இலங்கையில் விடுதலைப்புலிகள் அங்குள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் ,சுதந்திரம் எதுவும் கிடைக்கவில்லை என்று போராடினார்கள். ஆனால், அதே கொள்கையை கையில் எடுத்து ,புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இங்குள்ள நாம் தமிழர் கட்சி ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
இங்கு மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அல்லது தமிழ் மக்களின் அதிகாரத்தை யாராவது பறித்துக் கொண்டார்களா? எதுவுமே இல்லை எதற்காக ஆயுதங்கள் கையில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது? இதைப் பற்றி NIA விரிவாக ஆய்வு செய்து மத்திய அரசுக்கு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயம் அனுப்பி வைக்கும்.இதனால்,நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தவிர, இப்ப பணம் மற்றும் ஆயுதப் பயிற்சி குறித்து விசாரணையில் உண்மை வெளிவந்தால் ,நாம் தமிழர் கட்சி சீமானுக்கு மேலும் சிக்கல்தான் .இதை நான் கட்சி வளர்ச்சிக்காக இந்த நிதியை பயன்படுத்தினேன் என்று சொன்னால், தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக் கொள்ளுமா?
இதை தான் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் அரசியல் கட்சிகளின் ஏமாற்று பேச்சுக்கள், மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் நம்பிக்கை துரோகம் ,
மேலும் ,பேசுவதற்கும், செயல்படுவதற்கும் அர்த்தமில்லாத காரியத்தில் சைமன் என்கிற சீமான் நாம் தமிழர் கட்சி ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.இதை NIA மத்திய தேசிய உளவுத்துறை முகமை கண்டுபிடித்துள்ளது .
அடுத்த கட்ட விசாரணையில் சீமானை விசாரிக்கும் போது இதற்கான பதில் என்னவாக இருக்கும் ?