
தமிழ்நாட்டில் ஊடக மைக்கைகளில் பேசுவது ,ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர் சீமான் இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த விஜய்யை குறை சொல்வார் இல்லையென்றால் ஸ்டாலினை குறை சொல்லுவார். இப்படி விமர்சனம் செய்வதும், குறை சொல்வதும், இவர்களுடைய அரசியல்! என்று போலியான ஒரு அரசியலை அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இல்லையென்றால் !பிஜேபியை குறை சொல்லுவார் .இதோட முடிந்துவிட்டது. அவர்களுடைய கட்சிக்காரர்கள், அவர்களும் மைக்கை பிடித்துக் கொண்டு ,யாரையாவது ஒருத்தரை ,குறை சொல்லி ,சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
அதேபோல், அண்ணாமலை, எச் ராஜா, திருமாவளவன் ,இவர்கள் எல்லோருக்கும் இதுதான் வேலை. அரசியல் என்றால் மக்கள் பணி என்று இவர்கள் நினைக்கவில்லை. இவர்களுக்கு தெரியாது போலிருக்கிறது.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்த மைக்கிலும், சோசியல் மீடியாக்களிலும், பேசுவது தான் அரசியல் என்று நினைத்து விட்டார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்திருக்கலாம் .அதனால் நீ ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம். அதைப் பற்றி யாருக்கும் அது தேவையில்லை. அது உன்னுடைய திறமை.

ஆனால், அரசியலுக்கு எது தேவை ?என்பது உனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். யார் எந்த பதில் சொன்னாலும், அதற்கு பதில் கொடுத்து கண்டு போவது, அரசியல் அல்ல. அதுக்கு பேரு வெத்து வெட்டு அரசியல். இந்த வெத்து வெட்டு அரசியல் தான் !தற்போது தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவனுக்கு அரசியல் என்றால், என்ன ?என்று கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால், தெரிந்தவன் அவனை வைத்து ஏமாற்றுவது, பிழைப்பு நடத்துவது, கேவலமான வேலை. அந்த வேலையை தான் இப்போது இந்த இரண்டாம் கட்ட அரசியல் கட்சிகள், மற்றும் தலைவர்கள் பேசிக்கொண்டு, நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பல அரசியல் கட்சிகளை நெருங்கி பார்த்திருக்கிறேன். பேசும்போது முதலில் நான் இதை செய்கிறேன். அதை செய்கிறேன். இப்படி செய்கிறேன். அப்படி செய்கிறேன் .என்று எல்லா டயலாக்கும் பார்த்திருக்கிறேன். பேசுபவனும் சொல்பவனும் செய்ய மாட்டான்.
(அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தி திருமாவளவனை அரசியல் செய்து மக்களை ஏமாற்ற சொன்னாரா? அல்லது சமூகப் பணியாற்றாமல், சட்டத்திற்கு புறம்பாக அரசியலில் கொள்ளை அடிக்க சொன்னார்களா? அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு கூட உங்களுக்கு எல்லாம் அருகதை கிடையாது. அவர் எவ்வளவு நேர்மையானவர்? எவ்வளவு கண்ணியமானவர். அவரை தலித் தலைவர் ஆக்கி அவரை வைத்து ஏமாற்ற ஒரு காலம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். இவர் எல்லாம் தேசத் தலைவர் .மக்களுக்கான தலைவர். ஆனால்! இவரை ஜாதி தலைவராக்கி விட்டு, மற்ற ஜாதிகளை ஏமாற்றுகிறார்கள்.)
மக்களுக்காக உழைப்பவனும், செய்பவனும், அதிகம் பேச மாட்டான் .இது அனுபவத்தில் கண்ட உண்மை.. அதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் பேசுவதற்கும், ரவுடிசம் செய்வதற்கும், தான் இருக்கிறார்கள் . இது தவிர அவர்களுடைய அரசியல் கட்சியினிர் கிராமங்களில் திருட்டு மணல் ஓட்டுவதற்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு கம்பெனிகளில் ஸ்கிராப் எடுப்பதற்கு காண்ட்ராக்ட் காரர்களிடம் கமிஷன் வாங்குவதற்கு இதற்கு தான் ஜாதி கட்சிகள் முதன்மையில் நிற்கிறார்கள்.
ஆனால், மக்கள் பணியை செய்வதற்கு எத்தனை பேர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள் ?

ஒவ்வொரு கட்சியிலும், அந்தந்த கட்சி தலைவர்கள் என்று சொல்லக்கூட தகுதி உள்ளவர்களா? திருமாவளவன் சீமான் வைகோ ராமதாஸ் மற்றும் பிரேமலதா இவர்களெல்லாம் செய்த சமூகப் பணி என்ன? ஊடகங்களில் பேசுவது தான் சமூகப் பணியா?
அதேபோல், பிஜேபி, திமுக, அதிமுக அரசியல் கட்சியினர் ஒவ்வொருவருடைய சமூகப் பணியை செய்தது என்ன ?அவர்கள் யார் ?என்பதை மக்களிடம் தெரிவியுங்கள்.

மீடியாவில் நீங்களே புகழ்ந்து கொண்டு, இல்லையென்றால், மீடியா உங்களை புகழ்ந்து கொண்டு, இல்லை என்றால், கட்சி கூட்டங்களில், உங்கள் கட்சியினர் உங்களைப் புகழ்ந்து கொண்டு, போலி அரசியல் செய்யாதீர்கள்.
எத்தனை காலம் தான்! இந்த மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாறுவார்கள்? தேர்தலுக்கு முன் உங்களுடைய வேட்பாளர் அதாவது ஒவ்வொரு கட்சியிலும் ,இருக்கிற வேட்பாளர்கள், தமிழ்நாட்டில் இந்த மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார்கள் ?என்பதை பட்டியல் கொடுங்கள் பார்க்கலாம்? .இதை ஒவ்வொரு கட்சித் தலைவரும் சொல்ல தயார? அல்லது உங்களுடைய சமூகப் பணி என்ன என்பதை நீங்கள் சொல்ல தயாரா?

அப்படி சொல்பவர்களுக்கு மட்டும் மக்கள் வாக்களியுங்கள். அவர்களுடைய தகுதி என்ன ?மக்கள் பணி என்ன ?என்பதை தேர்வு செய்து வாக்களியுங்கள். மேலும்,
மக்களுக்கு அரசியல் தெரியாது. ..அதனால் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட்டு ,எப்படி வேண்டுமானாலும், கொள்ளையடித்துக் கொண்டு ,,நீங்கள் சொத்து சம்பாதிக்கலாம். இதுதான் உண்மை .மேலும்,

தமிழ்நாட்டில் பிஜேபி அரசியல் கட்சியினர் செயல்பாடுகளை மோடி, அமித்ஷா, பார்க்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை. இங்கே மக்கள் பணி என்பது, ஊடகத்தில் பேசுவது தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும் ,

நான் பிஜேபியில் கேள்விப்பட்டதில் இப்போது துணை ஜனாதிபதியாகி இருக்கிற சி.பி. ராதாகிருஷ்ணன் ஒருவர் தான் இந்த பிஜேபி கட்சியில் மக்கள் பணி செய்வார் என்று கேள்விப் பட்டேன். இவர்கள் சொந்த வேலைக்காகவும் ,சொந்த வேலையை செய்து கொள்வதற்காகவும், மக்களை முட்டாளாக்க அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், மக்கள் பணி செய்தால், மக்களே எந்த ஒரு அரசியல் கட்சியானாலும், அவர்களை திரும்பிப் பார்ப்பார்கள்.தவிர,
பிஜேபி வட நாட்டில் ,அதனுடைய அரசியல், மக்களை நோக்கி இருப்பதால் தான், மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், இங்கே இவர்களை நோக்கி அரசியல் இருக்கிறது. மக்களை நோக்கி இல்லை. இதைவிட ஒரு கொடுமை இந்த திருமாவளவன் போன்றவர்கள் ஜாதி கட்சியை வைத்துக்கொண்டு ,இருக்கிற ஜாதி எல்லாம் இவரைப் பார்த்து பயப்பட வேண்டும் என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை நாளைக்கு மக்கள் ஏமாறுவார்கள்? ஒன்று ரவுடி வேலைக்கு போங்கள். இல்லை இல்லையென்றால்! வழக்குகளை எதிர்கொள்ள தகுதியற்றவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் என்று, அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் சமூகப் பணியாற்றி அதற்கு தகுதியானவர்களாக இருங்கள் தவறில்லை.எதற்கும் தகுதி இல்லாத கூட்டமாக பேசியே மக்களை ஏமாற்றக் கூடாது.
மேலும், சமீபத்தில் அரசு அதிகாரி என்று கூறி RS: 20 கோடி மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் காயத்ரி என்ற பெண் நிர்வாகி மற்றும் அவருடன் சிலரும் கைதாகி இருக்கிறார்கள் இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூகப் பணியா?

இங்கே மக்கள் பணிக்காக அரசியல் கட்சி என்று சொல்லிவிட்டு,மக்களை ஏமாற்றும் வேலையை, மேலும் ,இந்த கார்ப்பரேட் ஊடகங்களை வைத்துக் கண்டு, ஆளாளுக்கு பேசிவிட்டு, ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லிவிட்டு, ஆளாளுக்கு ஒருவரைப் பற்றி ,ஒருவர் குறை சொல்லி விட்டு ,இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மக்கள் அரசியல் தெரியாத முட்டாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த அரசியலை எல்லாம் ஏற்றுக் கொள்வார்கள். அறிவாளிகளும் ,படித்த சமுதாயமும், இந்த அரசியலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அதனால்தான் மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் .இந்த அரசியல் கட்சிகள் இடம் இருந்து நீங்கள் ஏமாறக்கூடாது. ஏமாந்தால்! உங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். மேலும்,

அரசியல் என்பது வாயிலே பேசிவிட்டு போவது ,அரசியல் இல்லை. உடம்பைக் காட்டி ரவுடிசம் செய்வது அரசியல் அல்ல. ஒருவருக்கொருவர் வீர வசனம் பேசுவது அரசியல் அல்ல.இங்கே, மக்களுக்காக உழைப்பதும், மக்களுக்காக தியாகத்தை செய்வதும் தான் அரசியல். இதை இன்றைய இளைய தலைமுறைகளும், படித்தவர்களும் இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லை என்றால் !அடுத்த தலைமுறையும் ,அழித்துவிட்டு ,இவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்தை சேர்த்துக்கொண்டு போவார்கள்.மேலும்,

தற்போது பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸின் குடும்ப கட்சி ஆகி விட்டது. பாகம் பிரித்து மகன் ஒரு பக்கம், மகள் ஒரு பக்கம் அந்த கட்சியை பாகப்பிரிவினை செய்து கொடுத்து இருக்கிறார் ராமதாஸ். அந்த அளவிற்கு வன்னிய சமுதாயத்தில் முட்டாள்களும், சுயநலவாதிகளும் சேர்ந்து ,இந்த சமுதாயத்தை திட்டம் போட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எதுக்கு கட்சி ?என்று கூட தெரியாதவன் எல்லாம் கொடியை ஒன்று கையில பிடித்துக் கொண்டு, உடம்பை கனமாக காட்டிக் கொண்டு, ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். படித்த சமுதாயம் ஏமாறக்கூடாது. .படிக்காத சமுதாயத்தை ஏமாற்றி தான், இந்த அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் சிந்தியுங்கள்.
இல்லையென்றால்! உங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு ,இந்த அரசியல் கட்சிகளை நம்பி வாழ்கிறவர்கள் , நிச்சயம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்று போராட்டமாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். மேலும்,
வருகின்ற தேர்தல் காலங்களில் எப்படி வாக்களிக்க வேண்டும்? யார் தகுதியானவர்கள்? என்பதை சிந்தியுங்கள். தவிர,

இந்த பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் இவர்கள், மக்கள் பணியாற்றுவது போல, பாவலா காண்பித்து, அவர்கள் பேசுகின்ற பொய்களை எல்லாம், அல்லது அந்த குறைகளை எல்லாம், ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்து கொள்வதெல்லாம் அரசியல்! என்று ஒரு போலி அரசியலை முன்னெடுத்து இந்த பத்திரிக்கை வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

அரசியல் கட்சிகள் பேசியே அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அதற்கு ஒத்து ஊதவும் ,கைதட்டவும், அரசியல் கட்சி என்ற கூட்டம் உழைக்காமல் மற்றவனை எப்படி ஏமாற்றுவது? தான் மட்டும் முன்னேறி கோடீஸ்வரனாகுவது எப்படி? இதுதான் அவர்களுடைய லட்சியம். இந்த லட்சியத்திற்காக அவர்கள் எப்படியும் பேசுவார்கள்.

இதில் நேற்று ஒன்று சொல்வார்கள். மறுநாள் காலையில் ஒன்று பேசுவார்கள் .இப்படி பேசி விட்டு, போவதற்கு, பக்க வாத்தியமாக இன்று சோசியல் மீடியாவும் ,அதனுடைய பங்குக்கு ,ஆளாளுக்கு அவர் ,அவர் அரசியல் கட்சிகளின் சோசியல் மீடியா பக்கவாத்தியங்கள், பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் பக்க வாத்தியங்கள் , இப்படி பக்கவாத்தியம் ,ஒவ்வொருவர் பக்கமும் வாசித்து விட்டு, இதனால், அவர்கள் பயன் அடைந்து கொண்டிருப்பார்கள். பாவம் இந்த மக்கள் எந்த கட்சிக்காரன் நமக்கு பணம் கொடுப்பான்? என்று தேர்தல் நேரத்தில்,ஒரு கூட்டம் , ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும்.மேலும்,

குடிகாரர்களுக்கு அரசியல் என்றால் என்ன ?என்று தெரியாமல், இவர்கள் ஒரு அரசியலைப் பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஆளாளுக்கு ஒரு கட்சியில் இருப்பதாக சொல்லிக் கொண்டு, அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாத கூட்டமாக பேசிக் கொண்டிருப்பார்கள். மேலும்,இன்று உழைப்பவனுக்கு அரசியலில் இல்லாமல் ,ஊரை ஏமாற்றுபவனுக்கு அரசியல்! முக்கியத்துவம் ஆகிவிட்டது.

மேலும் ,கஷ்டப்பட்டு படித்து, வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்கள், இன்று தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து, அவர்களுடைய பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால், அங்கே பத்தாயிரம் ,பதினைந்தாயிரம் சம்பளம் போட்டு, அவர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைக் கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல்,ஒரு தனியார் கம்பெனியில், டிகிரி படித்த மாணவர்களுக்கு,பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம் ஊதியமாக ரூபாய் 30,000 சம்பளம் கூட நிர்ணயம் செய்யாமல், விற்கும் விலை வாசிக்கு அவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள் ?என்பதை பற்றி சிந்திக்காமல் ,அவர் ஆட்சி நடத்துகிறார்.மேலும்,
இன்னொரு பக்கம் இந்த மக்கள் சினிமா பார்த்து சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சினிமா உங்களை சீரழிக்குமே தவிர, உங்களுடைய வாழ்க்கைக்கு உதவாது .அது முன்னேற்றாது. இது சினிமாவே அல்ல, அந்த காலத்தில் சினிமா படம் எடுத்தார்கள், சமூக நன்மைக்காக இருந்தது.மேலும், மக்களை முன்னேற்றுவதற்காக, ஒரு வழிகாட்டியாக சினிமா இருந்தது.ஆனால்,

இப்போது சினிமா அவனவன் பணம் சம்பாதிப்பதற்கு எதை வேண்டுமானாலும் ,சொல்லிவிட்டு, தன்னுடைய ஜாதி கதைகளை கொண்டு போய், மற்ற ஜாதிகளிடம் திணித்துக் கொண்டு, இதுதான் சினிமா என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதற்கு வேறு சோசியல் மீடியாவில் விளக்கம் கொடுக்கிறார்கள்.மேலும்,
மக்கள் முட்டாளாக இருந்தால், இப்படிப்பட்ட சினிமாக்களை பார்த்து உங்களை நீங்களே அழித்துக் கொள்ளலாம். கெடுப்பதற்கு பல வழிகள் இருக்கிறது. ஆனால், வாழ வைப்பதற்கு தான் ஒரு வழி கூட இங்கே தெரியவில்லை. அதிலும் படித்த இளைஞர்கள் ,இப்படிப்பட்ட சினிமாவை பார்த்து ,தவறான பாதையில் செல்வதற்கு, இவர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், மாரி செல்வராஜ் , பா ரஞ்சித் போன்றவர்கள்,
அவர்கள் ஜாதி படம் தான் எடுப்பார்களாம் . அதுவும் அவர்கள் ஜாதி எதிர்ப்பு படந்தான் எடுப்பாராம் .இவர்கள் எடுக்கிற படம் எல்லாம் ஜாதியை எதிர்த்து படம் எடுத்தால், மற்ற ஜாதிகள் அதைபார்க்க வேண்டுமா? இந்த ஜாதி படங்கள் யாருக்கு வேண்டும்? மேலும், ஜாதி எதற்கு? இதற்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.மேலும்,
வேற்று ஜாதிகளில் பணக்காரன் வீட்டுப் பெண்ணை அவன் ஏமாந்தால் , இவன் தள்ளிக் கொண்டு போக வேண்டும் .அதுதான் ஜாதி படமா? அதுதான் .ஜாதி கதை. யார் கிட்ட கதை சொல்றீங்க? தலித் சமூகத்தில், எவ்வளவோ ஏழை பெண்கள் இருக்கிறார்கள் .அவர்களுக்கு இவர்கள் வாழ்வு கொடுப்பார்களா? அப்படி கொடுப்பதால்,அந்த ஜாதியில் சமத்துவம் வராதா? வேற்று ஜாதி பெண்ணை பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல், தள்ளிக் கொண்டு போவது சமத்துவமா? இப்படிப்பட்ட சினிமாக்களை யார் பார்ப்பார்கள்?
அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் கூட்டங்கள், எப்படியும் பேசிக் கொண்டிருக்கும் கூட்டங்கள், இப்படிப்பட்ட முட்டாள்கள் கூட்டம் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தான் நீங்கள் படம் எடுக்க வேண்டும். படித்த சமுதாயம், எந்த ஒரு காலத்திலும் ,இதை ஏற்றுக் கொள்ளாது. அப்படி ஏற்றுக் கொண்டால் ,அவன் படித்தும் படிக்காதவனே .மேலும்,

ஆக கூடி பொதுமக்களும் ,இன்றைய இளைஞர்களும், நீங்கள் சிந்தித்து இந்த சமுதாயத்தில் உங்களை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் !எல்லோரும் ஏமாற்றுவதற்கு அவன, அவன் சக்திக்கு தகுந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறான். இப்படி பேசியே கவுத்துட்டு போற வேலைதான் தற்போதய அரசியல் வேலை ஆகிவிட்டது. அப்படி என்றால்!

யார் தான்யா ? செய்யப் போறது? எல்லோரும் பேசிட்டு ,பேசிட்டு, ஒருத்தரைப் பற்றி, ஒருத்தர் குறை சொல்லிட்டு ,போயிட்டே இருந்தா! யார் செய்வது? அரசியல் கட்சி தலைவர்கள் என்று சொல்வதற்கோ அல்லது அரசியல் கட்சியினர் என்று சொல்வதற்கோ, உங்களுக்கு தகுதி இருக்கிறதா? தகுதியான அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் தற்போது தேட வேண்டி இருக்கிறது?

மேலும், இன்றைய அரசியல் கட்சிகளில் மக்கள் உழைப்பது கேவலமாக நினைக்கிறார்கள். ஊரை ஏமாற்றுவது ,திறமையாகவும் ,கௌரவமாகவும் ,நினைக்கிறார்கள்.
அப்படி என்றால் ,யார் உழைப்பது? மேலும்,இந்த செல்போன், சினிமா, சோசியல் மீடியா, கம்ப்யூட்டர், இது வந்ததிலிருந்து மக்களுக்கு உழைக்காமல் எப்படி பிழைக்கலாம்? அரசியலில் உழைக்காமல் எப்படி கோடீஸ்வரன் ஆகலாம்? உழைக்காமல் வேறு ஏதாவது மக்களை ஏமாற்ற ஏதாவது புது வழியிருந்தால், அதில் எப்படி ஏமாற்றலாம்? சட்டத்தை எப்படி ஏமாற்றலாம்? ஜாதியை எப்படி ஏமாற்றலாம்? சொந்த பந்தங்களை எப்படி ஏமாற்றலாம்? இப்படி யாரை ஏமாற்றி நாம் பெரிய ஆளாகலாம்?
இதுதான் இன்றைய கலி காலத்தின் அவரவர் திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுவது திறமை என்றால்! இறுதியில் அவரவர்க்கு ஏமாற்றமே காலம் பதிலாக கொடுக்கப் போகிறது.