தமிழ்நாட்டில் விவசாயத்தையே நம்பி இருக்கும் மக்கள் தங்களுடைய விளை நிலம் சிப்காட்டுக்கு அரசு எடுக்கும்போது, அவர்களுடைய வேதனை கண்ணீர் எப்படி இருக்கிறது? என்பது உண்மையான விவசாயிகளுக்கு இந்த வீடியோவை பார்க்கும் போது தெரியும் .
அதேபோல் உண்மையான விவசாயியும் ,ஆறுகளில் ,ஏரிகளில் மண் எடுக்கும் போது தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று அவர்களுடைய வேதனையும் வெளிப்படுத்துவார்கள். ஆனால், ஊரில் உள்ள 100 நாள் வேலைக்கு போன பெண்களை கூட்டி வந்து, போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி விடையூர் ஏரிகளில் மண்ணெடுக்க எந்த விவசாயி சொல்வான்? மண்ணை விற்று லாபம் பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தான் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணம் கொடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தை கூட்டி இருக்கிறார்கள் என்கிற தகவல் ஊரில் பரவலாக பேசப்பட்டுள்ளது.
மேலும், பணத்திற்காக எப்படியும் பேசும் கூட்டம் ,பஞ்சாயத்து தலைவர் பதவி ஏதோ ஒரு மந்திரி பதவி என்று கிராமங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டம் தெரியாது. பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு எப்படி பேச சொல்கிறார்களோ அதைவிட அதிகமாக பேசுவார்கள் .அது மட்டும் தெரியும். இங்கே உண்மையான விவசாயிகளின் வாயிலிருந்து என்ன வார்த்தை வருகிறது? என்பது இதையும் பொதுமக்கள் பார்க்க வேண்டும். இங்கே சட்டப்படி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மண் எடுக்க அனுமதிக்கப் போகிறாரா? அல்லது சட்டத்திற்கு புறம்பாக மண் எடுக்க துணை போகப் போகிறாரா? இது இரண்டே கேள்விக்கு தான் சட்டத்தின் முன் அவர் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்திற்கு இருப்பார்.
ஏனென்றால் நாட்டில் இல்லீகள் எல்லாம் leagal ஆக மாற்றிவிட்டால், யாரும் கேள்வி கேட்க முடியாது .மேலும், மாவட்ட ஆட்சியர் பிரபசங்கர் இந்த ஏரியில் எத்தனை லோடு leagal ஆக எடுக்கப் போகிறார்கள் ? எத்தனை லோடு illeal ஆக எடுக்கப் போகிறார்கள்? என்பது உண்மையான விவசாயிகள் கேள்வி? மேலும், இதுவரை தமிழ்நாட்டில் உள்ள சவுடு மண் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மண் எடுத்தது தான் அதிகம். இப்படி விதிமுறைகளை மீறி மண் எடுக்கும் அதிகாரம் கொடுப்பது மாவட்ட ஆட்சியர்கள் தான் .
அதனால், நீதிமன்றம் முதல் குற்றவாளியாக மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளையும் ,சேர்த்தால் நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் .எனவே, விடையூர் கிராமத்தில் இந்த இல்லீகல் சவுடு குவாரிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துணை போனால் ,விவசாயிகள் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் மீதும், கனிமவளத்துறை அதிகாரி மீதும், சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்து இருக்கிறார்கள் .
இந்த விஷயத்தில் அமைச்சர் பொன்முடி சட்டப்படி தண்டனை பெற்றுள்ளார் என்பதை மாவட்ட ஆட்சியர் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், விவசாயிகள் இந்தப் போராட்டத்தை சட்டப்படியும் எதிர் கொள்வார்கள். அரசியல் கட்சி துணையோடும் எதிர்கொள்வார்கள் .ஏனென்றால், இவர்களுக்கு ஒரு கட்சி என்றால் ,அவர்களுக்கும் ஒரு கட்சி இருக்கிறது. அப்போது மாவட்ட ஆட்சியரும் ,கனிமவளத்துறை அதிகாரியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?என்பது அவர்களுக்கு அப்போது புரியும் .