தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் !வெளியிடுகின்ற அறிக்கைக்கு என்ன உத்திரவாதம்? தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் இது பற்றி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா ?-வாக்காளர்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக அரசியல் கட்சிகள் , தற்போது போட்டி ,போட்டு இலவசங்களையும்,செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் அறிக்கையாக கொடுத்து விடுகிறார்கள்.

இதை நம்பி வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் ,பொதுமக்கள், தனியார் கம்பெனி நிறுவனங்கள் , வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள்,இளைஞர்கள், விவசாயிகள் ,பத்திரிகையாளர்கள் இப்படி பல்வேறு தரப்பிலிருந்து இவர்கள் சொல்லும் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்து, அது செயல்படுத்த முடியாமல் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி விட்டு போய்விடுகிறார்கள்.

இப்படி கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதிகள், பொய்யான வாக்குறுதிகளாக சமூகத்தை ஏமாற்றுகிறார்கள். அந்த ஏமாற்றத்திலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, அது பற்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக வாக்காளர்களின் முக்கிய கோரிக்கை. மேலும்,

கடந்த தேர்தலின் போது, திமுக ஆட்சியில் 600 பக்கம் ஏகப்பட்ட தேர்தல் அறிக்கைகள் வெளியிடப் பட்டது . அந்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றினார்களா? மேலும்,அதில் மக்கள் எவ்வளவு பேர் பயனடைந்தார்கள்? அதை வெளிப்படையாக சொல்ல முடியுமா?

இப்படி,இந்தப் பொய்யான தேர்தல் அறிக்கைகளை நம்பி தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், திமுக அரசு ,அதில் எதுவுமே உருப்படியாக செய்யவில்லை. இன்று அரசு ஊழியர்கள் முதல் தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள் வரை தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி எல்லாம் தரப்பும் இந்த தேர்தல் அறிக்கையை நம்பி ,ஏமாந்து வாக்களித்து ,அரசோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

தேர்தல் வாக்குறுதியை செய்வதற்கு பதிலாக, அவர்கள் செய்துக் கொண்டார்கள் . அப்படி என்றால் தேர்தல் வாக்குறுதி என்பது எல்லாம் ஒரு கண் துடைப்பு நாடகமாகவே நடத்தி விட்டார்கள். தவிர,இவர்களுக்கு மூட்டு கொடுக்கும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் அதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியுமா?

மேலும், தேர்தல் வாக்குறுதிகள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும் ‌‌. அது புத்தகத்தில் எழுதிக் கொடுக்கும் காகிதம் அல்ல, மக்கள் அந்த காகித புத்தகத்தையோ, அல்லது பத்திரிக்கையில் வருகின்ற செய்திகளையோ அல்லது தொலைக்காட்சியில் வருகின்ற செய்திகளையோ பார்த்து திருப்தி படுவதற்கு அல்ல.இதற்கு மேலும் ஒரு விளக்கம், கடந்த சட்டமன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில்!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில், வாங்கிய நகைக்கடன் 5 சவரன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டார்கள். ஆனால், ஒரு சில வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு ,கணக்கு காட்டி விட்டார்கள். இதுவும் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்று விட்டதாக சொல்லி விட்டார்கள்.

இப்படி நானும் கணக்குக்கு கொடுக்கிறேன் என்று எல்லாவற்றிலும் கொடுத்து விட்டு, நானும் கொடுத்தேன் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இதுதான் விளம்பர திமுக அரசின் விளம்பர சாதனையா ? மேலும், தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையாக ஆண்களுக்கு இலவச பஸ் பயணம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் (திமுக அரசு மகளிர் உரிமை திட்டம் என்று இருக்கும் 1000 ரூபாயை )தற்போது 2000 ரூபாய் ஆக அதிமுக அறிவித்துள்ளது.

இப்படி தேர்தல் அறிக்கை என்பது நாட்டில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தை கூறும் வேலை அல்ல. ஆட்சியைப் பிடிக்கும் போட்டியில் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து விட்டு, அதை செயல்படுத்த விட்டால், உச்சநீதிமன்றமும் ,தேர்தல் ஆணையமும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?

மேலும் ,இந்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு என்ன உத்தரவாதம்? வாக்காளர்கள் கேள்வி? – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *