
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இன்னும் சுமார் ஓராண்டு காலம் இருப்பதால், இப்பொழுதே ஓட்டுக்களை எப்படி வாங்கலாம் ?என்று குறுக்கு வழியை தேர்வு செய்து ,பொது மக்கள் செல்போனில் ஓடிபி வாங்கியது அம்பலமானது. மேலும்,

இந்த பிரச்சனை வெளியில் வரவே , இதைப் பற்றி விசாரித்த போது இது திமுக கட்சியினர் ஓட்டுக்காக செய்கின்ற வேலை என்று நிரூபணம் ஆகி உள்ளது. இதற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, இதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
இது தவிர,இன்னும் என்னென்ன? குறுக்கு வழிகள் இருக்கிறது? என்பதை தேர்தல் களம் மிக மோசமானதாக தான் இருக்க போகிறது. அதற்கு முன்னோட்டம் தான் இந்த சம்பவம். மேலும்,

கடந்த தேர்தல் நேரத்தில் திமுக 2600 கோடி கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளுக்கு விளம்பரமாக ,எந்தெந்த வகையிலோ ,அவர்களுக்கு கொடுக்கப்பட்டது பற்றி பிரசாந்த் கிஷோரே சொல்லிவிட்டார்.
அதே பிரசாந்துகிஷோரூம் சுமார் 300 டு 400 கோடி வரை இவருக்கு தேர்தல் நேரத்தில் உதவிட ஆலோசகராக வாங்கியதும் ,மக்களுக்கு தெரிந்த ஒன்று. தவிர,இத்தனை கோடிகளை செலவு செய்யக்கூடிய திமுக ,சமூக நலன் பத்திரிகைகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்திருப்பார்களா?

ஏனென்றால் !அந்த பத்திரிகைகளில் உண்மைகளை சொல்லக்கூடியதும் இவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கக்கூடியதும் இருக்கிறது.
இது தவிர ,இவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும் அந்தப் பொய்களுக்கு சப்பை கட்டி பொய்யை உண்மை என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் தான் மக்கள் அதிகம் நம்புவார்கள்.அவர்கள் என்ன பொய் சொன்னாலும் ,ஏற்றுக் கொள்வார்கள் .

அதனால், இன்னும் 4000 கோடி கூட செலவு செய்து, தேர்தல் நேரத்தில் போய் வாக்குறுதிகளையும் , செய்ததும் ,செய்யாததும் எல்லாம் சொல்லி ,மக்களை ஏமாற்ற இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை திமுக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
அது இந்த தேர்தலில் நடக்குமா? நிச்சயம் அது கஷ்டம் தான். ஏனென்றால், மக்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் .அவர்கள் எத்தனை பொய் சொன்னாலும், அந்த பொய்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. இதற்கு உதாரணம் இதே பணத்தை எடப்பாடி பழனிசாமி கடந்த தேர்தலில் இந்த ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரமாக கொடுத்தார் . அப்போது வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்ற விளம்பரம் பட்டி தொட்டி எங்கும் பறக்க விட்டார்கள். ஆனால் ,எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.

இறுதியில் திமுக ஜெயித்தது. மக்கள் மனதில் ஒன்று பிடிக்கவில்லை என்றால் ,அதை நிச்சயம் தூக்கி எறிவார்கள். இந்த தேர்தல் அவ்வளவு எளிதில் திமுகவால் அதிமுகவால் ,ஏன் இருக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளாலும், மக்களை பேச்சால் வீழ்த்துவது மிக மிகக் கடினம்.
மேலும் ,இந்த கார்ப்பரேட் மைக்கைகளை பார்த்து மக்கள் ஏமாறுவார்கள் என்பதும் அரசியல் கட்சிகள் இறுதியில் ஏமாந்து போவார்கள். உண்மை ஜெயிக்கும்.
மேலும் தற்போது சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பது, இவ்வளவு தேர்தல் செலவு செய்யக்கூடிய திமுக 13000 பகுதி நேர பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் .
மேலும், இவ்வளவு பணத்தை அரசு ஊழியர்கள் பென்ஷனுக்கும், முதியோர்களுக்கும், சமூக நலன் பத்திரிகைகளுக்கும், செலவழித்து இருந்தால் திமுக மீது ஒரு அனுதாபமாவது வரும். இப்போது அது வருமா?