
இந்தியாவில் ஒரு சாதாரண ஏழை அல்லது நடுத்தர மக்கள் தவறு செய்தால் அல்லது ஒரு அதிகாரி தவறு செய்தால் ,அவர்களுக்கு உடனே கைது செய்து தண்டனை கொடுத்து விடுகிறார்கள்.

அதுவே ஒரு பெரிய பணக்காரன் தவறு செய்தால், அவனுக்கு கோர்ட்டில் உடனே ஜாமீன் கொடுத்து விடுகிறார்கள். இதைவிட ஒரு பெரிய மத்திய அமைச்சர் பதவியில் இருந்தவர்கள் அல்லது இருப்பவர்கள் அல்லது மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர்கள், அல்லது எம்எல்ஏ க்களாக இருப்பவர்கள், எம்பிக்களாக இருந்தவர்கள், இவர்கள் ஒரு தவறு செய்தால், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவே, பத்து வருட காலம் ஆகிறது.

அதுவரைக்கும், அந்த 10 வருட காலம் நீதிமன்றம் காலத்தை கடத்துகிறது.ஏன்? 10 வருடத்திற்கு பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறது.ஏன்? என்னாச்சு? 20 வருடம் காலம் கடந்து விட்டது.
இந்த இருபது வருடம் கடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறது. இது போன்ற பாகுபாடுகள் ,நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ,முற்றிலுமாக இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

மேலும்,சாமானிய மக்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளாக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைவர்களாக இருந்தாலும், பெரும் பதவியில் இருந்தாலும், ஒரே சட்டத்தில், எல்லோருக்கும் ஒரே தண்டனை, எல்லோருக்கும் ஒரே நீதி கொடுக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் ஊழல்கள் களையப்படும். இப்படிப்பட்ட சம்பவம் இன்றும் நடந்து வருகிறது .அதற்கு உதாரணம் காங்கிரஸ் ஆட்சியில் பா . சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, சீனர்களுக்கு விசா வழங்கியதில் பல நூறு கோடிகள் கைமாறி உள்ளது.

மேலும்,இது சம்பந்தமாக பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயிலுக்கு சென்று வந்துள்ளார். பிறகு ஜாமினில் வெளிவந்து இந்த வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த விசாரணையில் நீதிமன்றம் ஏன்? இவ்வளவு சலுகை இவர்களுக்கு கொடுக்கிறது? சட்டம் என்பது பதவியில் இருந்தவர்களுக்கு ஒரு சட்டமா? அல்லது சாமானிய மக்களுக்கு ஒரு சட்டமா? இல்லை வழக்கறிஞர்கள் இந்த வழக்கை காலதாமதம் செய்ய அவர்களுக்கு ஒரு தனி சட்டமா? இல்லை

நீதிமன்றம் இவர்களுக்கு எல்லாம் ஒரு தனி சலுகையும் ,சட்டமும் இயற்றி இருக்கிறதா? அந்த நீதி ஏன்? ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு கிடைக்கவில்லை ? பதவி அதிகாரம் கொடுப்பது மக்கள் !ஆனால், அந்த மக்கள் தவறு செய்தால், உடனே தண்டனை.

இவர்கள் தவறு செய்தால், பல ஆண்டுகள் கழித்து ,அந்த தண்டனையும் கிடைக்குமா? கிடைக்காதா? அந்த குற்றத்திலோ அல்லது செய்த ஊழலிலோ நிரூபிக்கப்படவில்லை என்று சட்டம் இவர்களை தப்பிக்க வைக்கிறதா? அல்லது இவர்களுக்கு எல்லாம் சட்டம் சலுகை காட்டுகிறதா?

இப்படி சலுகை காட்டுவது, காலத்தை கடத்துவது எதற்காக ?ஏன்? மேலும், இவர்களுக்கு காலத்தை கடத்துவது தான் நீதிமன்றத்தின் சட்டமா? இல்லை அதுதான் நீதிமன்றத்தின் நீதி பரிபாலனமா? எது? என்பது நீதித்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், நீதித்துறை சட்டத்தை மதிக்க வில்லையா? சட்டம் அவர்களுக்காக வளைகிறதா ? எதற்காக சட்டம் வளைகிறது? அது பணத்திற்காக வளைகிறதா? பொதுமக்களின் கேள்விக்கு ….? நீதித்துறையின் பதில் என்ன …….. ?