்! பிறகு ,நீதித்துறையில் நிச்சயம் இதைக் கொண்டு செல்வோம். அங்கு வந்து நீங்கள் சர்குலேஷன் சட்டத்தை சொல்ல முடியாது .நாங்கள் அதற்கு ஒரு வழியை வைத்திருக்கிறோம் .அது இப்போது சொல்ல மாட்டோம் .அதை செய்து காட்டிய பிறகு சொல்வோம்.

மேலும், ஜனநாயகத்தில் ஒரு ஊடகத்தின் மதிப்பை அதாவது லேபிளை ஜூனியர் விகடன், குங்குமம் ,தினமலர் ,தினத்தந்தி இந்த லேபிளை வைத்து தான் மதிப்பிடுகிறார்கள்.

இது தவிர, சர்குலேஷன்(circulation) மற்றும் தொலைக்காட்சிகளுக்கு (TRP) யால், அளக்க முடியாது. மேலும் ,ஒரு சிறிய மாவட்ட பத்திரிகை கூட கிராமத்தில் குடிநீர் பிரச்சனை, அங்கு நடக்கின்ற சமூகப் பிரச்சனைக்கு தீர்வு பெற்ற தருமானால், அந்த செய்தியின் சமூக மதிப்பு மிகப்பெரியது.

எனவே ,அரசாங்க விளம்பரமும், அங்கீகாரமும், செய்தித் துறையில் எப்படி கொண்டு வர வேண்டும்? கார்ப்பரேட் பத்திரிக்கையில் பணிபுரியக்கூடிய எடிட்டர்களையும் ,அங்குள்ள தலைமை நிர்வாகிகளையும் ,வைத்துக்கொண்டு செய்தித் துறை கணக்கெடுக்க கூடாது. ஏனென்றால் அது தவறானது.

மேலும்,நான் கேள்விப் பட்டவரை, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தற்போதும் ஜூனியர் விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளுக்கு தான் நல வாரியத்தில் பொறுப்பு கொடுத்து இருப்பதாக தகவல். இதை ஏற்கனவே அவரிடத்திலும் நான் சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளேன்.

ஆனால், அவர் கார்ப்பரேட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.மேலும்,

பத்திரிகைத்துறை! கார்ப்பரேட்டின் சுயநலத்திற்காகவும், அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காகவும், ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காகவும் ,ஆக்கிவிட்டார்கள்.

மேலும்,மக்களுக்காக ,சமூக நலனுக்காக ,பத்திரிக்கை நடத்தக்கூடிய சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்து இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு செய்தித் துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

மேலும், உங்களுடைய பார்வையில் விளம்பரச் சந்தை ,பெரிய ஊடகங்களுக்கு அதிகமான வாசகர்கள், பார்வையாளர்கள் ,தரவுகள், விளம்பர விற்பனை அமைப்பு ,நிறுவன பெயர் இதை வைத்து செய்தித் துறை தீர்மானிப்பது தவறான ஒன்று.

இதற்கு காரணம் அதிகாரம் மையங்களுடன் அதாவது தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களுடனும், அரசியல் கட்சித் தலைவர்களுடனும், தொழிலதிபர்களுடனும், உயர்மட்ட அதிகாரிகளுடனும் ,நெருங்கிய தொடர்பில் கார்ப்பரேட் ஊடகங்கள் இருப்பதால், இந்த தவறுகள் நீடிக்கிறது.

ஏனென்றால் ,அவர்களுக்கு மைக்கை நீட்டும் ஊடகம் ,பேட்டி அவர்களுடைய செய்தி, உடனே மக்களிடம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதும் தவறானது. அப்படி ஏற்படுத்தி இருந்தால் இன்று இந்த ஆட்சி மாற்றமே! தமிழ்நாட்டில் நடந்திருக்காது.

அப்போதெல்லாம், இந்த சமூகநலன் பத்திரிகைகள் தான் ஆட்சியாளர்களின் தவறுகளை மக்களிடம் கொண்டு சென்றது. மேலும், முன்னாள் youtube ரும், இன்னால் செய்தித் துறை அமைச்சரமான ராஜ்மோகன் இதை தெளிவாக புரிந்து கொள்வாரா? மேலும்,

ஊடகத்தின் அளவை மட்டும் பார்க்காமல், அதன் பதிவு தொடர்ச்சியான வெளியீடு, செய்திகளின் வெளிப்படத் தன்மை, சமூக பங்களிப்பு, மக்களுக்கான செய்திகள், ஆசிரியர் பொறுப்பு ,ஆகியவற்றை சேர்த்து மதிப்பிட வேண்டும்.

ஆனால், இதைத் தொடர்ந்து சொல்லியும், இவர்கள் அதே தவறை தான் செய்கிறார்கள். அதாவது சினிமா செய்தி, அரசியல் கட்சிகளை விளம்பரப்படுத்துவது ,அதாவது விளம்பர ஊடகங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் ,சமூக நலன் பத்திரிகைகளுக்கு மறுக்கப்படுவது ஏன்? அதேபோல் வியாபார ஊடகங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், இதற்கு மறுக்கப்படுவது ஏன்?

மேலும்,ஒருவன் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறான் என்றால், அவனுக்கு தகுதியான போட்டியாளர்கள் இல்லாததால், ஜெயிக்கிறான். இப்போது போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால், வாய்ப்புகளை அவர்களுக்கு மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தமிழக முதல்வருக்கு இந்த உண்மை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் வீடியோ போட்டாலாவது, முதல்வருக்கு புரிய வைக்க நினைக்கிறேன்.மேலும்,

இந்தப் பிரச்சனையில் முதல்வர் விஜய் முக்கிய கவனத்தில் கொண்டு , தகுதியான பத்திரிகைகளுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும், என்று அவருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்களது முக்கியமான கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *