அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சிக்கு அர்த்தம் தெரியவில்லை. அதேபோல் பத்திரிகை சங்கங்களுக்கும், சங்கத்தின் அர்த்தம் தெரியவில்லை. சங்கம் என்பது பத்திரிகைக்காக சங்கமா? அல்லது பத்திரிகை பற்றி தெரியாமல் பத்திரிகை (சிறிய ,பெரிய பத்திரிகை) அடையாள அட்டை வைத்து சங்கமா? சங்கத்தை நிர்வாகிக்கு அதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? இது என்ன அரசியல் கட்சியா? எதுவும் தெரியவில்லை என்றாலும், எம்எல்ஏ, எம்பி, மந்திரியாகலாம்.
அதனால், யார் கையில் பத்திரிகை அடையாள அட்டை கொடுத்தாலும், அவர்கள் பத்திரிகையாளர்களாக, செய்தியாளர்களாக ஆகிவிட முடிமா? அதேபோல் நான் இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை நடத்துகிறேன். அரசு அடையாள அட்டை வைத்திருக்கிறேன். இதில் உன்னுடைய தகுதி, இந்த துறையில் எங்கே என்பதை காட்ட முடியுமா? அதுதான் தகுதி. தகுதி என்பது, திறமை என்பது, பணத்தால் வாங்க முடியாது. அதை சிபாரிசு செய்தும் பெற்றுக் கொள்ள முடியாது. இந்த காரணங்களால் தான் இன்று பத்திரிகை துறை பொதுமக்களால் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நான் பெரிய பத்திரிகையின் செய்தியாளர் என்று பந்தா காட்டுவது, அந்த லேபிலை வைத்து பெருமை படுத்திக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தவிர ,இன்று பத்திரிகை என்பது சுயநலத்திற்காக, பணத்திற்காக, அரசியல் லாபங்களுக்காக வெளிவரும் செய்திகள் இன்று வியாபார நோக்கமாகிவிட்டது. அதிலிருந்து பத்திரிகை துறை பாதுகாத்தால் தான், நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொண்டு வர முடியும்.
இல்லையென்றால், அரசியல் என்பது பொதுநலம் இல்லாமல், சுயநலமாகி விட்டதால் அதன் விளைவு, இன்று, ஊழல், வன்முறை, ரவுடிசம் இதனுடைய அங்கமாகத்தான் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு தகுதியான பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் இல்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை. அவர்கள் இல்லாமல், இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. நாட்டு மக்களின் நலன்களுக்காக தான் பத்திரிகை. அந்த பத்திரிகையே அவ்வாறு இல்லாத போது, அதன் சங்கங்கள் எவ்வாறு பத்திரிகை சங்கங்களாக அங்கீகரிக்க முடியும்?
இன்று அப்படிப்பட்ட சங்கங்கள் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய சங்கங்கள் கூட இல்லை. அவையெல்லாம் இன்று அரசியல் கட்சி போல் ஆகிவிட்டது. அதை வைத்துக்கொண்டு மந்திரிகளை பார்ப்பது, அரசியல் கட்சியினரை பார்ப்பது, அவர்களிடம் பணம் பறிப்பது அல்லது தன்னுடைய வேலைகளுக்கு சிபாரிசு செய்து கொள்வது, அவர்களை வைத்து விழா நடத்தி விளம்பரத்தை தேடிக் கொள்வது, சால்வை அ ணிவித்து விளம்பரத்தை தேடிக்கொள்வது, இதுதான் இன்றைய சங்கங்களின் முக்கிய வேலை. மேலும், எந்த நோக்கத்திற்காக சங்கம் இருக்க வேண்டுமோ, அது இல்லை.
அதற்கான தகுதியான ஆட்களும் சங்கத்தில் இல்லை .அதனால் சங்கம் என்பதை இனி தமிழக அரசும், மத்திய அரசும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எடுத்துவிடலாம். தகுதியான பத்திரிகைகள், தகுதியான பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் தான் அதற்கான முன்னுரிமை, அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
இதை தவிர்த்து, சங்கத்தின் லேபிள் என்பது வெத்து வெட்டு கூட்டங்கள் கூடி சங்கத்தை ஏற்படுத்தி இருப்பது தகுதியான பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. இதை மத்திய மாநில, அரசுகள் புரிந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகள் பொதுநலத்துடன், சமூக நலத்துடன் ,பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் சமூக நலத்திற்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை.