
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது.

நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்?

தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். நீதித்துறையில் இவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் ,அதை வைத்து கொண்டாடுகிறார்கள்.
அதே தீர்ப்பு இவர்களுக்கு எதிராக இருந்தால், அதை எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்ல, அந்த நீதிபதிகளையும் எதிர்க்கிறார்கள். ஆனால்,இவர்களுக்கு யாரெல்லாம் ஜால்ராவாகவும், எடுப்பாகவும் ,இருக்கின்ற பத்திரிகைகளுக்கு பத்திரிக்கை நல வாரியமே அமைத்திருக்கிறார்கள்.

இதுதான் திமுக அரசின் பத்திரிக்கை துறையில், உச்ச பட்ச அதிகாரம். அந்த நல வாரியம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டும் தான் நலவாரியமா? அல்லது சமூக நலன் பத்திரிகைகளுக்கும் நல வாரியமா? இது எல்லாம் தெரியாத பத்திரிக்கை துறையில் பணியாற்றிக் கொண்டு, நானும் பத்திரிகை என்று ஐடி கார்டு போட்டுக்கொண்டு, ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.மேலும், திமுக அரசு!

அதாவது உழைக்கும் மக்களின் வெறுப்பை திமுக சம்பாதித்துள்ளது .அதேபோல் உழைக்கும் பத்திரிகையாளர்கள், தகுதியான பத்திரிகையாளர்களின் வெறுப்பை திமுக சம்பாதித்துள்ளது. யாரெல்லாம் அரசியல் பின் புலத்தில், இயங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அதாவது பத்திரிகை என்பது அரசியல் கட்சியை சார்ந்ததாகிவிட்டது.

இங்கே கட்சி சார்பான பத்திரிகைகளுக்கு தான் அங்கீகாரம், சலுகை, விளம்பரங்கள் ,நல வாரியத்தில் உறுப்பினர்கள், இப்படி இது எதன் அடிப்படையில் இதை எல்லாம் கொடுக்கப்பட்டது? என்பது செய்தித் துறை அதிகாரிகள் பிரச்சனை நீதிமன்றத்திற்கு வரும்போது சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.மேலும்,

ஒரு பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளனின் தகுதி அரசியல் கட்சியை சார்ந்ததா ? அல்லது பத்திரிகை மற்றும் பத்திரிகையாளனின் தகுதியை சார்ந்ததா? அல்லது நடுநிலை ஆனதா? எது என்பது இவர்களுக்கு தெரியவில்லை என்றால், செய்தித் துறையில் பணியாற்றுவதற்கு தகுதி இல்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்.

இல்லை நீங்கள் எந்த ஆட்சி வருகிறதோ, அந்த கட்சியின் கரை வேஷ்டியை கட்டிக்கொண்டு செய்தி துறையை கட்சி அலுவலகமாக மாற்றி விடுங்கள். ஏனென்றால், பத்திரிகையை நாங்கள் எல்லாம் கட்சி பத்திரிக்கையாக நடத்திக் கொண்ட வருகிறோம் .அப்போது நீங்களும் கரை வேஷ்டி கட்டிக்கொண்டு, கட்சி அலுவலகமாக மாற்றி விடுங்கள். எதற்கு செய்தித்துறை? அரசியல் கட்சி துறையாக மாற்றி விடுங்கள். சரியாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு துறைகளும், பல போராட்டங்கள் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க அரசு அதிகாரிகளுக்கு தகுதி இல்லையா ? மேலும், ஒவ்வொரு மந்திரிகளும், ஊழல் புகாரில் சிக்கி வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
அதில் சில மந்திரிகள் உயர்நீதிமன்றம் ,உச்சநீதிமன்றம், அதுக்கும் மேலே நீதிமன்றம் இருந்தால், அங்கே கூட சென்று விடுவார்கள் போல தெரிகிறது.
இப்படியெல்லாம் ஆட்சி நடத்தும் ஸ்டாலினை புகழ் பாடும் பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரமாக எத்தனை கோடி லஞ்சம்? இந்த தகவல் தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக RTI ல் கேட்க்கப் பட்டது.
இதற்கு தகுதியான பதில், உண்மையான பதில், செய்தித் துறையால் கொடுக்க முடியவில்லை. மக்கள் தொடர்ந்து ஏமாறுவார்கள், என்று திமுக கட்சியினரும், ஸ்டாலினும், மீண்டும் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து விடுவார்களா? இல்லை, கண் துடைப்பு வேலை செய்து கொண்டிருக்கும், உங்களுடன் உங்கள் ஸ்டாலின் திட்டத்தில்! அதிகாரிகள் என்ன பிரச்சனையை தீர்த்து விடுவார்கள்? ஓட்டுக்காக ஆட்சி நடத்தினால் இப்படித்தான் இருக்கும். மக்களுக்காக அரசியல் மற்றும் ஆட்சி நடத்தினால்,இப்படி அதிகாரிகள் கண் துடைப்பு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதே போல் மீண்டும் மந்திரிகளின் ஊழல் பட்டியலை மக்கள் படித்து பார்த்துக் கொண்டிருப்பார்களா? மேலும்,இப்படிப்பட்ட பிரச்சனைகள் தமிழ்நாட்டில் தொடர்வதற்கு திமுக ஆட்சியை தேவையா ? என்பது தமிழக மக்கள் சிந்திப்பார்களா ? இந்த உண்மைகள் மக்களுக்கு புரிந்திருக்குமா? உண்மை ஜெயிக்கும்.