
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நிர்வாகம் தெரியாமல், அரசு ஊழியர்களோடு போராட்டம், தூய்மை பணியாளர்களோடு போராட்டம், மருத்துவ செவிலியர்களோடு போராட்டம்,இப்படி பல பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருக்கும், இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?மேலும்,
தூய்மை பணியாளர்களை கைது செய்வதால் ,இந்த ஆட்சிக்கு அவ பெயரைத் தான் அது உருவாக்கும் . தவிர,இரண்டு நாள் குப்பைகள் தேங்கி விட்டாலே, அந்தப் பகுதியில் நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ,நோய் தொற்றும் உருவாகும்.

இந்த நிலையில்,ஏற்கனவே சென்னையில் பொல்யூஷன் (pollution) அதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதனுடன் சென்னையில் குப்பைகளும் சேர்ந்தால், என்ன ஆகும்? மக்கள் அந்த பகுதியில் வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், தூய்மை பணியாளர்கள் விஷயத்தில், தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது செய்வது ஒன்று. இதை தான் அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், தூய்மை பணியாளர்கள் காண்ட்ராக்ட் பேசிஸ் அதாவது ஒப்பந்த தொழிலாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களை பணி நிரந்தரம் என்பது செய்ய முடியாது.
ஏனென்றால், இவர்கள் அந்த சட்டத்தின் அடிப்படையில் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இவர்களை கொண்டு போய் பணி நிரந்தரம் செய்ய முடியாது. அந்த சட்ட சிக்கலும் உண்டு. ஆனால், தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா?

தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் எங்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தீர்கள். அதை நம்பி நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம். இதுதான் அவர்களின் கான்செப்ட்.(Concept) இப்படி அரசாங்கத்திற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் உள்ள போட்டி இந்த நிலைக்கு வந்துள்ளது. இதை ஆரம்பத்திலே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.மேலும்,

இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும் நிலைமைக்கு பிரச்சனைகள் போய்க் கொண்டிருந்தால், பொது மக்களுக்கும் பிரச்சினை, திமுக ஆட்சிக்கும் பிரச்சனை, தவிர,எல்லாவற்றிலும் ஸ்டாலின் மோதல் போக்கே கடைப்பிடிப்பது, முதல்வருக்குள்ள தகுதி இன்மையை எடுத்துக்காட்டுகிறதா?இல்லையென்றால், சவுக்கு சங்கரிடம் போய் மோது வாரா?எல்லாப் பிரச்சனைகளுக்கும் ,காவல்துறையை முன்னிறுத்துவதால், இது காவல்துறைக்கு பிரச்சனை இல்லையா?
இப்படி தகுதி,தரம் தெரியாமல், மோதிக் கொண்டிருக்கும் இவருக்கு, பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தகுதி ,திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், இல்லை என்பதுதான் தமிழ் நாட்டின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு .