செய்யறது திருட்டு தொழில், நீ ஆளும் கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் என்ன? எம்பி ஆக இருந்தால் என்ன? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் தகுதியான பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கரூரில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்தக்கூடிய ஒரு குவாரியை பற்றி செய்தி எடுக்க வந்த தமிழ் 24 சேனல் செய்தியாளரை அவன் உயிருக்கு போராடும் வரை அடித்திருக்கிறான் என்றால் அவன் ஒரு எம்எல்ஏவுக்கு தகுதி இல்லாதவன் .

பதவி ,அதிகாரம் ,எல்லாம் மக்கள் போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களுக்கு சமூக சேவை செய்ய வருகிறோம் என்று சொல்லி, மக்களை ஒரு பக்கம் ஏமாற்றுவது, அவர்களைப் போராட்டத்திற்கு தள்ளுவது, ஊழல் செய்து இவர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகுவது, இந்த முறைகேடுகளை எல்லாம் தட்டி கேட்டால், பத்திரிகையின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் ,இது போன்ற வன்முறைகளை, கட்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் ,அடியாட்கள் மூலம் அடியாட்கள் மூலம் செய்வது, இது எல்லாம் அரசியல் அல்ல. அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம்.

மேலும்,அரசியல் தெரியாத மக்களிடம் ஏமாற்றுவது போல, பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் ஏமாற்றலாம் என்று நினைத்தால், அது எந்த ஆட்சியாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், அது தவறானது.

நாங்கள் எந்த பக்கம் தவறு நடந்தாலும் ,அந்த தவறை சுட்டிக்காட்டுவோம். அதை நீங்கள் சரி செய்து கொள்வது, உங்களுடைய கடமை. ஏனென்றால், நீங்கள் மக்களிடம் பிரதிநிதியாக நான் பணியாற்ற வந்திருக்கிறேன் என்று தான் உறுதிமொழி எடுத்து வந்து உள்ளீர்கள்.

அப்படி மக்களால் கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரத்தை ஒரு எம்எல்ஏ கை நைட்டி அடித்தார் என்றால், அவரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து ஸ்டாலின் நீக்க வேண்டும். இதுவே ஜெயலலிதாவாக இருந்தால் நிச்சயம் அவரை ,அந்த ஸ்பாட்லே தகுதி நீக்கம் செய்திருப்பார். இதுதான் தகுதியான அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஒரு தகுதி.

ஒரு மனிதன் தகுதியைப் பெறுவது சாதாரண விஷயம் அல்ல .அவன் வாழ்நாளில் எப்படி அவன் தகுதியோடு வாழ்ந்தான்? என்பது தான் தகுதி. அந்தத் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை.

பழனியாண்டி எம்எல்ஏ பதவிக்கு தகுதி இல்லாத ஒருவன்! எம்எல்ஏவாக ஆனால், எப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் ?என்பதற்கு பழனி ஆண்டி எம்எல்ஏ ஒரு உதாரணம். மக்களே எப்போதாவது ,இந்த எம்எல்ஏ ,மந்திரி பதவி, ஏதோ காசு கொடுக்கிறேன் என்பதற்காக எவனுக்கு வேண்டுமானாலும், வாக்களிப்பது நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சுய நலமாக இருக்கிறீர்களோ, அவ்வளவும் உங்களுடைய தலையில், தான் ஒவ்வொருவனும் மண்ணை போட்டு மூடி கொண்டிருக்கிறான். ஏனென்றால், உங்களையெல்லாம் மூடக்கூடாது என்று தான் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் எந்த பத்திரிகையாளர்கள் அடிபட்டால் என்ன? எவன் செத்தால் என்ன? எவன் போனால் என்ன? என்று இப்படி எல்லாம் வாழ்ந்தீர்களானால் இறுதியில் உங்களுக்கு தான் அந்த முடிவு என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மனசாட்சி இல்லாத ஒரு மிருகம் போல கொலை வெறி தாக்குதல் நடத்திருக்கிறான்.

இதற்கு கரூர் மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் செய்ய தவறிய கடமை அது. மாவட்ட ஆட்சியர் அங்கே கொள்ளை நடப்பது, அளவுக்கு மீறி கனிம வள கொள்ளை நடந்திருந்தால், உடனடியாக தடுத்து நிறுத்திருந்தால், இந்த பிரச்சினையே வந்து இருக்காது. இதற்கு காரணம் முதல் குற்றவாளி மாவட்ட ஆட்சியர். இரண்டாவது குற்றவாளி அந்த மாவட்ட எஸ்பி.

மேலும்,இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றால், இவர்கள் இருவரையும், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் ஒரு தீர்வு. ஏற்கனவே, உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் கனிம வள கொள்ளைக்கு மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதையும் மீறி அங்கு நடந்துள்ளது என்றால் ,சட்டப்படி அந்த மாவட்ட ஆட்சியர் தான் குற்றவாளி.இரண்டாவது குற்றவாளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *