தமிழ்நாட்டில் திமுகவின் எதிர்ப்பு அலை எந்த அரசியல் கட்சிக்கு அது சாதகம் ? அரசியல் கட்சியினரின் பொய்கள், ஊடகப் பேச்சாளர்களின் பொய்கள், ஊடகங்களின் பொய்கள் பொதுமக்கள் நம்பி விடுவார்களா ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் திமுக பிரச்சாரத்திற்கு செல்லுகின்ற முக்கிய புள்ளிகளின் தொகுதிகளில் ,மக்கள் ஓட்டு கேட்கவே வராதே என்று புறக்கணிக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் மனதில் திமுகவின் ஆட்சி ஒரு எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 

மேலும், இவர்களுடைய பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் அது நிராகரிக்கப்படுகிறது. அதை போல் தான், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை வாக்குகளுக்காக போடுகின்ற வேஷங்கள் கேலிக்கூத்து.தவிர, கனிமொழி, திருவள்ளூர் எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் ,டி ஆர் பாலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்குகளை கேட்கும் போது மக்கள் கேட்கின்ற கேள்விகள்? 

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் போன்ற பல்வேறு இடங்களில் திமுகவிற்கு மக்கள் ஓட்டு கேட்கும் போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதை வைத்து அதிமுக பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில் இவர்கள் செய்த ஊழல்கள் மக்கள் மறந்து விட்டார்கள் என்று நல்லவர்கள் வேஷங்கள் போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதனால் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.மேலும், 

சிறுபான்மையாக இருக்கட்டும் ,பெரும்பான்மையாக இருக்கட்டும் மக்கள் இவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் நாட்டுக்காகவா? அல்லது இவர்களுக்காகவா? ஊழலற்ற நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இலவசங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை .ஆனால், இலவசங்களை இவர்கள்தான் திணிக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் கூட்டங்கள் எப்படி வருகிறது? எல்லாக் கூட்டத்திற்கும் செல்கிறார்கள். யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் கை தட்டுகிறார்கள் .இப்படி ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலும் ,இந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நாட்டு மக்களின் நலன்களை நோக்கி ஒருவரும் பிரச்சாரம் செய்யவில்லை. இவர்கள் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்துக் கொள்கிறார்கள். திமுக, அதிமுகவை விமர்சிக்கிறது. அதிமுக, திமுகவை விமர்சிக்கிறது. சீமான், திருமாவளவன், வைகோ பிஜேபி, திமுக போன்ற கட்சிகளை விமர்சித்து பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் தேர்தல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

https://youtube.com/watch?v=EIhotK9RFus

இவர்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்? என்று கூட தெரியாமல் ,எதற்காக இந்த கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று தெரியாதவர்கள் தான் வாக்களிப்பார்கள். ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் .இங்கே இவர்களின் கட்சிக்கு வாக்களிப்பது ஏமாற்று அரசியல் .அதனால், வாக்களிப்பது சமூக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் இருக்க வேண்டும் என்ற மக்களின் ஜனநாயக கடமை இருக்க வேண்டும்.

அது இல்லாமல் இது போன்ற எந்த கட்சித் தலைவர்கள் பொய் சொன்னாலும் ஏமாந்து வாக்களித்து கொண்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது. இல்லை என்று மறுக்க முடியாது. இல்லையென்றால், யார் கூப்பிட்டாலும் ஓடுகின்ற ஒரு கூட்டம், அவைகளுக்கு அரசியலும் தெரியாது. உழைத்துப் பிழைக்கவும் தெரியாது . உழைத்து பிழைக்கத் தெரியாத கூட்டங்கள், இன்று அரசியல் கட்சிகளில் கோடிக்கணக்கில் சுற்றித் தெரிகிறார்கள். அதுதான் இவர்களுடைய பேச்சுத்திறமை, அதுதான் இவர்களுடைய அரசியல் செல்வாக்கு, அதுதான் இவர்களுடைய பொய்ப் பித்தலாட்டங்கள், ஒருவன் உழைக்காமல் எந்த தொழிலும் தெரியாது, எந்த முதலீடும் இல்லை, ஆனால் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு அரசியல், மக்களை ஏமாற்றும் வேலை ஆகிவிட்டது. 

மக்கள் புரிந்து கொண்டார்கள்.இந்த ஏமாற்றுக்காரர்களின் பேச்சை நம்பி இனி ஏமாறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதே போல் தான் இந்த பொய் பித்தலாட்டங்களை, பல ஊடகங்கள் மக்களிடம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. தவிர,மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் மணி, தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது.என்று தெரிவிக்கிறார். இவரெல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்கு பேச்சாளராக போய்விடலாம் மக்களிடம் பத்திரிக்கை துறை விமர்சனத்திற்கு உள்ளாகாது.

மணியின் வயதுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், ஜர்னலிஸ்ட் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுகிறேன். ஏனென்றால்,தேர்தல் அறிவித்து விட்டால், அதிகாரம் தேர்தல் கமிஷன் கையில் போய்விட்டால், மக்கள் ஊழல் வாதிக்கும், குற்றவாளிக்கும் வாக்களிக்க வேண்டுமா ? 

நாட்டில் சட்டங்கள் என்பது சாமானியனுக்கு ஒரு சட்டம், பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் என்று பாகுபடுத்தி, இது போன்ற ஊடக பேச்சாளர்கள் ,ஊடகங்கள் இருக்கும் வரை ஊழல்வாதிகளுக்கு ஒரு சப்போர்ட் தான். ஏனென்றால், அமலாக்க துறையோ, சிபிஐயோ ,என் சி பி யோ, என் ஐ ஏ ஓ, வருமானவரி துறையோ,சுதந்திரமான ஒரு அமைப்பு, ஒருவரை கைது செய்தால் ,அவரை போலீஸ் கஸ்டடியில் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து விசாரணை நடத்தி முடியாது. 

அவர்களை எதற்காக கைது செய்தார்கள்? அதற்கான ஆவணங்கள், காரணங்கள் எல்லாவற்றையும் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்க வேண்டும். இது பழி வாங்குவதற்காக, எந்த அரசியல் கட்சியும் அதை செய்ய முடியாது .சரி அப்படியே வைத்துக் கொள்வோம் .நீ குற்றவாளி இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் தெரிவியுங்கள். இங்கே பேசிக்கொண்டிருக்கும் வேலையே, இல்லை. இது என்ன மேடைப் பேச்சா? அல்லது பிரச்சார பேச்சா? எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போவதற்கு, மக்களை தான் பேசி முட்டாளாக்க முடியும். ஏமாற்ற முடியும்.

 ஆனால், நீதிமன்றத்தையோ, சட்டத்தையோ எந்த காலத்திலும் ஏமாற்ற முடியாது .ஆனால் வளைத்துக் கொண்டிருக்கலாம். இங்கே இவர்களெல்லாம் பேசுவது என்ன என்றால்! இந்த எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கின்ற ஊடகங்களும், ஊடகப் பேச்சாளர்களும், பிஜேபி ஊழலை எதிர்க்கின்ற ஒரு கட்சியாக செயல்படுகிறது. ஆனால் ஊழல்வாதிகளும், எதிர்க்கட்சிகளும் ஊழலுக்கு துணை போகின்ற ஊடக பேச்சாளர்களும், ஊடகங்களும் என்ன சொல்கிறது? என்றால், பிஜேபி 100% சரியாக இருக்க வேண்டும்.

 ஆனால், ஊழல்வாதிகளும், ஊழல் கட்சிகளும் ,ஊழல் பிரச்சார ஊடகங்களும் ,பேச்சாளர்களும் இவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் .எப்படி வேண்டுமானாலும் செய்திகளை போட்டுக் கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அல்லது பேசி நடிக்கலாம். நல்லவர்கள் வேஷம் போட்டு காட்டலாம். அதை யாரும் மக்களோ அல்லது சமூக ஆர்வலர்களோ அல்லது சமூக நலன் பத்திரிகை ஊடகங்களோ வெளிப்படுத்தக் கூடாது. அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் கூடாது.

பிஜேபியின் தேர்தல் பத்திரங்களை விமர்சிக்கும் இவர்கள், இந்த எதிர்கட்சிகளின் ஊழல்களை பற்றி ஏன் விமர்சிக்கவில்லை? தேர்தல் பத்திரங்கள் கூட யார் எந்த கம்பெனியிலிருந்து வாங்கி இருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது .ஆனால், போதை பொருள் கடத்துபவனிடமும், ஊழல்வாதிகளிடமும், ஊழல் கம்பெனிகளிடமும், பணம் வாங்கினால் தான் தவறு .அது குற்றவாளிகள் பணம். 

நியாயமானவன் பணம் இந்த தேசத்திற்கு ,இந்த நாட்டுக்கு தேவையானது. அதில் தவறில்லை. மக்கள் எத்தனை நாளைக்கு ஏமாந்து கொண்டிருப்பார்கள்? இந்த ஏமாற்று அரசியல்வாதிகளிடமிருந்தும், ஏமாற்று கட்சிகளிடமிருந்தும் எப்போது விழித்துக் கொள்வார்கள் ? -சமூக நலன் பத்திரிக்கை மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *