
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவியின் FIR வெளியானதால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் எஃப் ஐ ஆர் எழுதப்பட வேண்டும் என்று கோர்ட் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர, அந்த மாணவியின் கல்வி முடியும் வரை எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் சுமோடோ வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இது ஒரு ஆறுதல் ஆன விஷயம்தான்.