
தமிழ் வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இது தமிழ் நாட்டு மக்களுக்கும்,தமிழுக்கும் கிடைத்த பெருமை.

மேலும், உச்சநீதிமன்றத்தின் 23 வது , கருத்தரங்கமான இது ,ஐ.எல்.ஐ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “சிலம்பு சொல்லும் நீதி” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார்.
மேலும்,இவ் விழாவில் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவர் நீதியரசர் கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினர்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள் டி.ராஜா,எஸ்.நாகமுத்து,ஏ.எஸ்.ஜி வெங்கட்ராமன்,பத்ம ஶ்ரீ எஸ்.வைத்தியநாதன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும்,விழாக் குழுவின் செயலாளர் வழக்கறிஞர் அறிவழகன்,பொருளாளர்.அரவிந் ,இணைப் பொருளாளர் சுப்பிரமணியம், மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பத்மநாப ராஜா, சத்தியப் பிரியா ஆகியோர் விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தனர்.