சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram

நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் அரசியலால் பழிவாங்க, ஒரு தனி மனிதனை தேர்வு செய்தால், அவர்களுக்கு நீதிமன்றம் தவிர, வேறு யாரும் இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தியுள்ளது .அதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 மேலும், சவுக்கு சங்கருக்கு கோவை முதல் சென்னை, சேலம், திருச்சி ,மதுரை போன்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர் வழக்கு காவல் நிலையத்தில் அளித்து ,அவரை நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலை கழிக்கப்பட்டு, ஜாமீன் பெற முடியாத நிலையில் எல்லா முட்டுக்கட்டையும் கொடுத்து, அவரால் இதிலிருந்து மீண்டு வர முடியாத அளவுக்கு என்னென்ன சட்ட சிக்கல்களை ஏற்படுத்த முடியுமோ, அத்தனையும் திமுக அரசு சவுக்கு சங்கருக்கு செய்து விட்டது .

உண்மையிலே இது ஒரு சாமானிய மனிதனுக்கு இந்த கொடுமை நடந்தால், அவரிடம் பண பலம் இல்லை என்றால், இதிலிருந்து மீண்டும் வெளிவர முடியாது. இந்த அளவுக்கு சவுக்கு சங்கர் போராடியது, வேறு சில தனி நபர்களால் அது முடியுமா? நிச்சயம் முடியாது. எப்படியோ சுப்ரீம் கோர்ட் நீதியை நிலை நாட்டியது. சட்டத்தை பாதுகாத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *