தமிழ்நாட்டில்! இன்று தெய்வத்தை விட, அரசியல் கட்சியும் , அரசியலும்,பெரிதா? – இந்துக்களின் கேள்வி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் மாலையை போட்டுக் கொண்டு, கோயில், கோயிலாக வேண்டுதலுக்காக, பக்தர்களாக கோயிலுக்கு செல்கிறார்கள்.

ஆனால் , கோயில்களிலோ, மதங்களிலோ,பிரச்சனை என்று வரும் போது , அதிலிருந்து விலகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசியலும், அரசியல் கட்சிகளும் ,பெரிதாக தெரிகிறது. இதுதான் போலித்தனமான பக்தி என்று சொல்வார்கள். இறைவன் எங்கும் இருப்பவன். அவனைக் கோயிலில் தேடினால் கிடைப்பானா?

மேலும்,மனதில் நினைத்தாலே வரக்கூடிய தெய்வம், நீங்கள் நல்ல எண்ணமும், மனமும், இல்லாமல் போலி பக்தியால், கோயில், கோயிலாக சென்று சாமி கும்பிடுவதால், இறைவன் உங்களுக்கு அருள் பாலிப்பாரா?

தவிர,இன்று திமுக அரசியல், மற்றும் ஆட்சி நிர்வாகம், கோயில்களுக்கு எதிராக இருக்கிறது. இதைப் பற்றி சிந்திக்காத மக்கள் கடவுள் கோயிலில் இருக்கிறார் என்று எப்படி போய் வழிபடுகிறீர்கள் ?

ஆனால், அந்தக் கோயில் நிர்வாகத்தையே, ஆன்மீக பக்தியோடு ,நெறியோடு சாஸ்திர சம்பிரதாயங்களோடு, நடத்தக்கூடிய முக்கியத்துவமான விஷயங்கள் இருக்கிறது அல்லவா? அதை

இன்றைய திமுக அரசு நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல், ஓட்டுக்காக, அந்த மலை மீது தீபத்தை ஏற்ற விடாமல், செய்து விட்டார்கள். இது ஒரு தீய சக்தியின் ஆதிக்கமாகவே , இது நாட்டில் பார்க்கப்படுகிறது.

மேலும்,ஒரு கோயிலில் தீபம் ஏற்றி வழிபடுவதை அரசாங்கம் தடுக்கிறது என்றால், அதைப் பற்றிக் கூட சிந்திக்காமல், இவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் உண்மையான இந்துக்களா? மேலும்,

இதைவிட மோசமான அரசாங்கம் இந்த நாட்டில் வேறு யார் நடத்த முடியும்? இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காத இந்த மக்கள் ,மாலையும், கொட்டையும், விபூதியும் ,சந்தனமும் பூசிக்கொண்டு, கிராமங்களில் ஐயப்பன் கோயிலுக்கு செல்வது, திருவண்ணாமலை செல்வது திருப்பரங்குன்றம் செல்வது திருச்செந்தூர் செல்வது எல்லாம் பக்தியின் போலி வேஷமா?

இப்படிப்பட்ட போலி பத்தி வேஷத்தால் ,மலையை சுற்றுவது, கோயில், கோயிலாக சென்று சாமி கும்பிடுவது எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது.

மேலும், மனசாட்சி உள்ள மக்களாக, தர்மம், நீதி சிந்தனையுடன் இருக்கின்ற மக்களாக, கடவுளை வழிபடும்போது, நீங்கள் வீட்டிலிருந்து வழிபட்டால் கூட இறைவன் உங்களை தேடி வருவான். நீங்கள் இறைவனை தேடி போக வேண்டிய அவசியமே இல்லை.

இன்று எத்தனையோ இந்துக்கள் திமுகவில் இருக்கிறார்கள். அவர்களும் மாலை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களும் அண்ணாமலையை சுற்றுகிறார்கள். திருப்பரங்குன்றம் பகுதியில் அதே முருகனை கும்பிடுகிறார்கள்.

அது மட்டும் அல்ல ,திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சியினர் கூட, இதை செய்கிறார்கள் .இல்லை என்று அவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் எல்லோருக்கும், தெய்வத்தை விட, கோயில்களை விட, அவர்களுக்கு கட்சிகள் தான் பெரிதாக தெரிகிறது. அரசியல் பெரியதாக தெரிகிறது.

மேலும் ,இன்றைய திருப்பரங்குன்றம் பிரச்சனை, நீதிமன்றத்தில் இருந்து, அரசியல் கட்சியில் இருந்து, அரசாங்கம் வரை ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆக தமிழ்நாட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி ,அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இது பற்றி ஒரு வார்த்தை கூட, திறந்து பேசவில்லை என்று தான் இந்துக்கள் மத்தியில் பேசி வரும் அரசியல் என்பது இவர்களுக்கு புரியுமா?

இதற்காக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மட்டும், இந்த விஷயத்தை சரியாக பேசி இருக்கிறார். மீதி பேர் வாய் திறந்து இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

மேலும், பதவி ,அதிகாரம் ,பணம் ,மக்களின் ஓட்டு, இதுதான் அரசியல் கட்சிகளுக்கு மிக, மிக, முக்கியம். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் !மக்கள் பிரச்சனையை விட, இந்த சமூகப் பிரச்சனைகளை விட, பெரும்பான்மை இந்துக்களின் பிரச்சனைகளை விட, இவர்களுக்கு ஓட்டு பிரச்சினை தான் முக்கியமாக தெரிகிறது.

மேலும், இந்த பிரச்சனையில் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிற ஒரே கட்சி தமிழ் நாட்டில் பிஜேபி தான்.

இங்கே வாய் திறந்தால், சிறுபான்மை மக்களின் ஓட்டு பிரிந்து விடுமோ, அங்கே வாய் திறந்தால் இந்த ஓட்டு வராமல் நின்று விடுமோ, இதைவிட கேவலமான அரசியல் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.

மேலும்,இவர்கள் எல்லாம் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். ஓட்டுக்காக அரசியல் செய்வது சுயநல அரசியல்! இந்த சுயநல அரசியலில், பணத்தை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியலை மக்கள்! படிக்காத வரை, இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகளிடமும் அரசியல் கட்சிகளிடமும், சுயநல அரசியல் வியாபாரிகளிடமும், மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டு தான், இருப்பார்கள்.

எனவ, இவர்கள் அனைவருக்கும் ,அரசியல் கட்சிகளுக்கும், கட்சியினருக்கும், தெய்வத்தை விட, கோயில்களை விட ,இவர்களுக்கு அரசியல் கட்சி பெரிதா? அரசியல் பெரிது….! பதவி பெரிது…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *