
ஏர்போர்ட் மூர்த்தி உண்மையான பறையர் சமூகத்தின் அடையாளம். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இவர் புரட்சித் தமிழகம் என்ற ஒரு நடத்தி வருகிறார்.முனைவர் பட்டம் பெற்றவர். நியாயமான கருத்துக்களை பேசக்கூடியவர். உண்மைகளை வெளிப்படையாக பேசுபவர்.

அதனால்தான் திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. திருமாவளவன் யார்? என்பதை பட்டியல் சமூகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. அவர் உண்மையான பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஜாதகத்தை வெளியில் கொண்டு வந்து விட்டார். இவர் தெலுங்கு செக்லி. மேலும், திருமாவளவன் பேசுகிற பேச்சு, அந்த சமூகத்திலே நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல,

திருமாவளவன் இந்த சமூகத்தை நன்றாக பயன்படுத்தி வளர்ச்சி அடைந்து விட்டார். அதாவது பல ஆயிரம் கோடி சொத்துக்களை சேர்த்துக் கொண்டார். ஒரு பக்கம் திமுகவுக்கு கூட்டணியாகவும், ஆதரவாகவும் அவருடைய அரசியல் போய்க்கொண்டிருக்கிறது. இங்கே திமுக என்ன தவறு செய்தாலும் ,அதற்கு முட்டுக் கொடுக்கும் வேலை விடுதலை சிறுத்தைகளுக்கும் ,திருமாவளவனுக்கும் உண்டு. அந்த அரசியல்,எல்லோரும் அதை செய்து கொண்டிருப்பார்களா? இல்லை அதை ஏற்றுக் கொள்வார்களா?

தவிர ,எங்களை விட உத்தமர்கள் யாரும் இல்லை என்று வேஷம் போட்டுக் கொண்டிருந்தால், உன்னுடைய உத்தம வேஷத்தை எங்கே என்று கேள்வி கேட்பவர்கள் இருப்பார்கள்? அதில் ஒருவர் தான் ஏர்போர்ட் மூர்த்தி, இந்த ஏர்போர்ட் மூர்த்தி திமுகவையும் தாக்கி பேசி வருகிறார். திருமாவளவனையும் தாக்கி பேசி வருகிறார். இது அரசியல் ரீதியான போட்டி! என்றாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி பேச வந்த ஏர்போர்ட் மூர்த்திக்கு, விசிகவினர் டிஜிபி அலுவலகம் முன்பே அவரை தாக்கியுள்ளனர்.மேலும்,
இதுதொடர்பாக ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கூறும்போது, ‘‘விசிகவைச் சேர்ந்த கூலிப்படையினர் 8 பேர் திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தினர். நான் என்னை தற்காத்துக் கொண்டேன். திருமாவளவனின் பட்டியலின சமூக விரோதப் போக்கை நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று 2 முறை போலீஸில் புகார் அளித்தேன்.

அதற்கு போலீஸார், ‘நிலைமை சரியில்லை, நீங்கள் பார்த்து இருந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டனர்.காவல்துறைக்கும்,அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். இங்கே தவறு செய்தது யார்? என்றால் காவல்துறை தான்.
நீதிமன்றத்தின் சட்டம் காவல்துறைக்கு என்ன வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது ? அதைக் காவல்துறை இன்று வரை அலட்சியம் செய்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் சட்டத்தின்படி கைது நடவடிக்கையின் போது பின்பற்றுகிறார்களா?இது பற்றி சட்டபூர்வமாகவே ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் நிச்சயம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
தவறு செய்யாமல் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தது தவறு. மேலும்,ஏர்போர்ட் மூர்த்தியை அடித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். ஆனால், அவர் மீது கொலைக்குற்றவாளி புகார் கொடுத்தால் ,அரசியலில் பழிவாங்க எந்த புகார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படிப்பட்ட புகாரின் மீது இவர்கள் எஃப் ஐ ஆர் போட்டு கைது செய்து விடுவார்கள்.
What is law? சட்டம் என்ன சொல்கிறது? உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் என்ன சொல்கிறது? இதையெல்லாம் காவல்துறை, இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல், இவர்களாக ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி கீழ்மட்ட நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது தான் மிகப்பெரிய தவறு.மேலும்,

ஒருவரை (ரிமாண்ட் )கைது செய்வதற்கு முன் கீழ் மட்ட நீதிமன்றம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி நீங்கள் கைது செய்தீர்களா? என்னென்ன கேள்விகள் கேட்டீர்கள் ? குற்ற பின்னணி என்ன?என்ன ஆய்வு செய்தீர்கள்? அதற்கான ஆதாரம் என்ன? என்பதை ஒருவரை கைது செய்யும் முன் இதையெல்லாம் கேள்வி கேட்டு இருக்க வேண்டும். அது பற்றி கீழ் மட்ட நீதிபதிகள், கண்டு கொள்ளாமல், காவல் துறையின் எஃப் ஐ ஆர் அப்படியே அதற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள். இது காவல்துறையும் இல்மட்ட நீதிபதிகளும் செய்யும் தவறு தன் இங்கே அதிகம். இதற்கு உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் செக் வைக்க வேண்டும்.மேலும்,

தவறான முறையில் சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு ,அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு ,காவல்துறை அரசியல்வாதிகளின் எடுப்பு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதற்கு உங்களுக்கு மக்களுடைய வரிப்பணத்தில் எதற்கு சம்பளம் ?மக்களின் பாதுகாப்பை நீங்கள் யாராக இருந்தாலும் ,அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.
தவிர,இன்று திமுக ஆளும் கட்சி ,நாளைக்கு எதிர்கட்சியாக மாறலாம். அதே நிலைமை திமுகவுக்கு வரலாம். விடுதலை சிறுத்தைக்கும் வரலாம். அப்போது இவர்களை இதே போல் எஃப் ஐ ஆர் போட்டு உள்ளே தள்ளுங்கள் என்றால், நீங்கள் தள்ளக்கூடாது. சட்டப்படி ,சட்டத்தின் பாதுகாப்பை ஒவ்வொரு குடி மக்களுக்கும் ,காவல்துறை அதிகாரிகள் பணி அவசியம் தேவையானது. ஆனால், அது அதிகாரத்திற்காக சட்டம் வளைந்து விடக்கூடாது.மேலும்,
எது நியாயமோ ,எது சட்டமோ ,அதை தான் காவல்துறை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் அரசியல்வாதிகளின் எடுப்பாக வேலை செய்வதற்கு உங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் நீங்கள் சம்பளம் வாங்கவில்லை. இதை நேர்மையான காவல்துறை அதிகாரிகள் புரிந்திருப்பார்கள். குறுக்கு வழியில் பதவிக்கு அலைபவர்கள், பதவி உயர்வுக்கு அழைப்பவர்கள், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி சொத்துக்களை சேர்த்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் தான் எந்த வேலை சொன்னாலும், எடுப்பு வேலை செய்து கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே நடக்கின்ற ஒரு பெரிய அரசியல். இது ஒரு பக்கம் !
மற்றொரு பக்கத்தில், இந்த கைதுக்கு பின்னால், பட்டியல் இன சமூகத்தில், ஏர்போர்ட் மூர்த்திக்கு செல்வாக்கு நிச்சயம் உயரும். இது திமுகவுக்கு பின்னடைவு என்பது எப்போது தெரியும்? என்றால், பட்டியல் இன சமூகத்தில் பணத்தை கொடுத்து, சரி செய்ய எல்லாரையும் விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கும் போது தான் புரியும். அது மட்டுமல்ல, ஏர்போர்ட் மூர்த்திக்கு எல்லா சமுதாயமும் அவர் மீது நல்ல ஒரு அபிப்பிராயத்தையும் கருத்தையும் தான் சொல்கிறார்கள். ஆனால் திருமாவளவன் மீது அனைத்து சமுதாயமே நல்ல பெயரோ அல்லது கருத்தோ சொல்லவில்லை. இது ஏர்போர்ட் மூர்த்திக்கு லாபம் திருமாவளவனுக்கும், திமுகவுக்கும் நஷ்டம் தான்.