கரூரில் விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுத்த திமுக! விஜய்க்கு வெட்டப்பட்ட குழியில், தானே விழ வேண்டிய நிலைமையா ? – பொதுமக்கள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நடைபெற்ற உயிரிழப்பு திட்டமிட்டு சதி என்று மக்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசத் தொடங்கிவிட்டது. ஆனால் திமுக ஊடகங்களும் ,ஐடி விங்கும் என்னதான் அவர்களுக்கு சாதகமாக மக்களிடம் செய்திகளை சொன்னாலும் ,மக்கள் நம்புவதாக தெரியவில்லை.

ஒரு பக்கம் சோசியல் மீடியாவில், இது செந்தில் பாலாஜியின் திட்டமிட்ட படுகொலை என்று தெரிவிக்கிறார்கள்.காரணம்,அந்த இடத்தில் பவர் கட் ஆன பிறகுதான் ,சம்பவம் அரங்கேறுகிறது. ஆனால், திமுக தரப்பில் பவர் கட்ட ஆகவில்லை என்று சொல்கிறார்கள்.

அடுத்தது அந்த மக்கள் மீது ஸ்பிரே அடித்து ,மயக்கத்தில் விழுந்த போதுதான் ,ஒரு கும்பல் மக்கள் மீது தள்ளு முள்ள ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, மயங்கி விழுந்த மக்கள், ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு, அவர்களை பிணமாகத் தான் கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள். மேலும்,

மருத்துவம் தெரிந்த சில டாக்டர்கள், உயிரிழந்தவர்கள் யாரும் இதய நோயாளிகள் கிடையாது. அவர்களுக்கு ஹார்ட் பங்க்ஷன் சிகிச்சை கொடுத்து இருக்க வேண்டும். அதில் பல பிழைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இது ஒரு புறம் என்றால், அங்கு இறந்தவர்கள் எல்லா தரப்பு வயதினரும் இருந்திருக்கிறார்கள். இறந்தவுடன் இரவோடு, இரவாக முதல்வர் ஸ்டாலின் ஒரு மணிக்கு எல்லாம் தனி விமானத்தில் அங்கு வந்து சேருகிறார்.

செந்தில் பாலாஜியும் ,அன்பில் மகேஷ்ம், அந்த இடத்தில் நடித்த நடிப்பு சோசியல் மீடியாவில், பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வந்து உயிரிழந்தவர்களுக்கு மாலை அணிவித்து ,மரியாதை செலுத்திய உடன் 10லட்சம் அறிவித்தார். இது எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா? அந்த அளவிற்கு ஒவ்வொன்றும் அவ்வளவு வேகமாக இந்த செயல்கள் நடந்தேறி இருக்கிறது. இதில் மட்டும் ஏன் இவ்வளவு வேகம்? இதுதான் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்.மேலும்,

இந்த உண்மைகள் எல்லாம் ஆதாரத்துடன் சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகள் வெளிவந்தால் தான் 100% இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி வேலையா? என்பது ஊர்ஜித படுத்த முடியும். அதுவரை இந்த சம்பவம் ஆளுக்கு ஒரு கருத்து தான் .

இது இப்படி இருக்க, இந்த சம்பவத்தில், திமுக எதிர் பார்த்த அரசியல் நடக்கவில்லை. அதற்கு மாறாக, மக்கள் மத்தியில் இந்த சம்பவம் ஏதோ ஒரு சூழ்ச்சியால், இது நடத்தப்பட்டுள்ளது என்பதுதான் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் தகவல்.

இது ஒரு வேலை திமுக இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய நினைத்தது, அதற்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது. அதாவது மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் வந்து பார்த்தது ,10 லட்சம் அறிவித்தது, மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னது இவை அத்தனையும் எடுபடாமல் அவர்களுடைய சுயரூபம் இதுதானா? என்று தான் இன்று பேசப்பட்டு வரும் நிலை.

மேலும், விஜய் வந்து அந்த மக்களை சந்திக்கவில்லை .அவர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. இதையெல்லாம் வைத்து இவர்கள் அரசியல் செய்தாலும் ,அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. இப்படி ஒவ்வொன்றும் திமுகவுக்கு அவர்கள் விவரித்த வலையா? வீழ்ந்தது திமுகவா?

தமிழக வெற்றி கழகத்தின் விஜய்க்கு அரசியல் பின்னடைவு என்றாலும், மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பும், இந்த சம்பவம் ஏற்படுத்தவில்லை. மேலும், திமுக சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க என்னென்ன வேலைகள்? செய்ய முடியுமோ, அதை அத்தனையும் செய்து வருகிறது.

இதில், மத்திய அரசு சிபிஐ விசாரணையில் ,இறங்கி இருப்பதால், இவர்களுடைய எதிர்பார்ப்பு நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *