திமுகவின் ஊழல் பட்டியல்கள் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சேர்ந்து, கும்மியடிக்க வரப்பிரசாதமாக அமைந்து விட்டதா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

திமுகவின் ஊழல் பட்டியல் !ஒவ்வொரு அமைச்சர் மீதும், ஆயிரம் கோடிகள் ,500 கோடிகள், அதற்கும் மேலே ,இப்படி போய்க்கொண்டிருக்கிறது.

ஊழலற்ற அமைச்சர்களே திமுக ஆட்சியில் விரல் விட்டு தான் எண்ண வேண்டும் போல தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள் மீதும், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் திமுக தன்னுடைய பேச்சுத் திறமையால், எதிர்க்கட்சியின் அரசியல் பிரச்சாரம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியாது. எல்லாமே ஆதாரங்களோடு நடந்திருக்கிற ஊழல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது நீதிமன்றம் ஒவ்வொரு அமைச்சர் மீதும் ,ஊழல் பட்டியல் குறித்து நடவடிக்கை எடுங்கள் என்று பட்டியல் போட்டுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே, துரைமுருகன், பொன்முடி, கே .என். நேரு, செந்தில் பாலாஜி, எம் .ஆர் .கே பன்னீர்செல்வம்,ஆர். காந்தி, கே .கே . எஸ். எஸ். ஆர் .ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.மேலும்,

இவர்கள் ஊழல் செய்த பணத்தை வழக்கறிஞர்களிடமும், நீதிமன்றத்திடமும், செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். பதவி, அதிகாரம் ,வந்தவுடன் கண்ணு தெரியாமல் ஊழல் செய்ததன் விளைவு, இன்று திமுக அரசை எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் சேர்ந்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறது. இதை தவறு என்றும் சொல்ல முடியாது.

ஏனென்றால், தவறு செய்தவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை நகராட்சியின் ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மூன்று முறை, 250 பக்க கடிதங்களை ஆதாரத்துடன் அனுப்பியும், வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு அமலாக்கத்துறை வைத்துள்ளது. மேலும்,

அமலாக்கத்துறை இந்த ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றத்தின் மூலம் கே .என். நேரு மீது வழக்கு பதிய உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. தற்போது டிஜிபி வேறு வழியில்லாமல், கே .என். நேரு மீது வழக்கு பதிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு ,நகராட்சியின் டெண்டர்கள் குறித்த ஊழல்கள், நகராட்சியில் வேலைவாய்ப்பு குறித்த ஊழல்கள், அனைத்தும் இப்போது தமிழகத்தில் மிகவும் பரபரப்பான அரசியல் களத்தை உருவாக்கி உள்ளது.

இது தவிர, இதில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், குறித்தும் அமலாக்கத்துறை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதனால், இந்தப் பிரச்சனை தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும், இந்த வழக்கு விசாரணையில், ஸ்டாலின் குடும்பத்துக்கும், இந்த டெண்டர் முறைகேடுகள், ஊழல் சம்பந்தம் இருப்பதாக எதிர்வரும் விசாரணையில் தெரியவரும் என்கின்றனர் அமலாக்கத் துறை வட்டாரம் .

மேலும், இதில் ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார், உள்பட ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதில் என்ன முக்கிய வேதனை என்றால்? அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள், அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான் தவறில்லை .

ஆனால், கூட இருந்து அதற்கு ஒத்துழைத்ததற்கு இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும், இதில் தண்டனை அனுபவிக்கும் போது, உண்மையிலேயே ஒரு வருத்தமான சம்பவம் தான். இனிமேலாவது ஐ. ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உங்களுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் என்றால், எப்படியும் பேசக் கூடியவர்கள். அதுபோல் ஐ. ஏ. எஸ், ஐ. பி. எஸ் அதிகாரிகள் பேச முடியாது . எனவே ,இனிமேலாவது, இப்படிப்பட்ட வேலைக்கு துணை போகாமல், பார்த்துக்கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *