நாட்டில் அரசியல் தெரியவில்லை என்றால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி மக்களை குழப்புவது அரசியல் கட்சி தலைவர்களின் முக்கிய வேலையாகி விட்டது. மேலும் ,இந்த கருத்துக்கள் எல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்கள் இடம் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். தெரிந்தவர்கள் திருப்பி கேள்வி கேட்கிறார்கள்.
தெரியாதவர்கள் இந்த பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து, நம்புபவர்களும் அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதும் ,அரசியல் கட்சியினரின் இன்றைய சுயநல அரசியல். பொதுநல அரசியலில் இவை எல்லாம் தேவையற்றது. ஏனென்றால், அரசியலுக்கும் ,மதத்திற்கும் சம்பந்தமில்லை .
மேலும், பிஜேபி ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்து நாட்டு மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்காகத்தான் இப்படி ஒரு ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. சரி அப்படியே ராமர் கோயில் கட்டியதால் மட்டுமே பிஜேபியை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ? அது ஒரு காலம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி, அதிகாரம் ,செயல்பாடு என்ன ? என்பதை சீர்தூக்கி பார்த்து தான் ,மக்கள் இன்றைய ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள் .இது அரசியல் தெரிந்தவர்களின் நிலைமை.
ஆனால் ,அரசியல் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் ஒரு பக்கம் ஜாதி, இன்னொரு பக்கம் மதம், இன்னொரு பக்கம் பணம், இன்னொரு பக்கம் மது ,இது தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரத்தில் தற்போதைய முக்கிய அங்கம் வகிக்கும் அரசியல் .இதில் படித்தவர்கள் ,அரசியல் தெரிந்தவர்கள், விவரமானவர்கள், இதையெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் .
ஆனால், படிக்காதவர்கள், அரசியல் தெரியாதவர்கள், சுயநலவாதிகள், பொதுநலம் தெரியாதவர்கள், சாப்பிடுவதும், மலம் கழிப்பதும் போன்ற ஆடு, மாடுகளுக்கு உள்ள அறிவு உள்ளவர்கள் ,பணம் கொடுத்தால் அவர்களிடம் வாக்கு பேரம் பேசலாம் .இந்த அளவிற்கு தான் அவர்களுடைய தகுதி. மேலும், தகுதி தெரியாத இந்த கூட்டத்திற்கு அம்பேத்கர் ஓட்டுரிமை கொடுத்து நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார் .
வெள்ளைக்காரன் இந்தியாவை அடிமையாக ஆண்ட போது கூட ,பட்டாதாரிக்கும், படித்தவர்களுக்கும் ஓட்டுரிமை வைத்தான். அதுமட்டுமல்ல, இந்த நாட்டை சுதந்திரம் கொடுக்கும் போது ,இந்த நாட்டு மக்களை ஜாதியாலும், மதத்தாலும், ஆன்மீகத்தாலும், அரசியலாலும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை வைத்து, பிரிவினையை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டான்.
அது இன்றுவரை, அதை வைத்து இந்த ஜாதி கட்சிகள், மதவாத கட்சிகள் இந்த மக்களிடம் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு தேவை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீடும் ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமையும், ஜாதி பாகுபாடுகளையும், மத பாகுபாடுகளையும் பயன்படுத்தி அரசியல் செய்து சுமார் 30 ஆண்டு காலமாக இந்த ஜாதி கட்சிகள், மதவாத கட்சிகள் தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
ஜாதி வேற்றுமைகள் இருந்த காலத்தில் கூட, அரசியல் என்பது நேர்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருந்தது. இப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் கூட, அரசியல் மட்டும் சாக்கடைகளாகவும், ஊழல் நிறைந்தஅரசியலாக இருந்து வருகிறது .இது கட்சியை பற்றி தெரியாதவர்கள். அரசியலைப் பற்றி தெரியாதவர்கள். தெரிந்து கொள்வது அவசியம். அது தெரியாத வரை, இப்படிப்பட்ட அரசியல் நாட்டில் தொடரும்.
மேலும், எந்த சிறுபான்மை மக்களை வைத்து இந்தியா கூட்டணி கட்சிகள், ராமர் கோயில் பிரச்சனையை அரசியல் செய்து வருகிறார்களோ ,அதே ராமர் கோயிலுக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், லக்னோவில் இருந்து அயோத்திக்கு 150 கிலோமீட்டர் நடந்து வந்து ஸ்ரீ ராமன் தரிசனத்தை பெற்றிருக்கிறார்கள் .இப்படி நாட்டில் வெள்ளையர்கள் தான் அடிமையாக வைத்திருக்கும் போது, இந்த மக்களை ஜாதியாலும், மதத்தாலும், ஏற்றத்தாழ்வுகளால் பிளவு படுத்தி, அரசியல் செய்து ஆண்டு வந்தான் என்றால், அதே நிலைமைதான் இன்றைய அரசியல் கட்சிகளும், இந்த மக்களை ஜாதியாலும், மதத்தாலும் பிளவு படுத்தி ஊழல் அரசியலை செய்வதற்கு இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது அரசியல் புரியாதவர்களுக்கு புரியாது. புரிந்தவர்களுக்கு புரியும். புரிந்தவர்கள் இந்த ஏமாற்று அரசியலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் .புரியாதவர்கள் இவர்களிடம் ஏமாந்து கொண்டு ,அற்ப விஷயங்களை பேசி ,இந்த நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு, ஊழலுக்கு, ரவுடிசத்திற்கு முக்கிய காரணமாக ,இந்த அரசியல் கட்சிகள் இருக்கிறது .
இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் இல்லாத கட்சிகளை, மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகளை, ஏதோ ஒரு சின்னத்தில் அதாவது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கொடுக்கின்ற சின்னங்களைப் போல் கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை .