
அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும்,திமுக கூட்டணி அது கொள்கை கூட்டணி அல்ல, அது கொள்ளை அடிக்கும் கூட்டணி, இது தவிர, விஜய்யுடன் தற்போது கூட்டணி வைக்கக் கூடிய டிடிவி தினகரன் ,ஓ பன்னீர்செல்வம், இவர்களுடைய கொள்கை என்ன? இவர்கள் எதற்காக இந்த கூட்டணியில் சேருகிறார்கள்?

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இவர்களுக்கான ஒரு இடத்தை கொடுக்காமல், அவர் பிடித்துக் கொண்டிருப்பதால் ,இவர்கள் சொந்த நலனுக்காக அதிலிருந்து வெளியேறி ,வேறு ஒரு கட்சியில் கூட்டணியில் சேர்கிறார்கள். அதேபோல் பிஜேபி !ஓ பன்னீர் செல்வம் ,சசிகலா ,தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் சேருங்கள் .

அப்போது தான் அதிமுக பலம் வந்தது என்று பலமுறை சொல்லிப் பார்த்து இந்த பஞ்சாயத்து ஒத்துவரவில்லை. இப்படிப்பட்ட இவர்கள் எல்லாம் மக்களுக்காக என்ன செய்வார்கள்? என்பதை வாக்களிக்கும் மக்கள் தான் சிந்திக்க வேண்டும். இங்கே மக்களுக்காக இவர்கள் யாரும் கூட்டணியில் சேரவில்லை.மேலும்,விஜயின் தமிழக வெற்றி கழகம் நேற்று ஆரம்பித்த ஒரு கட்சி, இந்த கட்சியில் போய் இரண்டு முறை ஒரு முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் சேருகிறார் ,டிடிவி தினகரன் போய் சேருகிறார், என்றால் இவர்களுடைய அரசியல் எப்படிப்பட்ட அரசியல் ?இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் என்று ஆக்கிவிட்டார்கள்.

விஜய் இப்போதுதான் வருகிறார். இவருக்கு அரசியலில் இன்னும் அரிச்சுவடி கூட படிக்காத நிலை. இந்த நிலையிலே, இவர் முதலமைச்சர் கனவு. ஏனென்றால், தமிழ்நாட்டில் அரசியல் களம் இப்போது மிக, மிக கடினமான ஒரு பாதை ஆகிவிட்டது. அவ்வளவு எளிதில் ஒரு எம்எல்ஏ, எம்பி, கூட ஜெயிக்க முடியாது.

திமுகவின் அரசியல் என்ன? என்று தெரியும் .இவர்களுடைய அரசியல் என்ன? என்று தெரியும். விஜய் பொறுத்தளவில் வாக்கு சதவீதம் வாங்க முடியுமே தவிர, ஜெயிப்பது மிக மிக கடினமான ஒன்று. அது மட்டுமல்ல, இவருடைய கொள்கை இந்துக்களுக்கு எதிரான ஒரு கொள்கையாக உள்ளது. அப்படிப்பட்ட கொள்கை உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ,போய் சேருவது தேவர் ,முக்குலத்தோர் சமுதாயத்திற்கு செய்கின்ற இவர்களின் எதிரான அரசியல்.

இருப்பினும், இதையெல்லாம் தேவர் சமுதாயம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இவர்களின் சமுதாயம் ஓரளவுக்கு இதையெல்லாம் பார்க்க கூடிய சமுதாயம். எந்த காலத்திலும் இவர்கள் கிறிஸ்துவ, முஸ்லிம்களுடன் அவர்களை மந்திரி பதவியில் அமர்ந்தி பார்க்க் கூடிய சமுதாயமல்ல.

மேலும்,விஜய் கிறிஸ்தவ ,முஸ்லிம்களுக்கு ஒத்துக் ஊதக் கூடிய ஒரு அரசியல் கட்சி. இதுதான் விஜயின் அரசியல் நிலைப்பாடு. தவிர,இவர்களுக்கு எல்லாம் மத பற்றாளர்கள் ஒரு பக்கம் ,கிறிஸ்துவ மிஷனரிகள், விஜயை தமிழ்நாட்டில் வெற்றி பெற வைத்து விட்டால் ,அமெரிக்கா இங்கே அதிகாரத்தை காலூன்றலாமா? என்று கனவு காணும்.

மேலும்,விஜய் ஒரு சினிமா நடிகன்! அதை தாண்டி விஜயன் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு என்ன? ஒன்றுமே இல்லை. இந்த சினிமா அரசியலும் ,சினிமாவும் சேர்த்து பிசைந்து கொண்டிருக்கும் விஜயின் அரசியல் பின்புலம் ஒரு கிறிஸ்தவ மிஷனரிகளின் மத அடிப்படையில் ரகசியமானது.

மேலும்,விஜயின் பின்னால், இந்துக்கள் சென்றால் ,அது இந்துக்களுக்கு பிற்காலத்தில் ஆபத்து. சினிமா வேறு ,அரசியல் வேறு, என்று பார்க்க வேண்டும். சினிமாவில் முருக பக்தனாக வேல் கையில் பிடித்துக் கொண்டு, ஆடலாம், ஆடலாம், அது வேறு. ஆனால், நிஜத்தில் விஜயின் அரசியல் என்ன? விஜய்க்கு பின்னால் என்ன அரசியல் ?என்பதை தான் பார்க்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து பணம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிதி வருகிறது. இதை இவர் தன்னுடைய தொழில் முதலீடுகளில் இருந்து வருகிறது என்று கூட கணக்கு காட்டலாம். நாட்டில் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் போலி கணக்குகளை தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான கணக்கு என்ன ?என்பது நாம் தான் இவர்களுடைய கணக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். வாக்களிக்கும் மக்கள் முட்டாளாக இருக்கும் வரை, இப்படிப்பட்ட போலி கணக்குகளை ,போலி அரசியல்வாதிகள் உருவாக்கி காட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்.மேலும், இப்படிப்பட்டவர்கள்.

இவர்கள் சொந்த நலனுக்காக கட்சியை நடத்துவார்களே ஒழிய ,மக்கள் நலனுக்காக கட்சியை நடத்த மாட்டார்கள். அதுமட்டுமல்ல ,இந்தியாவில் வறுமை இருக்கும் வரை, இவர்கள் எல்லாம் கருப்பு பணத்தில் அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் அரசியல் தெரியாத மக்கள் இருக்கும் வரை, ஓட்டுக்கு பணத்தை கொடுத்து ஏழை நடுத்தர மக்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்த ஊழலும், அரசியலும் எங்கே உருவாகிறது? என்றால் ,அடித்தட்டு மக்கள் ,ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது வாங்குகிறார்கள். இந்த ஊழல் பணத்தில் இருந்து தான் மீண்டும் ஊழல் வளர ஆரம்பிக்கிறது. தவிர,அவர்களுடைய நினைப்பு கொள்ளையடித்த பணம் தானே வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது மிக ,மிக தவறு. திருடியதாக இருந்தாலும், கொள்ளையடித்ததாக இருந்தாலும், அந்த பணம் உங்களை வாழ வைக்க ,உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த ,நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்வாதிகள் ஒருபோதும் அதை பயன்படுத்த மாட்டார்கள் .

அவர்களுடைய வளர்ச்சியைதான் அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இறுதிவரை உங்களை இந்த ஓட்டுக்கு பணம் கொடுத்து, உங்களை அடிமையாக்கி வைத்திருப்பார்கள். இதில் உழைப்பவன் முன்னேற முடியாது. தகுதியானவன் முன்னேற முடியாது. தகுதியற்ற ஒரு கூட்டம் கட்சியை கையில் எடுத்துக் கொண்டு ,படித்தவனை, தகுதியானவனை ,அடிமையாக்க பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசியல் அதிகாரத்தை மாடு மேய்ப்பவனிடம் கையில் கொடுத்து விட்டால் கூட ,அவன் இந்த சமுதாயத்தில் உழைப்பவன், முன்னேறிய சமுதாயத்தையும், அடிமையாக்கி அரசியல் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மேலும்,இது அடிமட்டத்திலே, இந்த நிலைமை என்றால் மேல் மட்டத்தில் எவ்வளவு இருக்கும்? அதனால், மக்களின் அரசியல் விழிப்புணர்வு, அது ,உங்கள் முன்னேற்றத்திற்கானது.தவிர, இந்த தேசமே நலனின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் ஆனது. இதை யார் செய்ய வேண்டும் ?என்றால் ,தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும், செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்துவது பெரிய காரியமல்ல, கடமைக்கு தேர்தல் நடத்துவது மிகப்பெரிய வேலையும் அல்ல, ஆனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த தேர்தலை நடத்த வேண்டும்.

அப்போதுதான் நாட்டில் ஊழல்வாதிகளால் எவ்வளவு பொருளாதார பின்னடைவு ஏற்படுகிறது? மக்களின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கிறது? மக்களுக்கான நலன்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறது? இதில் அரசியல் கட்சிகளின் மீடியேட்டர் எந்தளவு பொருளாதார வசதி பெறுகிறார்கள்?. இது அத்தனையும் மக்களுக்கு தெரிய வேண்டும்.

மேலும், இந்த முக்கிய செய்திகள் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், ஒன்று கூட இதைப்பற்றி மக்களிடம் சொல்வதில்லை. அதுதான் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் இவர்கள் சலுகை, விளம்பரங்களாக அனுபவித்துக் கொண்டு, மக்களுக்கு செய்கின்ற ஒரு துரோக அரசியலை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை படித்த சமுதாயமும், பாமர மக்களும், எப்போது புரிந்து கொள்ளும்?, இது தவிர,படிக்காத பாமர மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ,சாதாரண காரியம் அல்ல ,அதற்கு மிகப் பெரிய ஒரு பொருளாதார தேர்தல் ஆணையத்தின் செலவு மிக, மிக அவசியமானது.
எனவே, நாட்டில் அரசியல் கட்சிகள் , அவர்களின் சொந்த நலனுக்காக கூட்டணி வைத்துவிட்டு, மக்களிடம் மக்களுக்காக கூட்டணி வைத்தது போல் பேசி ஏமாற்றுவது கட்சித் தலைவர்களின் அரசியல் திறமை என்று நினைக்காதீர்கள். அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கின்றனர் – சமூக ஆர்வலர்கள்.