
தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து வரும் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அதனுடைய அரசியல் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. மேலும், எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கொண்டது தான், இவ்வளவு பிரச்சனைக்கும் அதிமுக பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மை. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர். இந்த நிலைக்கு வரும்போது அவருக்கும் பல கஷ்டங்கள் இருந்திருக்கும் இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால், இவருக்கு முன் சீனியர்கள் இவருக்கு முன் இந்த கட்சியில் கோளாச்சி இருந்தவர்கள், இது எல்லாம் அவர்களுக்கு ஒரு எரிச்சல்தான் வெறுப்பு அரசியலை ஏற்படுத்தியிருக்கிறது.

கட்சி என்பது ஒரு பொது நலத்திற்கு, எல்லோருக்கும் ஒரு பொதுவானது. தான் ஒருவனே அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது, அது அவர்களுக்கு ஒரு வெறுப்பான அரசியலை ஏற்படுத்தியிருக்கிறது. யாரால் இவர் முதலமைச்சராக ஆக்கப்பட்டாரோ அவர்களாலே, இவர் பகையை வளர்த்துக் கொண்டு இன்று விரோதியாக அரசியலில் வலம் வருகிறார். இதற்கு இவருடைய அரசியல், அவர்கள் உள்ளே வந்தால், நான் டெம்மி ஆகி விடுவேன், இது எடப்பாடி பழனிசாமியின் அரசியல்.
இதற்குள் ஓடிக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து இன்று செங்கோட்டையன் போன்ற சீனர்கள் வெளியேறி விட்டார்கள். ஒரு பக்கம் ஓபிஎஸ்ஐ சேர்க்க சொல்கிறார்கள் பிஜேபி. இவர் யாரையுமே சேர்க்க மாட்டேன் என்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு என்று ஒரு தனி செல்வாக்கு கிடையாது. இந்த அதிமுக என்ற ஒரு லேபில் தான் எடப்பாடி பழனிசாமி .இதை அவர் நான்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தது பத்திரிகைகள் பலவிதமாக எழுதிக் கொண்டிருக்கிறது. இன்று 99% கட்சி சார்ந்த பத்திரிகைகளாகத்தான் இருக்கிறது. எந்த கட்சி தனக்கு பணம் கொடுக்கிறதோ, அந்த கட்சி பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். அது இருக்கட்டும் ஒருபுறம், ஆனால், பிஜேபியை தவிர்த்து அதிமுக அரசியலில் வருவது கஷ்டமான ஒன்று.

மேலும் இவர் அதிமுகவை வலுப்படுத்தாமலும், சீனியர்களை புறக்கணிப்பதும், அது திமுகவுக்கு சாதகம். தற்போது விஜயின் அரசியல், தமிழ்நாட்டில் பேசு பொருளாகியுள்ளது . அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை அதிகரித்தால், அது திமுகவுக்கு சாதகம். ஏனென்றால், இங்கு இருப்பவர்கள் அங்க ஓடுகிறார்கள். பிறகு விஜய் பக்கம் ஓடுகிறார்கள். இப்படி சீனியர்களை அரவணைக்க கூடிய அரசியல் எடப்பாடி பழனிசாமி செய்வது நல்லது.
மேலும், ஒரு உண்மையை சொல்கிறேன். இன்று அதிமுகவின் சிவி சண்முகம் ,எஸ் பி வேலுமணி, தங்கம் தென்னரசு இல்லை என்றால், எடப்பாடி பழனிசாமி இரண்டு கைகளும், வெட்டப்பட்ட நிலையில் நிற்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். இவர் நினைப்பது டெமி பீசுகளை வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவர்களையும், சீனர்களையும் வைத்துக் கொண்டால் நமக்கு ஆபத்து என்று நினைக்கிறார். அரசியலில் அது இவருடைய அரசியலுக்கு சரிவராது.
காரணம் ஆரம்பம் எம் ஜி ஆர், ஜெயலலிதா, சசிகலாவால் முதலமைச்சர் பதவி தாரைவாக்கப்பட்டது. இதை எல்லாம் புரிந்து அரசியல் செய்ய வேண்டும் அது தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சாணக்கியத்தனமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஜெயலலிதா இறந்த பிறகு நாலு வருஷ காலம் இந்த கட்சியை, இந்த ஆட்சியை காப்பாற்றியது பிஜேபி. இவர் யாருக்குமே விசுவாசம் ஆக இல்லையென்றால், எடப்பாடி பழனிசாமி ,எப்படி மக்களுக்கு விசுவாசமாக இருப்பார்? இது எல்லாமே, இவருடைய அரசியல் போராட்டமாகவே போய்க்கொண்டிருக்கும். இங்கே ஒரு அட்ஜஸ்டபல் (adjustable) அரசியல் இருக்க வேண்டும்.

சமீபத்தில் அமிஷா புதுக்கோட்டைக்கு வந்த போது கூட, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கவில்லை. ஆனால், எஸ் பி வேலுமணி ரகசியமாக ஹோட்டலில் சந்தித்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருவருடைய அரசியல் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்ல, இன்று பாமக, தேமுதிக, அமுமுக, போன்ற அரசியல் கட்சிகள், விஜய் பின்னாடி போய் நிற்க முக்கிய காரணம் அமித்ஷா. அந்த வாய்ப்பையும் எடப்பாடி பழனிசாமி தட்டிக் கழித்து விட்டார். தானே மந்திரி, தானே ராஜா, என்று எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கனவு இந்த 2026 அரசியலில் அவர் கோட்டை விட்டால், அதிமுக உடையும் . அதனால் புத்திசாலித்தனமாக அமித் ஷாவின் பேச்சை நம்பி இறங்குவது தான் அவருக்கு எதிர்காலம்
இல்லையென்றால், அது விஜய்க்கு சாதகமாகிவிடும். பிஜேபியின் ஒரே நோக்கம் திமுக 2026 இல் வரக்கூடாது. அவ்வளவுதான் அதற்காக என்ன வேலை வேண்டுமானாலும் செய்வார்கள். இதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டால் சரி.