மே 20, 2025 • Makkal Adhikaram

மனிதன் பிறப்பு எந்த நிலையில் இருந்தாலும் அவன் இறக்கும் போது இறைநிலையை அடைவது தான் பிறவியின் நோக்கம்.
ஒரு நாளைக்கு பல லட்சம் உயிர்கள் பிறக்கின்றன. பல லட்சம் உயிர்கள் இருக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வாழ்ந்ததென்ன? அவர்கள் தெரிந்தது என்ன? போகும்போது அவர்கள் கொண்டு சென்றது என்ன? இருக்கும்போது, அதாவது வாழும்போது, அவர்கள் சேர்த்தது என்ன?
இதற்குள் பணம், சொத்து இது எல்லாம் இருக்கிறது என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்கள் எத்தனை கோடி? இருந்தும் வாழ முடியாமல், அதில் எந்த சந்தோஷமும் அனுபவிக்க முடியாமல், வாழ்கின்ற உயிர்கள் எத்தனை? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், அரசியல், அதிகாரம், ஆணவத்தில் கொள்ளையடித்துக் கொண்டு, போன பிறவியில் செய்த ஒரு புண்ணிய பலனால்!

இப் பிறவியில் மக்களுக்கு துன்பங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், இதையெல்லாம் தெரியாமல், மீண்டும் இந்த கர்மாவின் கணக்கை, அதாவது பாவத்தின் கணக்கை அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள். அதுவாவது தெரியுமா?

இந்த பிறவியில் நீ மந்திரி! என்றால், உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நீ சரிவர செய்யவில்லை. அந்தக் கணக்கு உன் கர்மாவின் மறுபிறவியில் ஏற்றப்பட்டு, அதை இயற்கை எப்படி ?உன்னை அனுபவிக்க வைக்க வேண்டும் என்பது அதற்கு தெரியும். இதுதான் பரம்பொருள் பிறப்பின் ரகசியம்.

இன்று நீ பணக்காரன் வீட்டில் பிறந்தாய்! நாளை அதே பணக்காரன் வீட்டில் பிறப்பாய் என்பது ஊர்ஜிதம் அல்ல. இன்று நீ தாழ்த்தப்பட்டவன் குடியில் பிறந்தாய் ,நாளை அதே தாழ்த்தப்பட்டவன் குடியில் பிறப்பாய் என்பது ஊர்ஜிதம் அல்ல, மீண்டும் அதே இடத்தில் கூட பிறக்கலாம்.அதற்கு உன்னுடைய பணி சிறப்பானதாக இருக்க வேண்டும். உன்னுடைய மனம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இந்து மதத்தில் மட்டும் தான் மறுபிறவி என்பது சொல்லப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு உயர்வான மதத்தை இழிவுபடுத்தி, பேசக்கூடிய ஈனப்பிறவிகள்! அரசியலுக்காக, பணத்திற்காக, அதிகாரத்திற்காக, பேசிக் கொண்டிருக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஈனப்பிறவி கூட்டத்திற்கு, இந்து மதத்தின் பெருமை தெரியாது. இவர்கள் இந்த மதத்திற்குள் இருக்கின்ற உண்மை என்ன? என்று கூட தெரியாது. பகுத்தறிவுவாதிகள் என்று பகுத்தறிவு முட்டாள்களாக இருக்கிறார்கள். அது யாரை ஏமாற்றி இவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்? என்பது தெரியாமல்,இவர்களையே இவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.இந்து மதத்தில் பிறந்த ஞானிகள், சித்தர்கள், மகான்கள் ,அவர்கள் சொன்னது சுயநலத்திற்கானது அல்ல,அது மனித குலத்தின் மேன்மைக்கானது.

ஒரு மனிதனின் பிறப்பு எதற்கு? ஏனென்று? கூட தெரியாத ஈனப்பிறவிகள், இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுகிறது. அதன் நோக்கம் என்ன? என்று கூட தெரியாது. ஜாதியை வைத்து இந்து மதத்தை தீர்மானிக்கிறது. ஜாதிக்கும், மதத்திற்கும் ,இந்து மதம் முக்கியத்துவம் தரவில்லை.
அப்படி என்றால், எங்களை ஏன் கோயிலுக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்ற கேள்வி எழுப்புவார்கள்?அதற்கு தான் கல்லை மட்டும் கண்டால்! கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால், கல்லை தெரியாது.

இந்து மதம் மனிதன் தன் கர்மாக்களை அழித்து ,இறைநிலையை அடைவதற்கு வழி காட்டும் ஒரு சிறந்த மதம் தான் இந்து மதம். அதனால்தான் இந்த மதத்தில் இறைவழிபாடு, இறை சிந்தனையோடு, மனிதன் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை வைத்து தான் திருவிழாக்கள், பூஜைகள், வாழ்க்கையில் நெறிமுறைகள், ஒழுக்க நெறிமுறைகள், வகுக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் ஒரு மனிதன் கடைப்பிடித்து வாழும் போது, அவனுக்கு தன்னை உணரக்கூடிய சக்தி இறைவன் கொடுப்பான். அப்படி வாழ்ந்த நம் முன்னோர்கள், சித்து நிலைக்கு அவர்கள் வரும்போது, தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், கிடைத்த காட்சிகள், தன்னைப் பற்றி அறிந்த உண்மைகள், இந்த இந்து மதத்தில் சனாதன தர்மத்தை கடைப்பிடித்து வாழ்கின்ற மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதை சொல்லிவிட்டு தான் போகிறார்கள்.
அப்படி பட்ட தவநிலையில் இருக்கக்கூடிய சித் புருஷர்கள், தங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பல ஆயிரக்கணக்கான சித்தர்கள், இந்த பூமியில் வாழக்கூடிய உயிர்கள் நன்மைக்காக, அவர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த தவத்தின் பயனால், அவர்களுக்கு கிடைத்த ஞானங்கள் மூலம் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அப்படிதான் திரு. புவன சாமிகள் இவர் ஒரு சாதாரணமாக மனிதரோடு மனிதராக வாழ்ந்து, சினிமாத்துறையில் ஈடுபட்டு, பிறகு இறைவனை தேடும்போது ,அவருடைய அனுபவங்கள் ஆத்ம ஞானத்தின் வெளிப்பாடு தான் இந்த உண்மைகள்.
உடலோடு! உடல் சேர்ந்து உடலாகி,
உடல் வளர்ந்த பின் உடல் தேடி
உடல் மகிழ்ந்து உடல் சலித்து
உடல் தர்மம் அறிந்து
உடல் உட் பொருள் புரிந்து
பொய் உடல் விளக்கி
உள் உடல் ஒளியாகி
பரம்பெரும் அறிவாகி
சொல் உடல் சுருங்கி
சோற்றுடல் அகற்றி
மால் உடல் பெற்று
மன உடலாகி
கனல் உடல் ஏற்று
கதிர் உடல் சுடராகி
எதிர் உடல் எமக்கில்லை
ஏற்று உடல் தாம் பெற்று
ரச உடல் ரசித்து
ராக உடலானது ரகசியமற்றது.
திரு.புவன சாமிகள்.