அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து , உரிய அனுமதி பெறாமலும், ஏராளமான கடைகள் இருந்தன.
.jpeg)
இவற்றை அகற்றுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மனிஷுக்கு புகார் போனது.இந்நிலையில் ஆணையாளர் உத்தரவின்படி, ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து, பொது-மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடை, ஜூஸ் கடை, செருப்பு கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, கம்மங்கூழ் கடை உள்பட, 25க்கும் மேற்பட்ட கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி வணிக வளாக நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்களையும் அகற்றினர். பூக்கடைகள் முன் போட்டிருந்த டேபிள், நாற்காலி, எலக்ட்ரானிக்ஸ் கடை முன் நிறுத்தப்பட்ட பேட்டரி ஆட்டோவையும் அப்புறப்படுத்தினர்.