தமிழ் நாட்டில் 2026 தேர்தலில் யார் முதல்வர் ? ஜோதிடர்களின் ஆய்வு குழப்பத்தில் மக்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதால், ஜோதிடர்களின் வியாபாரம் அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் யூட்யூபில் பல்வேறு ஜோதிடர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதகத்தையும், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தையும், தவெக விஜய் ஜாதகத்தையும், சீமான் ஜாதகத்தையும், பிஜேபியில் அண்ணாமலை, ஜாதகத்தையும், நயினார் நாகேந்திரன் ஜாதகத்தையும், ஆய்வுக்கு உட்படுத்தி பல ஜோதிடர்கள் பல்வேறு கருத்தை கூறி வருகிறார்கள்.

ஆனால்,ஒரே கருத்தை அல்லது ஒரே பலனை எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. இதற்கு காரணம் என்ன? ஜோதிடம் என்பது மறைப்பொருள். அதாவது ஒருவருடைய விதியை சொல்லக்கூடிய ஆற்றல் ,அந்த ஜோதிடருக்கு இருந்தால் மட்டுமே, அதை சொல்ல முடியும். அது ஒரு கடினமான தெய்வீக கலை .

இதை பணத்திற்காக, வியாபாரத்திற்காக ,எதிர்பார்ப்புக்காக பயன்படுத்தினால், எப்படிப்பட்ட ஜோதிட கலையை எந்த முறையில் அவர்கள் பயின்று இருந்தாலும், அவர்களுடைய கணிதம் நிச்சயம் 60% கூட சொல்ல முடியாது.

ஒருவேளை அவர்களுடைய நேரம் நல்லதாக இருந்து ,இவர்கள் சொல்வது ஒரு சில நேரங்களில் நடந்து விடும். அப்போது அது நான் சொல்லி தான் நடந்தது, என்று பெரிய ஜோதிடர்களாக சொல்லிக் கொள்கிறார்கள். மேலும்,

இன்று யூடியூபில் 2026 இல் யார் முதல்வர்? என்று இந்த ஜோதிடர்களின் youtube களை பார்க்கக் கூடிய மக்களுக்கே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது தவிர

ஒரு பக்கம் சோழி பிரசன்னம் போட்டு பார்க்கிறார்கள் அதில் சொல்பவர்கள், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்கிறார்கள். அதேபோல், வேறு சில ஜோதிடர்கள் சோழி பிரசன்னம் பார்த்து, எடப்பாடி தான் முதலமைச்சர் என்று சொல்கிறார்கள்.

இப்படி ஒருவரும் ,ஒரே பலனை சொல்வதில்லை. மாறி ,மாறி சொல்வதில் ,எது உண்மை ?யார் சொல்வது நடக்கும்? யார் சொல்வது நடக்காது ?நடந்தால் தான் அது ஜோதிடம். நடக்கவில்லை என்றால் அது பொய் .அதனால், இவர் சொல்லி இது நடந்தது என்று அறுதியிட்டு சொல்லக் கூடிய அளவில்,100க்கு 99 % எந்த ஜோதிடரும் இல்லை. இதிலே பல்வேறு முறைகளை பார்த்து தான் சொல்கிறார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில், இங்கு வேத ஜோதிடமா? அல்லது பிரசன்ன ஜோதிடமா? அல்லது ஏ எல் பி என்ற அட்சயபத்ததி முறையா? ஓலைச்சுவடி ஜோதிடமா ?எதை நூறு சதவீதம் ஏற்றுக் கொள்வது? நம்பகத் தன்மை இல்லை.

இது தவிர ,பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தனக்கு இந்த முறை எம் எல் ஏ சீட்டு கிடைக்குமா? நான் எம்எல்ஏ ஆவேனா? நான் மந்திரி ஆவேனா? இப்படி எல்லாம் கனவு கண்டு ,கொண்டு இவர்கள் ஜோதிடர்களிடம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலே விஐபி ஜோதிடர்களின் அப்பாயின்மென்ட், இவர்களுக்கு கொடுக்க, மாதக்கணக்கில் காத்து கிடக்கிறார்கள்.மேலும், தமிழ்நாட்டில் மேடையில் கடவுளை திட்டுகிறார்கள். பதவி என்று வரும்போது கடவுளிடம் தவம் கிடக்கிறார்கள். இன்னொ7ரு பக்கம் சீட்டுக்காக எந்த சாமியாரை போய் பார்ப்பது? அவர் ஏதாவது செய்து கொடுப்பாரா? அல்லது யாகம் ஏதாவது நடத்தி, ஜெயிக்க வைப்பாரா? இப்படி எல்லாம் பதவி வெறியர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால், பல போலி சாமியார்களும் ,நன்றாக இவர்களை வைத்து குளிர்காய்கிறார்கள்.

இப்படி எல்லோர் காட்டிலும், 2026 தேர்தலால் பணமழை பொழிகிறது. இங்கே யாருக்கு மெஜாரிட்டி? யார் முதல்வர் ?என்று அரசியல் கட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்த ஜோதிடர்கள் பேசுவதை பார்த்தால் ,இவர்களே முதல்வரை தேர்வு செய்து விடுவார்கள் போல தெரிகிறது.

இவருக்கு எந்த கிரகம் உச்சம் ,அந்த கிரகம் பார்வை, இந்த கிரகம் நீச்சம் ஆகிவிட்டது .இப்படி பல்வேறு கருத்துக்களை சொல்லி, இதை பார்க்கும் மக்களே குழம்பி விடுகிறார்கள். என்னய்யா? இப்படி ஒரு பத்து பேரு எடப்பாடி பக்கம் சொல்கிறார்கள். அப்படி ஒரு பத்து பேர் ஸ்டாலின் பக்கம் பேசுகிறார்கள். இதில் எது உண்மை? எது நடக்கும்? எது நடக்காது?

ஒருவேளை இப்படியும், ஒரு அரசியல்! ஜோதிடர்களே மக்களிடம் செய்கிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும்,ஜோதிடர்களின் ஆய்வு குழப்பத்தை தான் ஏற்படுத்துவதாக அதை பார்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, பதவிக்காக இந்த அதிமுகவில் இருந்து திமுக, திமுகவில் இருந்து அதிமுக, அதிமுகவில் இருந்து தவெக , என ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் நாட்டு மக்கள், இந்த அரசியலும், புரியாமல், அது ஒரு பக்கம் குழப்பம்.இந்த குழப்பத்திற்கெல்லாம்,விடை தெரியாமல், பத்திரிக்கைகள் குழப்பம்.இந்த குழப்பத்தில், ஜோதிட ஆய்வாளர்கள்,

இப்படி மாறி, மாறி சொன்னால் ,யார் சொல்வதை நம்புவது ?யார் சொல்வதை நம்ப முடியாதது ?யார் ஜோதிடர் ?என்ற ஒரு தகுதிக்கு தகுதியானவர்? அவர் சொல்வது இதுவரை ஒன்று கூட பொய்யானது இல்லை, என்று சொல்லக்கூடிய ஜோதிடர் பல கோடிகளில் ஒருவராக இருக்கலாம். அவர் சொன்னது ஒரு வேலை நடக்கும். மீதி எல்லாம் ஜோதிட வியாபாரமா ?

மேலும், தமிழ் நாட்டில் அரசியல் கூட்டணிகளுக்குள் தான் குழப்பம் நீடிக்கிறது என்றால், ஜோதிடர்களின் பலனும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது . எனவே, தமிழ் நாட்டின் அரசியல் பொதுமக்களுக்கு குழப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *