இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் மிகவும் மோசமான நிலையில் பின் தங்கிய மாநிலமாக இருந்து வந்த மாநிலம் அந்த மாநிலத்தில் ரவுடிசம், ஊழல் கலாச்சாரம் எல்லாம் புரையோடிப் போய் இருந்த மாநிலம், அப்படிப்பட்ட மாநிலத்தை அவருடைய திறமையால் அது எப்படி சாத்தியமானது ?எல்லோரும் யோகி ஆதித்யநாத் ஆகி விட முடியுமா?
இது எப்படி நடந்தது? உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நேர்மை ,வெளிப்படையான நிர்வாகம், தன்னலமற்ற சேவை, இதுதான் இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அது மட்டுமல்ல, அங்கே எந்த அரசியல் கட்சியும், கட்சி பெயரை சொல்லி ஊழலுக்கோ ,ரவுடிசத்திற்கும் இடமில்லை.அப்படி என்றால், தமிழ்நாட்டில் இங்கு இருக்கின்ற ஜாதி கட்சிகள் முதல் அரசியல் கட்சிகள் வரை எவ்வளவு கட்சி பெயரை சொல்லி ,ஊழலும் ,ரவுடிசமும் செய்து கொண்டிருக்கிறது? என்பதற்கு இதைவிட வேற என்ன சாட்சி.
மேலும், உத்தரபிரதேச வளர்ச்சியின் ஜிடிபி எவ்வளவு? எந்த எந்த திட்டங்கள் கொண்டு வந்து ,எவ்வாறு அதை செயல்படுத்தப்பட்டுள்ளது? என்பதெல்லாம் இந்த வீடியோவின் தொகுப்பு வெளிப்படுத்துகிறது .இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் ஏன் சொல்லவில்லை? அவர்கள் சொல்வதெல்லாம் நாட்டின் ஊழலுக்கும் ,ரவுடிசத்திற்கும் ஒத்து ஓதிக் கொண்டிருக்கிறார்களா? இதற்கு தகுதியான அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டில் ஒன்று தேருமா?
மேலும், இந்த தேராத கட்சி கூட்டங்களை படம் பிடித்து , மக்களிடம் போட்டோ காட்டுவதற்கு தான் இன்றைய ஊடகங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அதுதான் பத்திரிக்கை, தொலைக்காட்சி வேலையா ? இனியாவது மக்கள் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் தேவை ?என்பதை தீர்மானியுங்கள்.தவிர,உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வரை பொதுமக்கள் எப்படி சந்திக்கிறார்கள்? எப்படி அவர்களின் குறைகளை எளிமையாக எவ்வாறு கேட்கிறார் ?
அது மாதிரி தமிழ்நாட்டில் ஒரு நாளாவது ஸ்டாலின் கேட்டிருப்பாரா? அல்லது எங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளர்களையாவது சந்தித்து இருப்பாரா? எங்களுடைய குறைகள் எத்தனையோ, இந்த பத்திரிகைகளில் வெளிப்படுத்துகிறோம் .அதுவாவது அவருக்கு தெரிந்திருக்குமா? இந்த நிலையில் இவரால் எப்படி? இப்படிப்பட்ட ஒரு நிர்வாகத்தை கொண்டு வர முடியும்? ஸ்டாலின் அதற்கு தகுதியானவர் அல்ல.
இங்குள்ள அரசியல் கட்சிகள் இந்த ஜால்ரா ஊடகங்களோடு, பயணித்துக் கொண்டிருப்பார்கள். ஜால்ரா ஊடகத்திற்கும் எதை சொல்ல வேண்டும்? என்று கூட தெரியாது .மக்களுக்கு இந்த ஜால்ரா ஊடகங்களை புரிந்து கொள்ளவும் தெரியாது .அதனால்தான், நாட்டில் மோசமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனியாவது தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களா? மேலும், அரசியல் என்பது சினிமா கம்பெனி அல்ல என்பதை தமிழ்நாட்டு மக்கள் எப்போது புரிந்து
கொள்வார்கள் ?