
தமிழக அரசின் பட்ஜெட்டில் நாளை வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விவசாயிகள் ,குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழவர் உரிமை அட்டை, விவசாயிகள் அனைவருக்கும், வழங்க உள்ளதாக தகவல் .
மேலும் , விவசாயிகளுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும், வெற்றி கழகம் என்ற பெயரில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ,கரும்பு டன்னுக்கு ரூபாய் 4500 , போன்ற பல்வேறு அறிவிப்புக்கள் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ,உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு ஏதோ ஒரு பெரிய நன்மை செய்துவிட்டது போல, பேசிக் கொண்டிருக்கிறார். மேலும்,விவசாயிகள் வேதனை கண்ணீர் வடித்தது, அவர்கள் மறக்க மாட்டார்கள்.
தவிர,உங்களுடைய கட்சிக்காரர்களை எல்லாம் பச்சை தூண்டு, பச்சை வேஷ்டி ,கட்டி வர சொல்லி போராட்டம் நடத்தினால், உண்மையான பத்திரிகைகளாக இருந்தால் ,அதை மக்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.
இந்த பத்திரிகைகள் எப்போது உண்மையை சொன்னது? இவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும், அதை சொல்வதற்கு தான் பத்திரிக்கை என்கிறார்கள் அது தவறு.
நாட்டில் தற்போது அதுதான் பெரிய பத்திரிக்கை! பெரிய தொலைக்காட்சி! என்று ஒரு போலியான பத்திரிக்கை பிம்பத்தை கார்ப்பரேட் பத்திரிக்கைகள் செய்து வருகிறது. மக்கள் உண்மையை படியுங்கள். அவரவர் சுயநலத்திற்கு அரசியல் இல்லை.
மேலும்,அரசியல் பொதுநல நோக்கமுடையது. அதனால், அதை ஒவ்வொரு வாக்காளர்களும் புரிந்து கொள்வது அவசியம். எனவே,இனி மக்கள் ஏமாறக்கூடாது .உண்மையை படியுங்கள் . சிந்தியுங்கள்.அப்போதுதான் உங்களுக்கு எந்த ஆட்சி நல்லது? எந்த ஆட்சி கேட்டது ?என்பதை தீர்மானிங்கள்.
