
கூட்டுறவுத் துறையில் ஊழல் அதிகப்படியாக இருப்பதற்கு என்ன காரணம்?
இங்கு பொறுப்புக்கு ஏற்ப படித்த பட்டதாரிகள் இல்லை. எஸ். எஸ். எல். சி தேர்ச்சி பெற்றவரோ ,அல்லது தேர்ச்சி பெறாதவராக , இருந்தால் கூட ,பிரமோஷன் மூலம் அவரும் பதவி உயர்வு பெற்று ,(Bank manager) மேலாளர் ஆகி விடுவார்.மேலும்,
நாட்டில் வங்கி வேலைக்கு படித்த பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு இல்லாத போது, ,இவர்களை அந்த இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும், என்னதான் அனுபவ அறிவு பெற்றாலும், ஒரு Basic knowledge , மற்றும் audit and accounts சம்பந்தமான கல்வி படித்திருக்க வேண்டும். இது தவிர,
பல கோடிகளை பணம் வங்கியில் வரவு ,செலவு பரிவர்த்தனைகள் நடக்கும்போது, அதற்கு அது சம்பந்தமாக படித்தவர்கள் ,மிக, மிகக் குறைவு. இல்லையென்றால் !இத்தனை நாள் வரை, இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால் ,இங்கே அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை, அது பற்றி தெரியாது. இதை தான் சொல்லி வந்துள்ளார்கள். இதை தனியார் நிறுவனத்திடம், இந்த பதிலை வேலைக்கு வந்த ஒருவர் சொல்ல முடியுமா?
மேலும்,இங்கே, குறிப்பாக சொல்லப் போனால், அந்தந்த வேலைக்கான தகுதியான ,efficiency and knowledgeable persons மிகவும் குறைவு. எட்டாவது படித்தவர்கள் செக்ரெட்டராக இருப்பார்கள்,சேல்ஸ்மேன் செகரட்டரி ஆக ஆகிவிடுவார். பொட்டலம் கட்டியிருந்தவர் நாளை கிளார்க் ஆக ஆகி விடுவார். ஆகலாம் ,தப்பில்லை. ஆனால் !அதற்கான கல்வி தகுதி எங்கே? மேலும்,

கல்வி தகுதி இல்லாமலே ,கொண்டு வந்து, தகுதி இல்லாதவர்களை வேலையில் உட்கார வைத்து விட்டு, ஊழல் நடக்காமல் என்ன நடக்கும்? இந்த ஊழல் கூட்டு கொள்ளை, கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள், சேர்மன்கள், போர்ட் ஆஃப் டைரக்டர் ஸ் ( உறுப்பினர்கள்), இவர்கள் எல்லாம் சேர்ந்து இவர்களோடு கூட்டணி அமைத்து , ஊழல் செய்தால் கூட்டுறவுத் துறையின் ஊழல்! வங்கிகள் நஷ்டத்தில் இயங்கும்போது ,அதை சரி கட்டி லாபத்தில் இயங்குவதாக கணக்கு காட்டுவார்கள். பிறகு, கூட்டுறத்துறையின் நஷ்டத்தை அரசு கஜானாவில் இருந்து சரி கட்ட வேண்டி இருக்கும். இது எதனால்?
போலி நகைகளுக்கு, கடன் கொடுப்பார்கள். ஒரு விவசாயி கடனை வாங்கி இருக்க மாட்டார். ஆனால், அவர் பெயரில் கடனை வாங்கியதாக இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்ட பல மோசடிகள் கூட்டுறவுத் துறையில் நடந்திருக்கிறது.

மேலும், இப்படிப்பட்ட மோசடிகள் ,அது எப்போதாவது ஒரு முறை ஆய்வில் தெரிய வந்தால், அதையும் மறைப்பதற்கு என்னென்ன ?வேலைகள் செய்யலாம்? மந்திரியை பிடிக்கலாமா? அல்லது கட்சிக்காரரை பிடிக்கலாமா? யாரைப் பிடித்து இதை சரி கட்டலாம்? இதுதான் கூட்டுறவுத்துறை.
மேலும், நேர்மையாகவும், உண்மையாகவும், இந்த வங்கியில் உழைப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் மீது ,இவர்கள் சாப்பிட்டதை எல்லாம் அந்த அப் பாவிகளை பலிகடா ஆக்கிக் கொண்டிருப்பார்கள். அதுதான் கூட்டுறவுத்துறை. இந்த ஊழல் கும்பல் கூட்டு சேர்ந்து அப்பாவிகள்
யாராவது மாட்டினால், அவர்கள் தலையிலே போட்டு, விட்டு, சொத்து வாங்கி வைத்துவிட்டு சுகமாக இருப்பார்கள். இந்தத் துறையில் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழக்கூடியவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இதுதான் கூட்டுறவுத்துறை.
மேலும் , கூட்டுறவுத் துறையின் ஊழல்களை கணினி மயமாக்கினாலும், அதை குறைக்க தான் முடியும். ஆனால், ஒழிக்க முடியாது. கூட்டுறவுத் துறையின் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால்!

கூட்டுத் துறையின் தணிக்கை துறையில் மாற்றம் கொண்டு வரப்பட மேலும்,தற்போதுள்ள தணிக்கை அதிகாரிகளாக வேலை பார்ப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு தணிக்கைக்கு படித்த நபர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.
இது தவிர, இந்த தணிக்கை பிரிவு கடன் கொடுப்பதில் ,கடன் வசூலிப்பதில், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதாவது நகைக்கடன் என்றால் ,அதற்கு தனி தணிக்கை பிரிவு, அதேபோல், பயிர் கடன் என்றால், அதற்கு தனி தணிக்கை பிரிவு ,அதிகாரிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் செயல்படுத்துவதில் அதற்கான தனி தணிக்கை பிரிவு,

இப்படி ஒவ்வொன்றிற்கும், தனித் தனியான தணிக்கைப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் தான் ,கூட்டுறவு துறையின் ஊழலை ஒழிக்க முடியும். அதிலும், உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ,இவை அனைத்தும் மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட்ட தணிக்கை கணக்குகள், ரிவ்யூ மீட்டிங் நடத்தப்பட வேண்டும். இப்படி இருந்தால் தான்! கூட்டுறவுத் துறையின் ஒழிக்க முடியும். கூட்டுறவுத் துறையில் ! கணினி மயமாக்கப் பட்டால், ஊழலை இவர்களை வைத்து ஒழிக்க முடியாது.