ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram
பொன் மாணிக்கவேல் எஸ்பி ஆக இருந்த காலத்தில் இருந்து, டிஐஜி ஆக இருந்த காலத்தில் இருந்து, ஐஜியாக இருந்தவரை அவர் பணியில் எந்த வித கரப்ஷனோ, அல்லது பனிஷ்மென்டோ அவருக்கு இல்லை . மனசாட்சி உள்ள நேர்மையான அதிகாரி என்று சமூகத்தில் பெயர் பெற்றவர்.
மேலும், இவர் தமிழக சிலை கடத்தல் பிரிவில் சேர்ந்த பிறகு தான் பல ஊழல்கள் வெளிவந்தது. சிலைகளும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டது .இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளுக்கே காவல்துறையில் இப்படிப்பட்ட சிபிஐ வழக்கு பதிவு செய்வது எங்களைப் போன்ற சாமானிய மக்கள், நாங்கள் எல்லாம் சமாளிக்க முடியுமா? என்பது ஒரு வேதனையாக தான் இதை பார்க்க முடிகிறது.
ஏனென்றால், சிபிஐ அவரை விசாரித்து அவர் தவறு செய்தவரா? இல்லையா? என்பதை சொன்ன பிறகுதான் தெரியும். ஆனால், இருப்பினும் இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக வழக்கை பதிவு செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா .
இவருக்கும் ஐஜி பொன் மாணிக்க வேலுக்கும் மோட்டிவ் உள்ளது. பொன் மாணிக்கவேலை எப்படியாவது குற்றவாளியாக காவல்துறையில் பணியாற்றிய கருப்பாடுகள் முயற்சி செய்வதாக தகவல். ஏனென்றால், சிலை கடத்தால் குற்றவாளி யாரை கை காட்டினாலும், அவன் குற்றவாளி தான் .அந்த நிலைமையில் ஐஜி பொன் மாணிக்கவேல் இருக்கிறார். இது ஒரு சிக்கலான வழக்கு தான்.
இருப்பினும், பொன் மாணிக்கவேலின் அவருடைய தகுதி, தனிப்பட்ட முறையில் அவருடைய செயல்பாடுகள், இதுதான் இந்த வழக்கின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். மேலும், இங்கே குற்றவாளிகள் சொல்வதெல்லாம் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவன் பணமே கொடுத்ததாக கூட சொல்வார்கள். ஏனென்றால், அந்த அளவுக்கு இவரை பழிவாங்க துடிப்பதாக காவல்துறை வட்டார செய்திகள்.
மேலும், நல்ல விஷயங்களுக்கு, நல்ல காரியங்களுக்கு, தெய்வ பணிகளுக்கு ஓய்வு பெற்ற பிறகும் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்து வருகிறார். சிலை கடத்தி, அந்த வருமானத்தில் ஒருவர் வாழ்கிறவர் நிச்சயம் இந்த வேலையெல்லாம் செய்ய மாட்டார். அந்த கூட்டமே வேற மாதிரியாகத்தான் இருக்கும். அதனால் இவரை காப்பாற்றுவது நீதிமன்றம் தான் .இவருக்கு நீதி வழங்க வேண்டும் .
மேலும், பொன் மாணிக்கவேலுக்கு மதுரை அமர்வு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதனால், நீதித்துறை இந்த வழக்கில் அவருடைய நேர்மையை தான் முக்கியமாக பார்க்க வேண்டிய வரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர் பணியில் இருக்கும் போது, இவருடைய நடத்தைகள்? பணி ஓய்வு பெற்ற பிறகு இவருடைய நடத்தைகள்? இதுதான் இந்த வழக்கின் முக்கிய முகத்திரமாக இருக்க வேண்டும் .
அது மட்டுமல்ல, டிஎஸ்பி காதர் பாஷா இவர் மீது வழக்கு தொடுக்க வேண்டிய நோக்கம் என்ன? அதுவும் இந்த வழக்கில் முக்கிய கருத்தாக இருக்க வேண்டும். இந்த காதர் பாஷாவுக்கும், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு என்ன? இதை எல்லாம் நீதிமன்றம் முக்கியமாக பார்க்க வேண்டும் என்கிறார்கள்- சமூக ஆர்வலர்கள்.