
காவல்துறையில் யார் மீது வேண்டுமானாலும், பொய் வழக்கு போடுகின்ற அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் போடுகின்ற பொய் வழக்குகள், அது காவல்துறையினருக்கே அந்த சட்டத்தின் மீது அவர்களுக்கு அதுவே தண்டனையாக இருக்க வேண்டும்.

அப்போது தான் நாட்டில் இந்த பொய் வழக்கு போடுகின்ற பிரச்சனைக்கு முக்கிய தீர்வு காண முடியும்.மேலும், அரசியல் அதிகாரம் ஒருவரிடம் இருந்தால் ,அவர் சொல்வதை வைத்து காவல்துறையினர் பொய் வழக்கு போடுகிறார்கள்.
இதற்கு நீதிபதிகள் ஒத்துழைத்து இருந்தால் ,இந்நேரம் ஏர்போர்ட் மூர்த்திக்கு குண்டர் சட்டம் போட்டு விட்டு இருப்பார்கள். இவருடைய விஷயத்தில் நீதிபதி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால், காவல்துறை இப்போது அவருக்கு என்ன வழக்கு போடலாம் ?என்று அவர் மீது தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கேவலம்.

ஒருவன் உங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறான் என்பதற்காக திருமாவளவனுக்கு கூட்டணியில் அதிகாரம் உள்ளது என்று இப்போது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஏர்போர்ட் மூர்த்திக்கு குண்டாஸ் போட சொல்லுகிறார்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். அதிகாரம் இருக்கிறது .
அதனால் காவல்துறை அவர்களுடைய எடுபிடி வேலைக்காரர்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், இவர்கள் சட்டப்படி சட்டத்தை பாதுக்காக்க வந்த காவலர்கள். அதற்குத்தான் அரசாங்கத்தில் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சியினரும் சம்பளம் கொடுக்கவில்லை. இது மக்களுக்கும் தெரியும். மேலும்,

இந்த காவலர்கள் சட்டத்தை மீறி பொய் வழக்கு போடுவது ,அவர்களுக்கு உள்ள அதிகாரம் ,தவறான ஒரு சட்ட விதிமீறல் ,அதையும் தாண்டி மனித உரிமை மீறல், இவை அத்தனையும் , பொய் வழக்கு போடுகின்ற காவலர்கள் மீது சட்டம் கடுமையாக கொண்டு வர வேண்டும்.

இது ஏர்போர்ட் மூர்த்திக்காக சொல்லவில்லை. நாட்டு மக்களுக்காக சொல்லுகின்ற முக்கிய சட்டம். இந்த சட்டத்தின் மாற்றம் அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல அப்பாவி மக்களின் மீதும் பொய் வழக்குகள் போடும்போது அது காவல்துறை எண்ணுக்கு எதிராக திரும்பும் படி இருக்க வேண்டும்.
தவறான வழக்கு ஒருவர் மீது காவல்துறை போட்டுவிட்டால் அவர்களுக்கு இவர்களுக்கு என்ன தண்டனை குறித்து போட்டார்கள் அதே தண்டனையை காவல்துறைக்கு கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் காவல்துறையில் பொய் வழக்கு போடு வதை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.