ஈரோடு அருகே அரசு பேருந்துக்கும் ,தனியார் பேருந்துக்கும் இடையே போட்டா போட்டியில் – விபத்து.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் பயணங்கள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஈரோடு:
நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ஈரோடு–பவானி வழியாகச் சென்ற அரசு பேருந்து (TN 33 N 3052) மற்றும் தனியார் பேருந்து ABS (TN 20 BD 7315) முந்தும் போட்டியில் ஈடுபட்டன.

அந்த நேரத்தில் தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பக்கவாட்டை மோதியதில், அதன் பக்கக் கண்ணாடி சிதறி சேதமடைந்தது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு மற்றொரு அரசு பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தப் பாதையில் இவ்வாறான பேருந்து போட்டிகள் அடிக்கடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த மாதம் இதே வழியில் ஒரு தனியார் பேருந்து சாலை ஓரத்தில் மோதி, முன் கண்ணாடி உடைந்த சம்பவமும் இடம்பெற்றது. அப்போது பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்:
“இவ்வாறான பேருந்து போட்டிகளால் எப்போது பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் தெரியாது. காவல்துறை இந்த சம்பவத்தில் தக்க நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது பணம் வாங்கி வழக்கை மந்தமாக்கிவிடுவார்களா?”

– கோபிநாத். அ,
ஈரோடு மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *