
வாக்காளர் திருத்தம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. இருப்பினும் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சிகள் தொடர்ந்து இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டமும் நடத்தியுள்ளனர்.
இவர்கள் போராட்டம் நடத்தியது ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தையும், பொதுமக்களையும், வாக்காளர்களையும் குழப்பி ,திமுக எப்பவும் பேசுவது போல், மேதைகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வாக்காளர்களை அவர்களுடைய வாக்களிக்கும் உரிமையை பறிக்கிறார்கள். வாக்காளர்களின் உரிமையை பறிக்கவில்லை தேர்தல் ஆணையம் நீங்கள் கள்ள போட்டு போடுவதை பறிக்கிறார்கள். அதனால் தான் கதறுகிறார்கள்.
இவர்களுக்கு தேவை அடி முட்டாள்கள், கிராமத்தில் அரசியல் தெரியாத கூட்டங்கள் ,இவர்களைத்தான் இவர்கள் குறி வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் படிக்காத வயதானவர்களை கூட வீடியோ போட வைத்து விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து மோடியை விசை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மோடிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று கூட தெரியாமல், இந்த கூட்டம் பேசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மூலம், இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்து ,அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், நேற்று அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம், எல்லா மாநிலங்களிலும், வாக்காளர் திருத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டது. இப்போது இறுதியாக மக்களை ஏமாற்றி குழப்பிக் கொண்டிருக்க, ஆங்காங்கே இந்த சோசியல் மீடியா ஏஜெண்டுகள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள், இவர்கள் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் திருத்தத்தில், எந்த தவறும் இல்லை. ஒரு பக்கத்தில் வாக்காளரின் பெயர் ,தந்தையின் பெயர் ,ஆதார் எண், புகைப்பட வாக்காளர் அடையாள எண், கணவர் பெயர், மனைவி பெயர், பாதுகாவலர் பெயர், தந்தையின் பெயர் ,கைப்பேசி எண், தாயாரின் பெயர் ,தாயாரின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், இவ்வளவுதான் அதில் இருக்கிறது.
இதில் என்ன! உங்களுக்கு பெரிய சந்தேகம் இருக்கிறது ?ஒருவருடைய ஆதார் எண் அவசியம், புகைப்படம் அவசியம், இவர்கள் அந்த வீட்டில் வசிக்கிறார்களா? இல்லையா ?என்பது யாருக்கு தெரியும்? அதை கணக்கெடுத்தால் தானே தெரியும். இதற்கும் ஒரு படி மேலே, பி .டி .ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒரு அறிவு மேதை மாதிரி சொல்லி இருக்கிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு வாக்காளர்களை சேர்ப்பீர்கள்?

ஆட்களை ஒதுக்கினால், ஏன் சேர்க்க முடியாது? நிச்சயம் முடியும். நீங்கள் சொல்வது போல், டிஜிட்டல் முறையில் அதாவது, இந்த வாக்காளர் திருத்தத்தை ஆன்லைனில் கொண்டு வந்தால், நிச்சயம் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
நீங்கள் போலி ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், எல்லாமே கேட்கிற ஆவணங்கள் அதிலே கொடுத்துவிட்டால் அவர்களும் வாக்காளர்களாக ஆகிவிடுவார்கள். இப்போது தெரிகிறதா? போலி வாக்காளர்கள் எப்படி உருவாகிறார்கள்? அது மட்டுமல்ல, கையில் வைத்த மையை அழிப்பதற்கு திமுகவுக்கு கைவந்த கலை. அதை கண்டுபிடித்து வைத்திருப்பார்கள்.

அதாவது படிக்காத கிரிமினல்கள். படித்தவன் கூட இவர்களிடம் தோற்றுப் போவான். அந்த அளவுக்கு இதிலே கை தேர்ந்தவர்கள். எப்படி போலி வாக்காளர்களை உருவாக்க முடியும்? எப்படி அவர்களை வைத்து வாக்களிக்க முடியும்? எப்படி இந்த மையை அழிக்க முடியும்? இவை அத்தனையும் தெரிந்து வைத்திருக்கும் ஒரே கட்சி திமுக தான். அதனால்தான் இவர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கதறுவது மட்டுமல்ல, கூட்டணி கட்சிகள் அத்தனையும் கதறுகிறது.
மேலும்,போலி வாக்காளர்களை ஒழித்து விட்டால், நாம் வாக்களிக்க முடியாது. அது மட்டுமல்ல, ஒருவர் ஒருமுறை அந்த பொத்தானை அழித்தி புகைப்படம் அதில் வந்துவிட்டால், மீண்டும் அவர் எத்தனை முறை அழுத்தினாலும், அங்கே வாக்கு போய் அதில் விழாது. அந்த சிஸ்டமும் இப்போது இ.வி.எம் .மில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால்தான் தொடர்ந்து தமிழகத்தில் கவலையில், திமுக இருந்து வருகிறது. மக்கள் இந்த ஆட்சியைப் பற்றி ஏற்கனவே அதிருப்தியில், கவலையில் இருந்தாலும், இவர்கள் கள்ள ஓட்டு போடுவதில் வல்லவர்கள். இந்த வல்லவர்களை தேர்தல் ஆணையம் மிஞ்சி விட்டதே என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எத்தனை சட்ட ஓட்டைகளை தேடினார்கள்? எந்த ஓட்டையிலும், இதை தடுக்க முடியவில்லையே என்று தான் திமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய வருத்தம். வாழ்க தேர்தல் ஆணையம்.