ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவு ஜூன் 4-ஆம் தேதி வெளிவந்தால், எந்தெந்த அரசியல் கட்சிகள்? எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்கு சதவீதம் ? இந்த வாக்கு சதவீதம் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவா ?நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு சதவீதம் எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ளது ?
இதில் சிறுபான்மையினர் வாக்குகள் எந்த கட்சிக்கு எவ்வளவு ? அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு ? பெரும்பான்மை சமூகத்தின் வாக்கு சதவீதம் எவ்வளவு? எந்தெந்த கட்சிக்கு அவை சென்று சேர்ந்துள்ளது ? ஆளும் திமுக கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் ? திமுகவின் கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதம் எவ்வளவு ? அதேபோல், அதிமுகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு ?அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு ?
இது தவிர, பாஜகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு ? ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு சதவீதம் ? இதன் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் ஒவ்வொரு தொகுதிகளும் அதன் வாக்கு சதவீதம் என்ன ? அதன் வெற்றி என்ன? தோல்வி என்ன? ஊடகக் கருத்துக் கணிப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் சரியாக நடைமுறைக்கு எது சாத்தியமானது? எது சாத்தியமில்லை ?தவிர, ஜோதிடர்களின் கணிப்பு எந்த எந்த அரசியல் கட்சிகள் எத்தனை சீட்டுகள் ஜெயிக்கும் ? என்பன போன்ற பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளது.
அதில் எது நடந்துள்ளது? எது நடக்கவில்லை? யார் சொன்னது நடந்தது? யார் சொன்னது நடக்கவில்லை ?இப்படிப்பட்ட பல தகவல்களை இந்த தேர்தல் கருத்துக்கணிப்பின் தகவல்கள் முன்கூட்டியே வெளிவந்துள்ளது .மேலும், தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு அதிக சீட்டுக்கள்? எந்த கட்சிக்கு குறைவான சீட்டுகள் ஜெயிக்கும் ?என்பது வாக்களித்த தமிழ் மக்களுக்கு தெரியாது. இந்த உண்மை தேர்தல் முடிவு ஜூன்4 நாளுக்கு பிறகு தெரிய வரும் .அப்போது வெற்றிபெற்ற வேட்பாளருக்கும், தோல்வி அடைந்த வேட்பாளருக்கும் இடையே இருக்கக்கூடிய வாக்கு சதவீதம் என்ன ?
எந்த கட்சி அதிக இடங்களில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது? அதிக இடங்களில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஒரு கட்சி தோல்வியுற்றுள்ளது? இது போன்ற பல கேள்விகள், ஆய்வுகள் அரசியல் ஆய்வாளர்களால், இந்த தேர்தலின் முடிவு வைத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் 90% க்கு மேல் கணிக்க முடியும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து .