இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது.

ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போதும் ஆட்சியாளர்கள் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள்.

மத்திய அரசு இதற்கான என்ன நடவடிக்கை எடுக்கிறது? என்பது தெரியவில்லை. மாநில அரசு இதற்கான நடவடிக்கை என்ன எடுக்கிறது ?என்பதும் தெரியவில்லை.

இன்று அதிக வெயில் எதனால்? என்பதை மக்கள் சிந்திக்கவில்லை. அதேபோல் மழை ,புயல், வெள்ளம், சுனாமி ,பூகம்பம் ,போன்ற இந்த இயற்கையின் சீற்றங்கள் எதனால்? என்பதும் புரிந்து கொள்ளாத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,

இயற்கை! மனித வாழ்க்கை எவ்வளவு சுயநலமானது ?மனசாட்சி இல்லாதது? என்று இந்த மக்களின் எண்ணங்களை, இயற்கை புரிந்திருக்கிறது.

விஞ்ஞான வாழ்க்கையின் சொகுசுகளை பற்றி தான் சிந்திக்கிறார்களே ஒழிய, இயற்கையின் அழகை ரசிக்கவும், இயற்கையோடு ஒட்டி வாழவும், அதனுடைய அருமை, பெருமைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், மனித பண்புகள், குணங்கள், எல்லாவற்றையும் இழந்து பணம் ,அதிகாரம், புகழ் ,பேராசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதைக் கூட அடைய, சட்டத்துக்கு புறம்பாக, மனசாட்சிக்கு புறம்பாக, இதை அடைகிறார்கள் .

ஆனால், இந்த இயற்கையை போற்றுகின்ற மக்களும், அதை ஒட்டி வாழுகின்ற மக்களும், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்பவர்களும், எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாலும், அவர்களிடம் சந்தோஷம், நிம்மதி, இருக்கிறது.

மேலும்,இயற்கையின் அழகை ரசிக்க தெரிந்தவன் கவிஞன், கலைஞன். அவன் படைப்பில் இயற்கை அவனைப் பாராட்டுகிறது.

இயற்கை அவனை வாழ்த்துகிறது. அப்படிதான் பழங்கால கவிஞர்கள் ,கலைஞர்கள் ,வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய கலைஞர்கள் ,கவிஞர்கள் என்று சொல்பவர்கள் ,பணத்திற்காக அதை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இது விஞ்ஞான உலகம்.!அதே மெய் ஞான உலகத்தில், ஞானிகள், சித்தர்கள், மகான்கள் ,யோகிகள், இவர்களெல்லாம் இந்த கலியுகத்தில் மனிதன் எப்படியெல்லாம் வாழ்கிறான்? போலியான வாழ்க்கையில் !போலியான பெருமையில் !போலியான புகழில் !தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதற்கு உதாரணம்,

இந்தப் போலிய அரசியல்! போலி பத்திரிகைகள், அதனுடைய விளம்பரங்கள், மனிதனுக்கு நிரந்தரமானது அல்ல. இது அவனையே அவன் ஏமாற்றிக் கொள்ளும் வேலை. ஆனால், உலகில்,

உண்மை என்றுமே அழிவதில்லை .அது நிரந்தரமானது. போலிகள் கொஞ்ச நாளைக்கு புகழின் உச்சியில் நின்று கொண்டு, பிறகு இருக்கும் இடம் தெரியாமல், அழிந்து போவார்கள் .

அதுதான் இன்றைய அரசியல் புகழ், பத்திரிகை புகழ் ,சினிமா புகழ், இவை அத்தனையுமே இன்றைய புகழின் உச்சம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நாளை அவர்கள் யார் ?என்று தெரியாது.

இப்படிப்பட்ட ஒரு நிலைமை எதனால்? அரசியலில் உண்மை இல்லை. நேர்மை இல்லை, நீதி துறையில் உண்மையில்லை. நேர்மையில்லை, பத்திரிக்கை துறையில் உண்மையில்லை, நேர்மையில்லை .அரசாங்க நிர்வாகத்தில் உண்மையில்லை, வெளிப்படைத் தன்மையில்லை .

சட்டத்தை ஏமாற்றுவது ,நீதியை ஏமாற்றுவது, மனசாட்சி ஏமாற்றுவது, தர்ம சிந்தனைகள் இல்லாமல் வாழ்வது, துரோகமே வாழ்க்கையாக வாழ்வது, இப்படி போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மனிதன் பணமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு ஏமாந்து கொண்டிருப்பது,

இவை அத்தனைக்கும், இயற்கை என்ன செய்வது? என்று தெரியாமல், அதற்கு புரியாமல் இல்லை. இயற்கை தான் கடவுள். கடவுள்தான் இயற்கை. இந்த கடவுள் எப்படி இருப்பார் ?என்று யாருக்கும் தெரியாது . அது எந்த ரூபத்தில் தண்டிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இன்றைய மந்திரிகள் இப்படியெல்லாம் நாம் சட்டத்தின் பிடியில் சிக்கி சிறைக்கு செல்வோம் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதுதான் கடவுள்.

ஆனால், அந்த கடவுளை, சிலை வடிவில், நாம் கடவுளாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுவும் தவறு இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை.மேலும்,

ஒரு பக்கம் கடவுளுக்கு உருவம் இல்லை அருவமும் இல்லை என்று சித்தர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கடவுள், மனிதன் செய்கின்ற தவறுகளை பற்றி தெரியாதா? இந்த உலகத்தில் கடவுள் இல்லாத இடமே இல்லை. அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கிறார்.

ஆனால், அதை புரிந்து கொள்ள தகுதி இல்லாத மக்கள்தான் ,கடவுள் எங்கே இருக்கிறார் ?எங்கே இருக்கிறார்? என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து அரசியலும், செய்கிறார்கள்.

தவிர, அரசியலுக்கும் ,கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?இப்படிப்பட்ட மக்கள் பணத்திற்காக மனசாட்சி இல்லாமல் வாக்களிப்பது, மனசாட்சி இல்லாமல் பேசுவது, மனசாட்சி இல்லாமல் துரோகம் செய்வது ,இவை அத்தனைக்கும் இயற்கை இன்று தண்டனை கொடுப்பது, உறுதியாக இருக்கிறது.

ஏனென்றால், இவர்கள் உண்மையை அலட்சியம் செய்கிறார்கள். உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகளை கூட ஏளனமாக பேசுகிறார்கள். அதனால், இதற்கான காலங்கள் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையும் அவ்வப்போது, வந்து புயலாகவும், வெள்ளமாகவும், எச்சரிக்கை செய்துவிட்டு தான், போகிறது. அப்பவும் இந்த மக்கள் திருந்தவில்லை. மேலும்,

அதிகாரம் ,பதவி, பணம் இது மூன்று மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு சந்தோஷம் ,என்பது எங்கே? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி எங்கே? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். நோய் ஒரு பக்கம் அவர்களை வாடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் டென்ஷன், நிம்மதியற்ற நிலைமை, இது எல்லாம் அவர்களை மற்றொரு பக்கம் புரட்டிப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இதையெல்லாம் இல்லை என்று மறுத்தாலும், அவரவர் மனசாட்சிக்கு இந்த உண்மை தெரியும். மேலும், ஆட்சியாளர்கள், இயற்கையை புரிந்து, நீர்நிலைகளை பாதுகாப்பது, காடுகளை பாதுகாப்பது, மண் வளத்தை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பது ,இவையெல்லாம் இயற்கைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமை.

இனிமேலாவது இந்த கடமையை மத்திய அரசும், மாநில அரசும், மக்களும் ,ஒழுங்காக செய்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *