
உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் நாட்டில் அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது, அதனுடைய கண்ட்ரோல் உச்சநீதிமன்றத்தில் இருப்பதாக அவருடைய கருத்து. மேலும் இக் கருத்தை அவர்,
மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,
ஜனநாயகத்தில் நிர்வாகம், சட்டம் இயற்றும் மன்றங்கள் அல்லது நீதித்துறை இவற்றில் எந்தப் பிரிவு மிகப்பெரியது? என்ற விவாதம் இருந்து கொண்டு உள்ளது.

பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் உயர்ந்தது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூலம் மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்றக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது என்பது உச்சநீதிமன்ற நீதிபதி பி. ஆர். கவாய்க்கு தெரியாதா?

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே கூட சிலர் தீர்ப்புகளை சொல்லி விடுகிறார்கள். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்ன பதில் சொல்லப் போகிறார்? தவிர,
இன்று பல தீர்ப்புகள் பொதுமக்களிடையே விமர்சனங்கள் எழுகிறது. அது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ஆர். கவாய் என்ன சொல்வார்? இது தவிர, மிக முக்கியமான ஒன்று, அரசியலமைப்பு சட்டத்தில் எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் 200 ரூபாய்க்கு தன்னுடைய வாக்கை விற்கிறான் ஒருவன் அந்த வாக்கு பற்றி இதுவரை உச்ச நீதிமன்றம் எந்த கருத்தும் சொல்லவில்லை. மேலும் இந்திய தேர்தல் ஆணையமும் இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அது சரியா? தவறா?என்று கூட நாட்டில் அரசியல் கட்சிகள் அது பற்றி பேசுவதில்லை.
அவர்களை வைத்து தான் பல அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகிறது. இப்படி இந்த அரசியலமைப்பு சட்டம் கொடுக்கப்பட்ட வாக்குரிமையை ஒருவன் 200 ரூபாய்க்கு,, 500 ரூபாய்க்கு விற்க எந்த அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது?