இந்தியாவில் உள்ள வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர்ப் பட்டியலில் சேர்க்க தமிழகத்தில் எதிர்ப்பு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் வேலைக்கு வந்த பீகார், ஒரிசா ,குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இங்கே பல ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வாங்கி இருக்கிறார்கள்.

இப்போது அதை வைத்து இங்கு வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்குமா ?அல்லது தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி இதை செயல்படுத்துவார்களா? நடிகர் கருணாஸ், சீமான் போன்றோர் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், வேறு சில அரசியல் கட்சிகளும், இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இது இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கே, தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ,வெளி நாட்டில் இருந்து வந்த முஸ்லிம்கள், அகதிகள் ,இவர்களை வாக்காளர்களாக சேர்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் கட்சிகள், ஓட்டுக்காக தான் அரசியல் நடத்துகிறார்கள் .நாட்டுக்காக அரசியல் நடத்துகிறார்களா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் வடமாநில தொழிலாளர்கள் இருப்பார்கள் என ஒரு தோராயமான புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இது வருங்காலத்தில், தமிழ்நாட்டில் அரசியலை தேர்வு செய்யக்கூடிய சக்தியாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதற்கு தெரிவிக்கின்றன.

அதனால் இந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தார்களோ, அந்த மாநிலத்திலே அவர்களுக்கு வாக்களிக்க உரிமை கொடுப்பதுதான் நியாயமானது. மேலும்,இதை பிஜேபி மறைமுகமாக ஊக்கு வித்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பிலே ரயில்வே துறை ,வங்கித்துறை , தபால் அலுவலகம்,போன்ற மத்திய அரசு பணிகளில் இவர்கள் வெளிமாநிலத்தவர்களை கொண்டு வந்து இங்கு சேர்க்கிறார்கள். அதுவும் தற்போது தபால் நிலையங்களில் கூட அந்த நிலைமை வந்து விட்டது.

அதனால், பிஜேபியின் இந்த வேலை,தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன்? இங்கு இருக்கும் தமிழர்களை கொண்டு போய், குஜராத், பீகார், ஒரிசா போன்ற மாநிலத்தில் இவர்களை ஏற்றுக் கொள்வார்களா?

அதனால், இதை இங்கு உள்ள மாநில பிஜேபி நிர்வாகிகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் வேண்டுகோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *