
நாட்டில் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு தரமான அரிசியை பாரத் அரிசி திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தற்போது, மக்களுக்கு அரிசி விலை உயர்வு கடும் சுமையாக தான் உள்ளது. அதை இத்திட்டத்தின் மூலம் மக்கள் குறைத்துக் கொள்ள முடியும் .
இது நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கூட்டுறவு கடைகளில் இந்த விற்பனையை ஆரம்பிக்க உள்ளது இது தவிர அமேசான் flipkart போன்ற இணையதள நிறுவனங்கள் மூலமாகவும் மக்கள் இதை வாங்கி பயன்பெறலாம் .

இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 க்கு தரமான அரிசியை மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளது இந்த அரிசி ஐந்து கிலோ பேக்காகவும் 10 கிலோ பேக் ஆகவும் விநியோகிக்க முடிவு செய்துள்ளது இது தவிர நடமாடும் வாகனங்களில் இந்த விற்பனை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது ஏழை எளிய மக்கள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
