ஒரு அரசியல் கட்சி தலைவர் என்றால்! எப்படியும் பேசலாமா? அல்லது அரசியல் கட்சியில் இருப்பவர் என்றால்! எதை வேண்டுமானாலும் பேசலாமா? – தமிழ்நாட்டு கார்ப்பரேட் விளம்பர ஊடகங்கள் அதை அப்படியே போடுவார்கள் இல்லையா? அந்த தைரியம் வைகோவிற்கா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மதிமுக வைக்க சொல்கிறார், தவெக அரசை அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். அதாவது இந்த ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை. அதனால் ,அதிகாரிகள் தமிழக வெற்றி கழக அரசை சீர்குலைத்து விடுவார்களா?

மேலும்,இந்த இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் விளம்பர ஊடகங்களும் ,அப்படியே அவர்கள் சொல்லுவது உண்மை என்று அப்படியே சொல்லிக் கொண்டிருப்பதால், இப்படிப்பட்ட படித்த முட்டாள்கள் பேசிக் கொண்டிருப்பது , அரசியல் மக்களை முட்டாளாக்கும் வேலை அல்ல ஊடகங்கள் வேலை.

மேலும்,திமுக கூட்டணியில் இருந்த இதே வைகோ, ஸ்டாலின் அடித்த கொள்ளை பற்றி ஏன் பேசவில்லை? ஊழல் பிரச்சனைகள் நீதிமன்றத்தின் வரை சென்ற பிறகு கூட இவருக்கு தெரியாமல் போய்விட்டதா அது ?இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை அதிகாரிகள் லஞ்ச ஊழலால், சீர்குலைப்பதாக பேசுகிறார். அது இமயமலை சாதனையாக கூட இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரியாக கூட இருக்கட்டும் .அவர்கள் சில கோடிகளை ஊழல் செய்திருக்கலாம், இல்லது சில ஆயிரங்களை ஊழல் செய்திருக்கலாம் ,அல்லது சில லட்சங்களை செய்திருக்கலாம்.

ஆனால் மந்திரிகள் ,எம்எல்ஏக்கள் ,எம்பிக்கள் ,உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இவர்கள் கொள்ளை அடித்தது போல், எந்த அதிகாரியாவது கொள்ளை அடித்திருக்கிறார்களா? அப்படி அடித்தால் ,அது வெளியில் நிச்சயமாக வந்துவிடும். வராமல் இருக்காது.

ஒருவர் இல்லை என்றால் , மற்றொருவர் அவரைப் பற்றி ,போட்டுக் கொடுத்து விடுவார். ஏனென்றால், இவ்வளவு பெரிய தொகை ,இவர் ஒருவரே எடுத்துக் கொண்டு போய் விடுகிறார் .நமக்கெல்லாம் பங்கு வரவில்லையே என்று, நிச்சயமாக அது வெளிவந்து விடும்.

ஆனால், மந்திரிகள் ,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் ,இவர்கள் கொள்ளையைப் பற்றி ஏன்? இவர்கள் பேச மறுக்கிறார்கள்? ஏனென்றால் இவர்கள் ஊழல் பற்றி எப்பவாவது எப்படி பேசுவார்கள்? என்றால், எதிர்க்கட்சி ஊழல் செய்தது பற்றி தான் பேசுவார்கள். தான் செய்த ஊழலை இன்னொரு எதிர்க்கட்சி பேசிக் கொண்டிருப்பார்கள் .

மேடையில் இதை தான் மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரே அடியாக என்ன சொல்கிறார் என்றால், இந்த ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால், அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை சீர்குலைப்பதாக தெரிவிக்கிறார்.

இது எப்படி இருக்கிறது என்றால்! பெண்கள் கிராமங்களில் சண்டை போட்டுக் கொள்வார்கள் .அது இங்கே சொன்னால் ,அது அசிங்கமாக இருக்கும் .அது தேவையில்லை என்று நினைக்கிறேன் .

அது போல, இவர் பத்தினி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு, இந்த போலி அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் இன்னும், அரசியலை படிக்காத வரை இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகள் நாட்டில் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.

மேலும்,ஊழலைப் பற்றி இவருக்கு என்ன பேச தகுதி இருக்கிறது? இவரைப் பற்றி ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பல பேசியிருக்கிறது. இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கி இருக்கிறார்?

செங்கல்பட்டு அருகில் கூட நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்கள் வாங்கியதாக தகவல் வெளியானது. இப்படி எல்லாம் இருப்பவர்கள், அதிகாரிகள் கொள்ளையடிக்க முடியாது. ஏதோ கொடுத்தால், சிலர் வாங்குவார்கள். இல்லையென்றால் ,அவர்களும் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால், உத்தமர்கள் மாதிரி பேசிவிட்டு, அரிச்சந்திரன் மாதிரி பேசிவிட்டு, தமிழ்நாட்டு மக்களை இப்படியெல்லாம் அரசியல்வாதிகள் ஏமாற்றக் கூடாது .மக்களே இனி இந்த பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *