
2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.
இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேலும்,இங்கே கணிப்புகள் மற்றும் சர்வேக்கள் எல்லாம் தோற்றுப் போய்விடும். அந்த அளவுக்கு இந்தப் போட்டி கடுமையாக இருக்கப் போகிறது. இதில், அரசியல் கட்சிகள் பணத்தை கொடுத்து ஓட்டுக்களை கடந்த காலங்களில் வாங்கினார்கள். இப்போதும் அதே பார்முலாவை பயன்படுத்தி திமுக பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி, கள்ள ஓட்டுக்களை போட்டு ,இந்தப் போட்டியில் ஜெயிக்கப் பார்க்கிறது.
அதேபோல் அதிமுக தரப்பிலும், பணத்தை கொடுப்பார்கள். இதில் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அதிமுக 2000 ஒரு ஓட்டுக்கு கொடுக்கிறது என்றால் ,திமுக 2500 கொடுத்தால், அவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள். இப்படி பணத்திற்காக வாக்களிக்க கூடிய மக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை மாற்ற முடியாது.

ஏனென்றால் இவர்கள் ஒரு 50 ஆண்டுகாலம் பணத்தை வாங்கி ஓட்டு போட்டுக் கொண்டிருப்பவர்கள். இது இரண்டு கட்சியினருக்கும் தெரியும். யார் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவார்கள் ?என்பது அவர்களும் பட்டியல் எடுத்து வைத்திருப்பார்கள். இந்த முறை பணம் வாங்கினாலும் ,இதில் பாதி பேர் ,வாங்கினவர்களுக்கு விசுவாசமாக போடுவார்களா ?என்பது சந்தேகம். மேலும்,

தற்போதைய திமுக ஆட்சியில், இந்த முறை மக்கள்! சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வாழ்க்கையில் போராட்டம், சிக்கல்கள், அழுத்தங்கள், விலைவாசி உயர்வுகள், வரி சுமைகள் என்பது ஒரு பெரிய சுமையானதாக தான் ‘இந்த ஆட்சி எல்லோருக்கும் இருந்து வருகிறது.
மேலும் ,இது உழைப்பவர்களுக்கு மட்டும் தான் சுமை, நேர்மையாக வாழ்பவர்களுக்கு சுமை, உண்மையாக இருப்பவர்களுக்கு சுமை, அதே போல், பத்திரிக்கையில் உண்மையை எழுதுபவர்களுக்கும் சுமை .

அதனால், இந்த ஆட்சியின் அவலங்கள் எழுதிக் கொண்டே போகலாம். உண்மையை பத்திரிக்கையில் எழுதினால் எங்களுக்கு எதுவும் கிடைக்காது.தவிர,
பொய்யை எழுதிக் கொண்டு இருப்பவர்களுக்கு சலுகை ,விளம்பரங்கள் கிடைக்கும் . மேலும்,அவர்கள் தான் , தற்போது பத்திரிகை என்று திமுக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது .இருக்கட்டும்.
இந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் ஜனநாயகத்தை வீழ்த்துபவர்கள். அதாவது வாக்களிக்க தகுதியற்றவர்கள். இந்த வாக்குரிமைக்கு அர்த்தம் தெரியாதவர்கள்.

தவிர, தற்போது படித்த இளைஞர்கள் ஓட்டு எந்த பக்கம்? இது அரசியலைப் புரிந்தவர்களுக்கு பிஜேபி ,அதிமுக கூட்டணிக்கு செல்லும். புரியாதவர்கள் ,சினிமா மோகம் மற்றும் அரசியல் புரியாமல் மாற்றம் வேண்டுமென்று நினைப்பவர்கள் விஜய் பக்கம்,
இப்படி இளைஞர்கள் இதை அவர்கள் ஒரு கற்பனையில் அரசியல் ஹீரோவாக விஜயை நினைக்கிறார்கள் . அரசியல் வேறு, சினிமா வேறு ,அது நிழல் ,இது நிஜம் .இதுவே ,அவர்களுக்கு புரியது. காரணம் ,இந்த வயதில் புரிதல் இல்லாமல் வாழக் கூடிய வயது.

மேலும், ‘திமுகவின் வாக்கு கட்சியினர் பிளஸ் கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதம், + பணம்+ கள்ள ஓட்டு, இப்போது அதற்கு குறைவு இதை நம்பி தான்,திமுக 2026 இல் தேர்தல் களம் காணப்போகிறறது. அடுத்து சிறுபான்மை வாக்குகளை நம்பி திமுகவின் 2026 தேர்தல் களம் கடந்த தேர்தலில் விழுந்த வாக்கு சதவீதம் பாதிக்கு மேல் குறையும். அந்த மக்களும் திமுகவின் பொய்யை புரிந்து இருக்கிறார்கள்.எனவே,
இவை அத்தனையும் எவ்வளவு ஓட்டு சதவீதம்? இதன் நம்பி தான் ,அதனுடைய வெற்றி? தோல்வி? மேலும், அதேபோல்,
அதிமுக ஏற்கனவே அதனுடைய ஓட் பேங்க் (vote bank) எம்ஜிஆர் காலத்தில், ஜெயலலிதா காலத்தில், எடப்பாடி காலத்தில், இது படிப் படியாக குறைந்திருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தவரை அதிமுக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. ஜெயலலிதா பணம் கொடுத்தார். கருணாநிதி பணம் கொடுத்தார். ஸ்டாலின், எடப்பாடி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள்.

எனவே,இப்போது அதிமுக வலுவான கூட்டணியை உருவாக்கி விட்டால், திமுக வா ?அல்லது அதிமுக வா? இந்த இரண்டு கூட்டணிக்குள் தான் கடும் போட்டி. அப்போது ,விஜய் சப்ஸ்டியூட் (substitute ) தான்.
அடுத்தது, விஜய் கிருத்துவ வாக்கு + சினிமா ரசிகர்கள் + அதிமுக, திமுகவுக்கு மாற்று என்று அரசியல் தெரியாதவர்கள் வாக்கு, இது தான் இவர் வாக்கு சதவீதம்.அதனால், இந்த வாக்கு சதவீதம் வெற்றி, தோல்வியை நிர்ணைக்காது. அவரால் எத்தனை தொகுதி ஜெயிக்க முடியும் ?என்பது நிர்ணயித்து சொல்ல முடியாது.
மேலும்,2026 தேர்தல் களத்தில் போட்டி என்றால்! இந்த மூன்று கட்சி கூட்டணிகளுக்குள் தான் அதிகம் இருக்கும். தவிர,சீமான், எந்த கூட்டணிக்குள் சேர்வாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இதுவரை!

ஆனால், இவரால் கடந்த காலங்களை விட தற்போது குறைவான ஓட்டுகளை தான் இவரால் பெற முடியும். அப்படியே கூட்டணியில் சேர்ந்தாலும் எத்தனை தொகுதி ஜெயிப்பார் என்பது அதுவும் அரிது இட்டு சொல்ல முடியாது.
மேலும்,2026 தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடும் போட்டி .இந்த போட்டியில் தேர்தலுக்குப் பிறகு எத்தனை கட்சிகள் இருக்கும்? எத்தனை கட்சி உடையும்? என்பது இப்போது யாருக்காவது தெரியுமா?

நிச்சயம் 2026 தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகள் காணாமல் போக வாய்ப்புள்ளது. ஏன்? திமுக தோற்றால், திமுக உடைந்துவிடும். .அதிமுக தோற்றால், அதிமுகவும் உடைந்து விடும். காரணம் அரசியல் கட்சியினரிடையே கொள்கை இல்லாதது முக்கிய காரணம். அதனால் தான், இந்த கட்சிக்கும் அந்த கட்சிக்கும் தாவிக் கொண்டிருக்கிறார்கள். 99 சதவீதம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் தற்போது இருப்பவர்கள் பதவிக்கும் பணத்திற்கும் இருப்பவர்கள். அது கிடைக்காது என்று தெரிந்து விட்டால், மாறிவிடுவார்கள்.
. அதனால்,இந்த 2026 தேர்தல் பல அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலைதான் .இந்த போட்டியில் நிச்சயம் தகுதியற்றவர்கள், ஊழல்வாதிகள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஜெயிக்க முடியாது .

அதனால், 2026 தேர்தல் களம், கடும் போட்டியாளர்களை சந்திக்கப் போகிறது. அதனால், தேர்தல் வியுகம், போட்டியாளர்கள், தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் வாக்குறுதிகள், பொய் வாக்குறுதிகள்,கடுமையாக இருக்கப் போவதால்! வெற்றி வாய்ப்பு என்பது அதிமுக கூட்டணியா? அல்லது திமுக கூட்டணியா? ….2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா ? சாவா ?