ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க, நாமக்கல் கலெக்டர் உமா அழைப்பு .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும், ‘காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி – 2024’, கடந்த ஜூலை, 27ல், ராமேஸ்வரத்தில் துவக்கப்பட்டது.

இம்மாதம், 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட, 8 மாவட்டங்களில், காவிரிக்கரையின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., தொலைவிற்கு நடக்க உள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் நெடும் பணி தொடர உள்ளது. ஒவ்வொரு பஞ்.,லும், குறைந்தது, 1,500 விதைகளை சேகரித்தல் மற்றும் நடவு செய்ய வேண்டும். இதில், தன்னார்வலர்கள் பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர். பங்கேற்க விரும்புவோர், udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஒரு கோடி பணி விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *