நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram

கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளுக்கான, விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி, 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள், ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது.

ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த, 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த, 8,௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.தடகள போட்டி, 43 பிரிவுகளில், 14, 17, 19 வயது என நடக்கிறது. மாணவிகளுக்கு இன்று முதல் ௮ம் தேதி வரை, மாணவர்களுக்கு, ௯ம் தேதி முதல், 11ம் தேதி வரை போட்டி நடக்கிறது. பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு களிக்க ‘கேலரி’, குழு போட்டிகளுக்கான மைதானமும் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாணவ,மாணவிகள் பாதுகாப்புடன் தங்க வைக்க, 15 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.