
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்! நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தின் வெற்றிதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி !
மேலும், திமுக ஆட்சியில் மக்கள் எவ்வளவு போராட்டங்கள்? எவ்வளவு துன்பங்கள் அனுபவித்தார்கள்? என்பது அவர்களுக்கு தான் தெரியும். மீண்டும் இந்த தீய சக்திக்கு, ஒரு ஜோதிடர் சொல்கிறார். நவம்பர் 13 லிருந்து ஸ்டாலினுக்கு நல்ல காலம், மீண்டும் முதலமைச்சராக வந்து விடுவாரா?
வெறும் கோச்சார பலன்களை வைத்து இந்த ஜோதிடர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் ஒருவருக்கு விதியை எழுதும் போது, ஒருவனுடைய பதவி, அதிகாரம், ஏழ்மை, துன்பம், வறுமை, எல்லாவற்றையும் காலத்தை நிர்ணயித்து, அவரவர் பாவ, புண்ணியத்திற்கு ஏற்றவாறு,அதில் விதியை தீர்மானிக்கிறார்.

அந்த வகையில் முதல்வர் விஜயின் ஜாதகம் ஒரு சில ஜோதிடர்களால், எம் ஜி ஆர் ஐ விட சிறப்பான ஜாதகம் என்று ஜெயலலிதாவுக்கு, ஜோதிடம் பார்த்தவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இன்னும் சிலர் அரசியல் கட்சிக்காரர்களின் ஜோசியர்கள் போல், ஸ்டாலினை மிகைப் படுத்தியே பேசுகிறார்கள்.

மேலும்,மக்களே வெறுத்து ஒதுக்கினாலும், இந்த ஜோதிடர்கள் ஒதுக்க மாட்டார்கள் போல தெரிகிறது. இவர்கள் ஒரு அரசியல் செய்கிறார்கள். அதாவது,நாட்டுக்கு நல்லவன் வேண்டும் , என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் மக்களின் விருப்பம் .

ஆனால்,கேடு கெட்டவனை கொண்டு வந்து சிம்மாசனத்தில் உட்கார வைத்து இந்த ஐந்து ஆண்டுகள், தமிழ்நாடு பட்ட வேதனை ,வேறு எந்த ஆட்சியிலும், நான் 35 ஆண்டுகால பத்திரிக்கை துறையின் வரலாற்றில் பார்க்கவில்லை.
மேலும்,அப்படிப்பட்ட ஒரு ஆட்சி செய்த ஸ்டாலினை ஜோதிடர்கள் youtube களில், பேசுவது, எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தவிர,இவருக்கு யோகம் இருக்கலாம் .அவ யோகம் இருக்கலாம். அது உங்களுடைய ஜோதிடத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்.

நாட்டுக்கு எப்படிப்பட்ட நல்லவர்கள் வரவேண்டும் ?அவர்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதுதான் ஜோதிடர்களின் கணிப்பாக இருக்க வேண்டுமே ஒழிய, தீய சக்தியை கொண்டு வந்து, மீண்டும் பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
மேலும், நான் ஓரளவுக்கு ஜோதிடமும் படித்தவன், வெறும் பத்திரிகையை மட்டும் படித்தவன் அல்ல. அதனால்தான் இதை எழுதுகிறேன். இதை அவ்வளவு சாதாரணமாக, நம் செய்தியாளர்கள் எழுத முடியாது. எழுத மாட்டார்கள். நான் இதில் அரசியலும், ஆன்மீகமும் சேர்த்து தான் எழுதுகிறேன்.

அரசியலில் விதிக்கப்பட்டவர்களே, இன்றைய காலகட்டத்தில், அந்த முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பது இறைவன் தீர்மானித்தது. ஆனால், ஜோதிடர்கள் சொல்வது நடந்ததை தீர்மானித்து சொல்லி விடுகிறார்கள். அதுவே,நடக்கப் போற விஷயத்தை சொல்வது கோடியில் ஒருவராக தான் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் சொல்லி ஏதோ ஒன்று நடந்து விட்டால் நான் சொல்லி தான் நடந்தது.
மேலும்,அவ்வளவு எளிதில், அந்த பலனை கண்டுபிடித்து சொல்வது, தெய்வ அனுகிரகம் பெற்றவர்களால் மட்டும் தான் முடியும். இவர்களுடைய கணக்கு வேறு, சித்தர்கள் ,மகான்களின் கணிப்பு வேறு! ஏனென்றால் ,அவர்கள் சொன்னால் சொன்னது தான். நான் சொல்வது போலிசாமியார்களை அல்ல, போலி சித்தர்களை அல்ல, உண்மையான சித்தர்களை சொல்கிறேன்.

மேலும்,விஜயின் ஆட்சி! திமுக ஆட்சிக்கு மாற்றாக ஒரு ஆட்சியாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதால்தான் இதை சொல்கிறேன். ஆனால், அவர் விரும்புகிறார் .ஒரு சில மந்திரிகள் அவர்களுடைய அதிகாரத்தை, சுயநலத்திற்காக பயன்படுத்தும் போது, அங்கு தான் தவறு நடக்கிறது. என்னுடைய பத்திரிக்கையில் சிறிய தவறுகள் பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை, அதை எழுதுவதுமில்லை. அதைப் பெரிது படுத்த கூடியவர்கள் பத்திரிக்கையும் இல்லை. மேலும்,

இதை முதல்வர் விஜய் மிக முக்கியமாக கண் காணிக்க வேண்டும். நான் சொல்வது சின்ன ,சின்ன விஷயத்தை பற்றி எல்லாம் விட்டு விடுங்கள். பெரிய விஷயங்கள், திமுக ஆட்சியில் செய்த தவறுகள், அதற்கு நிச்சயம் உங்கள் ஆட்சியில் முற்றுப்புள்ளி இருந்தால் தான், உங்களுடைய அரசியல் வெற்றி!

மேலும் ,நீங்கள் அதையே தொடர்ந்தால் நிச்சயம் அரசியல் தோல்வி என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . இதை ஏன் சொல்கிறேன்? என்றால், உங்களுக்கு வாக்களித்து இருப்பவர்கள் ,மனசாட்சி உள்ள மக்கள் என்பதை மீண்டும், மீண்டும், இதை தமிழக வெற்றி கழகத்திற்கும், முதல்வர் விஜய்க்கும், இந்த உண்மையை அவர் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,நாட்டில் எவ்வளவு பெரிய கொடுமைகள் செய்தாலும், எவ்வளவு ஊழல் செய்தாலும், எவ்வளவு அராஜகங்கள் செய்தாலும், அநியாயங்கள் செய்தாலும், அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றால்! நாட்டில் அவர்கள் நல்ல சக்தியாக இருக்க முடியாது. அவர்கள் தீய சக்தியாக தான் இருப்பார்கள்.

அதாவது அவர்களுடைய சுயநலத்திற்கு எப்படி வேண்டுமானாலும் செய்வார்கள், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள் .இதைப் பற்றி எல்லாம் பேசாத பத்திரிகைகள், யூடியூப்கள், நாங்களும் பத்திரிகை என்று பேசிக் கொண்டிருப்பது, பத்திரிகை துறையை ஏமாற்றவா?

மேலும்,இதைவிட ஒரு கொடுமை, ஒரு பத்திரிகையின் பதிவு அங்கீகாரம் அதாவது (Registration RNI ) வாங்கி இருப்பவர்கள், அரசு செய்தி போட வேண்டும். அல்லது போடலாம். ஆனால், தற்போது, எந்த பதிவும் இல்லாமல் ,யூடியூபில் இன்று தொலைக்காட்சியின் நிருபர்கள் கூட யூடியூபில் அரசின் செய்தி போடுகிறார்கள். இது எல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று.

மேலும்,இப்படி ஆட்சியாளர்கள், செய்தித்துறை அரசு அதிகாரிகள் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சிகளை வரைமுறைப்படுத்த தெரியவில்லை. இது பற்றியும் எவ்வளவோ செய்திகள் மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி துறைக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதற்குள் அரசியல் பத்திரிகை தீர்மானிப்பது தவறு. இதனால்தான் மக்களுக்கு நல்லதும் ,கேட்டதும் புரியாமல் ,நல்ல சக்தியும் ,தீய சக்தியும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், தமிழ்நாட்டின் அரசியல் வாக்கு வங்கி அரசியலாக நடத்திக் கொண்டிருப்பது, ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல். மேலும்,தேவைகள் என்ன ? இலவசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது,போலியான அரசியல் பிம்பங்கள் !இது எல்லாம் மக்கள் அரசியலை படிக்காதவர்களிடம் கொண்டு செல்லக்கூடிய அரசியல்

அதையும் இந்த youtube கள் ,ரீல்ஸ்கள், சில பத்திரிகை நடத்த தகுதி அற்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இது போல் தான் ஜோதிடர்கள் நாட்டுக்கு தேவையானவர்கள். அவர்களுடைய கணிப்பு மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும் .நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மீண்டும் இந்த தீய சக்திகள் நாட்டுக்கு வராமல் இருக்க, அதற்கு என்ன பரிகாரமோ ,அதை மக்களை செய்ய சொல்லுங்கள். அதுதான் உண்மையான ஜோதிடருக்கு பெருமை . பேருக்காகவும் ,ஸ்டாலின் குடும்பத்திற்காகவும், ஸ்டாலினுக்காகவும், நாங்கள் எல்லாம் புகழ்ந்து பாராட்டி, காசு பணம் சம்பாதிக்க கூடாதா?

எதற்காக பத்திரிக்கை? ஏன் பத்திரிக்கை? பத்திரிக்கை என்பது மக்களுக்கானது. அதனால்தான்! மக்கள் அதிகாரம் மக்களுக்காக … என்றும் மக்களுடன் …!