திமுக ஆட்சியில் தற்போது மாணவர்களுக்கு( +1) பிளஸ் ஒன்னில் அரசு தேர்வு எடுத்தது நல்லதா ?- நல்லது .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் அரசு தேர்வு, அதாவது பிளஸ் 1 வகுப்பிலும் அரசு தேர்வு, பிளஸ் டூ +2 வகுப்பிலும் அரசு தேர்வு, இப்படி தொடர்ந்து மூன்றாண்டுகள் அரசு தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு ஒரு பயமும் ,மன அழுத்தமும், அவர்களை நிச்சயம் பாதிக்கும். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.மேலும்,

பிளஸ் ஒன் தேர்வு ஆரம்பத்தில் பள்ளியிலே தான் இருந்தது. அதை எம்ஜிஆர் காலத்தில் தான் இதை கொண்டு வந்தார்கள் .அதற்கு முன்னர் எஸ்எஸ்எல்சி முடித்தவுடன் பியுசிக்கு, கல்லூரிக்கு தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றியமைத்தவர் எம்ஜிஆர்.

அப்போது பிளஸ் ஒன் +1 கொண்டு வந்த எம்ஜிஆர் ,அதை அரசின் பொது தேர்வாக கொண்டு வரவில்லை. மேலும்,பத்தாம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வு, பிறகு பிளஸ் 1 பள்ளியில் தேர்வு, பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு என்று கொண்டு வந்தார்கள். அதைக் கடந்த அதிமுக ஆட்சியில் தான் ,இந்த பிளஸ் ஒன் அரசு பொது தேர்வாக கொண்டு வந்தார்கள்.

தற்போது இதை திமுக ஆட்சி ஏதோ மாணவர்கள் நலனில் அக்கறை எடுத்து இதை மாற்றி அமைத்திருக்கிறது. இது ஒரு நல்ல விஷயம் தான். ஏனென்றால் தொடர்ந்து மாணவர்கள் மூன்றாண்டுகள் அரசு பொதுத்தேர்வுக்கு படிக்கும் போது அவர்களுக்கு நிச்சயம் ,அந்த ஒரு தேர்வு பயம், மன அழுத்தம் இருக்கத் தான் செய்யும்.

அதிலிருந்து இப்போது மாணவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். மேலும், ஏற்கனவே +1 அரசு பொது தேர்வு எழுதிய மாணவர்கள், பாடங்களில் அரியர் வைத்திருப்பவர்கள், அவர்களை +2 வில் சேர்ந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

இப்போது அவர்கள் பிளஸ் ஒன் அரியரை கம்ப்ளீட் செய்வது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பிளஸ் டூ அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெறுவது மற்றொரு பக்கம் இது இரண்டுமே அவர்களுக்கு கல்வியில் கடினமான போராட்டம் தான். இதற்கு தமிழக அரசின் கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? – மாணவர்களும் ,பெற்றோர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *