கூட்டுறவுத் துறையில்! காஞ்சிபுரம் மத்திய வங்கி ஊழலை வெளியிட்ட மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீது ஒரு கோடி நஷ்ட ஈடா?-மேலாண்மை இயக்குனர் ஏ. கே ‌.சிவமலர் ‌.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 12 கோடிக்கு மேலான ஊழல்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் எந்த உள்நோக்கமும் இன்றி , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்திகள் வெளியிடப்பட்டது.

ஆனால், மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீதும் ஆசிரியர் மீதும் கால் புணர்ச்சி பேரில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு லீகல் (legal notice) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து எமது சீனியர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.

மேலும்,வங்கியில் ஊழல் எப்படி நடைபெற்றுள்ளது? என்பது குறித்து அதே காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்த வங்கியின் துணை மேலாளர் வரலட்சுமி ஆதாரத்துடன் கொடுத்த செய்தியை தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் வெளியிடப் பட்டது .

ஆனால், அதற்கு உள்நோக்கம் கற்பித்து மேலாண்மை இயக்குனர் .ஏ கே. சிவமலர் என் மீதும் ,பத்திரிக்கை மீதும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது பத்திரிகை துறையை கேவலப்படுத்தும் விதமாக அவர் செய்துள்ளார். இந்த செய்தியை வங்கியின் துணை மேலாளர் வரலட்சுமி பல தொலைக்காட்சிகளுக்கும் ,பத்திரிகைகளுக்கும் பேட்டியாகவே வெளிப்படையாக கொடுத்துள்ளார்.

இதே செய்தியை நக்கீரன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. தவிர,பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் ,இந்த செய்தியை வெளியிட்டது. முறையாக வங்கியில் ஆடிட்டிங் நடத்தி இருந்தால், இந்த ஊழல் வெளிவந்திருக்கும். ஆனால், ஆடிட்டிங் பற்றி தெரியாதவர்களையும், இவர்களுக்கு வேண்டியவர்களையும், ஆடிட்டர்கள் ஆக வைத்து ஆடிட்டிங் செய்தால் ஊழல்கள் எப்படி வெளிவரும்?

எனவே,மத்திய கூட்டுறவு வங்கிக்கு தகுதியான ஆடிட்டர் படித்தவர்களை நியமனம் செய்ய வேண்டும்.மேலும், இந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக வங்கியின் உதவி மேலாளர் வரலட்சுமி, ஏ கே சிவமலர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு விசாரணையும் போய்க் கொண்டிருக்கிறது. அதனால், உண்மை என்ன ?என்பது வழக்கு விசாரணையில் வெளிவரத் தான் போகிறது.

அதனால், காஞ்சிபுரம் மண்டல இயக்குனர் ஏ கே சிவமலர் எவ்வளவு ஊழல் செய்துள்ளார்? என்பது வெட்ட வெளிச்சமாக அப்பொழுது தெரியவரும். மேலும்,செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் மீது நோட்டீஸ் விட்டு நஷ்ட ஈடு கேட்பது செய்த ஊழலை மறைக்கவா?

தவிர, இது பற்றி என்னுடைய உறவினர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் சொன்ன ஒரே பதில் !இதுவரையில் நீ இந்த பத்திரிக்கையில் ஐம்பது லட்சம் கூட சம்பாதித்து இருக்க மாட்டாய். ஒரு கோடி நஷ்ட ஈடா? என்று கேட்டு அதிர்ந்து சிரித்தார்கள் .

ஏனென்றால்! இந்த பத்திரிக்கை சமூக நலனுக்காக ,தேச நலனுக்காக நடத்தப்படும் பத்திரிக்கை. இது வியாபார நோக்கமுமோ அல்லது அரசியல் ஆதாய நோக்கமோ, இதில் கிடையாது. உண்மை எப்போதும் வெல்லும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *