பத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்?

தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும்,

அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பல youtuber கள் ,தமிழில் அதற்கு புரோக்கர் வேலை என்று பெயர். மேலும்,

ஒரு பத்திரிகையாளனின் கடமை சமூகம் சார்ந்த கடமை, இந்த தேச நலன் சார்ந்த கடமை . ஆனால் போலி அரசியல்வாதிகள் போல், பத்திரிக்கையாளர்கள் போர்வையில் , போலி பத்திரிகையாளர்கள் அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இங்கே எடப்பாடி என்ன பேசினார்? ஸ்டாலின் என்ன பேசினார்? இவர்களுடைய பேச்சில் என்ன அரசியல்? என்று இவர்கள் அதற்கு ஒத்து ஊதக்கூடிய பேச்சாளர்கள். எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். காசு கொடுத்தால், யாருக்கு வேண்டுமானாலும் ஒத்து ஊதுவார்கள்.

இந்த ஒத்து ஊதக்கூடிய கூட்டங்கள் எல்லா கட்சிகளுக்கும், இந்த youtubeலேயும், பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளிலும் ,ஊதிக்கண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் எல்லாம் அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் என்ற ஒரு போலி பிம்பத்தை கையில் வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் அரசின் அங்கீகாரம் எதன் அடிப்படையில் கொடுத்தது ?என்று இதைப் பற்றி செய்தித் துறையில் கேட்டால், அதற்கு பதில் சொல்ல செய்தி துறைக்கு தகுதி இல்லை. இப்படிப்பட்ட செய்தி துறையின் அங்கீகாரம் இந்த பத்திரிகைகளுக்கு எப்படி இருக்கும் ?என்பதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ,பத்திரிக்கை துறையில் தகுதியானவர்களும், புரிந்து கொள்ள முடியும்.மேலும்,

மக்களுக்கான சட்ட சிக்கல் பிரச்சனை என்ன? வாழ்க்கை பிரச்சனை என்ன ?சமூகப் பிரச்சனை என்ன? அரசியல் பிரச்சனை என்ன? இதையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடியவன் தான் ஜர்னலிஸ்ட் (Journalist )அவனுக்கு பெயர் தான் பத்திரிக்கையாளன்.

ஆனால், அரசியல் கட்சிகளில் யார் என்ன பேசுகிறார்கள்? அதற்கு ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்துக் கொண்டு, இவர்களாக ஒரு கற்பனையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது இல்லை என்றால்,அது எந்த அளவுக்கு உண்மை என்று கூட நிரூபிக்க முடியாது. மேலும்,கிராமங்களில் இந்த குடு, குடுப்பைக்காரன் என்று சொல்வார்கள். அதுபோல் வாய்க்கு வந்தவரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது யாருக்காக பேசுகிறார்கள் என்றால், ஒரு பக்கம் யாரிடம் பணம் வாங்குகிறார்களோ, அவர்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எங்க போய் முடியும்? ஏனென்றால் இன்றைய படித்த இளைஞர்களுக்கு கூட அரசியல் புரியவில்லை. அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ,அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இன்று வேலைக்கு போனால் சம்பளம் கிடைக்குது. சாப்பிடுகிறோம், தூங்குறோம், நாட்டு நடப்பு பற்றி, கவலைப்பட வேண்டியது இல்லை. எவன் எது சொல்வது பற்றியும் கவலை இல்லை.தவிர, வருங்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டியது இல்லை. அதனால், இவர்கள் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்தையும் காட்டவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் பத்திரிகைகள் சுயலாபத்திற்காக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக உண்மையைப் பேசக்கூடிய பத்திரிகைகள் விரல்விட்டு கூட எண்ண முடியவில்லை. அந்த அளவில் இருக்கிறது.

தவிர, செய்தியாளர்கள் போலியான அரசியல் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு அரசியலை மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள யூடியூபர்கள் மோடியையும், மத்திய அரசையும் குறை சொல்லிக் கொண்டுதான் 75 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள்.

இவர்கள் பேசுவது அரசியலா? இது என்ன பத்திரிகையா ?இல்லை , இவர்கள் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளா? என்று எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கே சில நேரங்களில் குழப்பம். இப்படிப்பட்ட ஒரு கூட்டம் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் இந்த பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்று இவர்கள் அந்தந்த கட்சியினுடைய கட்சிக்காரர்களாக பேசிக் கொண்டிருங்கள். ஆனால், பத்திரிகையாளர்கள் போர்வையில் கட்சிக்காரர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் போலியான அரசியல் பிம்பம். இதை youtuber களும் செய்கிறார்கள், சாதாரண பத்திரிகைகளும் செய்கிறார்கள் ,கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் செய்கிறார்கள்.

இன்று வரையில், பத்திரிக்கை துறையில் ,இதற்கு அர்த்தமும் தெரியாது .தகுதியும் தெரியாது. ஐ.டி .கார்டு என்ற ஒரு அரசின் அங்கீகாரம் ஒருபுறம், இன்னொரு புறம் பத்திரிகையின் RNI மறுபுறம், இந்த உண்மைகள் தெரியாமலே பத்திரிக்கை துறையில் பல போலிகள், உண்மையான பத்திரிகையாளர்களோடும் ,பத்திரிகைகளோடும், நானும் பத்திரிகையாளன் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அர்த்தம் தெரியாத, தகுதி தெரியாத கூட்டங்கள் ,உங்களுடைய தகுதி என்ன! என்பது புரிந்துதான் நீங்கள் யூடியூபர்கள் ஆக இருந்தாலும் பேசுங்கள் .அல்லது பத்திரிகை, தொலைக்காட்சிகளாக இருந்தாலும், உங்கள் செய்திகளை மக்களிடம் நீங்கள் யார் ?என்பதை சொல்லிவிட்டு, பேசுவதற்கு உங்களுக்கு தைரியம் கிடையாது .அதுதான் உங்களுடைய போலியான அரசியல் அடையாளங்கள்.

இதற்கெல்லாம் மத்திய அரசின் செய்தித் துறை தான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . இதற்கு யார் மணி கட்டப் போகிறார்கள் ?என்று தான் தெரியாமல் ,இன்று பத்திரிக்கை துறை இருந்து வருகிறது ? எப்படி உச்ச நீதிமன்றத்திற்கு, ஜனாதிபதி மாளிகை கடிவாளம் போட்டுள்ளதோ, அதேபோல், இந்தப் போலி பத்திரிகைகளுக்கும் ,பத்திரிக்கையாளர்களுக்கும், யூடியூபர்களுக்கும், விரைவில் கடிவாளம் போட வேண்டிய கட்டாயம் நிச்சயம் உள்ளது.

இது இந்த தேசத்திற்கு, சமூகத்திற்கு ,முக்கியத்துவம் ஆனது. என்னுடைய பேச்சுரிமை ,எழத்துரிமை என்று நாட்டுக்கு எதிராக, சமூகத்திற்கு எதிராக, உண்மைக்கு எதிராக, கருத்துக்களை சொல்லும் போது ,பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள். இது தவிர, நாட்டில் !ஊழல் மற்றும் ஊழல்வாதிகளை ஊக்குவித்தல், இதை ஒட்டி சமூக விரோத கும்பல் தேச விரோத கும்பல் அரசியல் கட்சிகளில் பத்திரிக்கை துறையும் பொதுமக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இதைப் புரிந்து மத்திய அரசின் செய்தித் துறை ,இதற்கான ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும். எத்தனையோ சர்வே எடுத்து ஆட்சியின் நிலவரம், கட்சியின் நிலவரம் ,எப்படி ?என்று மத்திய அரசு உளவுத்துறை மூலம் சர்வே எடுக்கும்போது, இந்த பத்திரிக்கை துறையில் உள்ள பத்திரிகைகளையும் ,,செய்தியாளர்களையும், சர்வே எடுக்க முடியாதா?

மேலும்,தகுதி என்பது முக்கியமல்ல ,ஒருவருடைய தரம் என்பது முக்கியமல்ல, உண்மையான உழைப்பு என்பது முக்கியமல்ல ,ஆனால், ஒருவருடைய பேச்சு முக்கியமாகிறதா?

விஜய் இன்னும் அரசியலில் வந்து இதுவரை மக்களுக்கு என்ன செய்தார் ?என்பதை எந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் சொல்லவில்லை .ஆனால், கூட்டத்தை காட்டி, விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .அவருடைய பேச்சை விளம்பப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் போலியான அரசியல்.

அரசியல்! ஒரு கடினமான பாதை. அதிகாரம் கையில் வந்து விட்டால்,எப்படியும் பேசலாம் .எப்படியும் ஆடலாம். அதற்கு இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளே அப்படி இருக்கும்போது, நடிகர்கள் எப்படி இருப்பார்கள்?

எங்கோரு நாட்டில், அதாவது காசாவுக்கும் ,இஸ்ரேலுக்கும் ,சண்டை நடக்கிறது. இங்கிருந்து அதற்கு கூவுகிறார்கள். இது என்ன சினிமாவா ? ஏனென்றால், இவர்களுக்கு எல்லாம் சினிமா வசனம் பேசி, பழக்கப்பட்டவர்கள். அதனால் ,இங்கே வந்து அரசியல் தெரியாத மக்களிடம், சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு சினிமாவையும் தெரியும். அரசியலையும் தெரியும். பத்திரிக்கையும் தெரியும். ஒரு நடிகனுடைய தகுதியும் தெரியும். .அரசியல்வாதியின் தகுதியும் தெரியும் .அது தான் பத்திரிகையாளன்.

அதனால், தமிழ்நாட்டில் முட்டாள்களை வைத்து அரசியல் செய்வது போல், அதற்குப் போலி பத்திரிகையாளர்கள் ,ஓத்து ஊதுவது போல் ,எல்லோரும் உங்களுக்கு ஒத்து ஊத மாட்டார்கள் .மக்களிடம் உண்மையை சொல்வோம். மேலும், அரசியலில் !செய்வதுதான் எல்லோருக்கும் கடினமான வேலை. அதற்கு தகுதி இல்லாதவர்கள், பேசி தகுதியை வர வழைத்துக் கொள்கிறார்களா? அது எப்படி என்றால்!

தகுதி இல்லாத கூட்டங்கள் கொடியை பிடித்துக்கொண்டு, பேசிக் கொண்டிருக்கிறான். இருப்பதைப் போல, உதவாதவனும் பேசிக் கொண்டிருக்கிறான் . எல்லாம் தெரிந்தவனாக அரசியல் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இதை எல்லாம் மக்கள் முட்டாளாக இருந்தால் ,எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். அறிவாளிகள் ,தகுதியானவர்கள், தரமானவர்கள் ,அரசியல் தெரிந்தவர்கள் ,விஷயம் தெரிந்தவர்கள், இதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு, மக்க வைத்து விடுவார்கள். உண்மை தெரியாத மக்கள், இதையெல்லாம் பார்த்து, படித்து, குழம்பிக் கொண்டிருப்பார்கள் .

இது தவிர, நாட்டில் ஊழல் மற்றும் ஊழல்வாதிகளை ஊக்குவிப்பதால், இது தொடர்பாக அரசியல் கட்சிகளில்! சமூக விரோத கும்பல்கள், தேசவிராத கும்பல்கள், அரசியலில் பொதுமக்களிடம் , தங்களையும் அரசியல்வாதியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

ஏன்? இன்றைய செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட 90 சதவீதத்திற்கு மேல் இதற்கு அர்த்தம் தெரியாது . அப்படி என்றால்! பாமர மக்களுக்கு இந்த உண்மைகள் எப்படி புரியும் ? தெரிந்தால் போல் நடிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *