கட்சியின் அதிருப்தி சீனியர்களை ஒன்றிணைக்கும் செங்கோடையன்! ஜுரத்தில் எடப்பாடி பழனிசாமி .

இவர் எப்படி அதிமுகவுக்கு உரிமையாளராக முடியும் ?என்பது தான் கட்சியினுடைய சீனியர்கள் மனசுக்குள்ளே வேதனையும், போராட்டமும், நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ,செங்கோட்டையன் சரியாக காய் நகர்த்திருக்கிறார். பிஜேபியின் முக்கிய புள்ளிகளை அணுகி இவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். யாரையும் மதிப்பதில்லை . இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சூழ்நிலையில் பிஜேபி மேலிடம் செங்கோடையினை டெல்லி மேலிடம் அழைத்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி. மேலும் இவர்,
,தன்னிச்சையான முடிவு எடுக்கும் ஜெயலலிதாவோ, எம் ஜி ஆர் போல் , எடப்பாடி பழனிசாமி எடுத்தால் சீனியர்கள் யார் ஏற்றுக் கொள்வார்கள்? மேலும்,

இந்த கட்சியில் ஆரம்பத்தில் உயரத்தில் இருந்தவர்கள், இதை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை. யாரெல்லாம் சீனியர்களை கிட்ட வைத்து விட்டால், நம்மை பள்ளத்தில் தள்ளி அவர்கள் மேலே ஏறிட போகிறார்கள்? என்ற ஒரே நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி எல்லோரையும் தனக்கு அல்லது தன்னைவிட உயர்வாக உள்ளவர்களை, அதாவது கட்சியின் சீனியர்களை சசிகலா ,ஓ பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரன் ,செங்கோட்டையன் ,இவர்களையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டார்.

இதனால் கட்சி என்ன ஆகும்? அது கட்சிக்கு மைனஸ் ஆப் பிளாசா என்று கூட யோசிக்கவில்லை. இவர் வந்த வரைக்கும் கட்சியை நடத்திக் கொண்டு போகலாம். ஜெயித்த வரைக்கும் லாபம். ஸ்டாலினே கூட முதலமைச்சராக வந்தாலும் பரவாயில்லை ,நமக்கு எதிர்கட்சி கிடைத்தாலும் ஓகே ,இந்த நினைப்பில் தான் எடப்பாடி பழனிசாமி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால்,

பிஜேபி திமுகவை 2026 இல் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஒரு கங்கணத்தைக் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம், பிஜேபியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இன்னொரு பக்கம் காங்கிரஸ்க்கும் ஆதரவாக இவர்கள், நமக்கு பயன் அளிக்கவில்லை என்றால் ,அங்கே சேர்ந்து கொள்ளலாம். இல்லையென்றால் விஜய் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். இப்படி மனம் போன போக்கில் இவருடைய அரசியல் போய்க் கொண்டிருக்கிறது.மேலும்,

பிஜேபி எடப்பாடி நல்ல முறையில் கூப்பிட்டு பிரிந்து சென்றவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து கட்சியை பலப்படுத்தினால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்று பலமுறை பஞ்சாயத்தும் சொல்லிப் பார்த்தது ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை கேட்பதாக இல்லை .

காரணம் ,அவருடைய சுயநலம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் ,இந்த நாலு பேர் வந்தால் நாம் சீட்டை விட்டு ,கீழே இறங்கி விட வேண்டியது தான் ,அந்த பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்து விட்டது. அதனால் அவர்களை சேர்க்கக் கூடாது என்ற ஒரு முடிவிலே அவர் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால்,

தென் மாவட்டங்களில் அதிமுக நிச்சயம் பலம் இழந்து விடும். ஏற்கனவே பலம் இருந்திருக்கிறது. இப்போது இவங்களுடைய இந்த விவகாரம் அதிக பலத்தை இழக்கும். இதற்காக பிஜேபி ஒரு பக்கம் பஞ்சாயத்து செய்து பார்க்கும் அதற்கு எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால், இந்த நால்வரும் சேர்ந்து ஒரு கட்சி கூட்டணியை அமைத்து விடுவார்கள்.

அவர்கள் பிஜேபி பக்கமும் இருப்பார்கள். இங்கே எடப்பாடி பழனிசாமி தனித்து நின்றால், இவர் ஜீரோ. எடப்பாடி பழனிசாமிக்கு என்று ஒரு பேஸ் வேல்யூ கிடையாது. அதிமுக இந்த தேர்தலில் அதிக இடங்களில் மண்ணைக் கவ்வும்,
பிஜேபியின் பஞ்சாயத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக் கொண்டால் தப்பித்தார். இல்லையென்றால் இரட்டை இலை சின்னம் கூட இருக்காது. எல்லா வேலைக்கும் பிஜேபி தயாராகிவிட்டது. இறுதியில் எடப்பாடி பழனிசாமியை நிற்கதியாக நடுரோட்டில் நிற்க வைத்து விடுவார்கள். இனிமேல் எடப்பாடி பழனிசாமியின் திறமை வேலைக்காகாது. ஆதரவாளர்கள் புரிந்து கொண்டால் சரி.