
தேர்தல் நெருங்குவதால் ,அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த ரோட் ஷோ நடத்த, வைப்புத் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் உண்மையிலேயே தேவையான திட்டம்தான்.

இன்று மக்களுக்கு அரசியல் கட்சிகள் கூட்டம் எதற்காக நடத்துகிறார்கள்? அந்த நோக்கம் கூட தவறானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,போட்டி ,போட்டு கூலிக்கு ஆள் பிடித்து, கூட்டத்தை காட்டுவது அரசியல் பொதுக் கூட்டத்துக்கு தகுதியான வேலை அல்ல.
ஒரு காலத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சை கேட்க கூட்டம் கூடினார்கள். ஆனால், இப்போது இந்த அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்புணர்வு தான் ஏற்பட்டுள்ளது. சமூகம் நலனை தாண்டி, தங்கள் சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள் என்று மாறிவிட்டது.
இதில் தற்போது விஜய் நடத்திய அரசியல் கட்சி பொதுக் கூட்டத்தில் 41 பேர் இறந்தார்கள். இந்த இறப்பு தேவையற்றது. இதைய ஆய்வு செய்வதற்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இதனால், மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவது தேவைதானா?மேலும்,

இதை சார்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் ஒரு அறிக்கை ஒன்றை அரசுக்கு கொடுத்திருக்கிறார். அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

அது என்னவென்றால், இன்றைய கால கட்டத்தில் பொதுமக்களை திரட்டி ,ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல லட்சங்கள் தேவைப்படுகிறது. அது ஒரு புறம் என்றால், இந்த மக்களை வாக்கு பண்டங்களாக, உழைக்கும் மக்களை கூலி கொடுத்து ,கொண்டு வந்து மணிக் கணத்தில் உட்கார வைத்து கூட்டத்தை நடத்துவது, ரோட் ஷோ நடத்துவது, தடை செய்யப்பட வேண்டும். இது மட்டுமல்ல,

ஒலிபெருக்கியுடன் வாகனங்களில் கட்சியினருடன் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வது, தடை செய்யப்பட வேண்டும். இன்று நாட்டில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் அதிகரித்துள்ளன. அவற்றின் மூலமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை செய்யலாம்.
மேலும், சோசியல் மீடியாக்களில் பிரச்சாரம் என்பது சிலருக்கு பாதகமாகவும், சிலருக்கு சாதகமாகவும் இருக்கிறது. அது நடுநிலையோடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வைப்புத் தொகை என்பது 5000 முதல் 10,000 பேர் வரை கூட்டத்தைக் கூட்டும், அரசியல் கட்சிகளுக்கு ஒரு லட்சம் வைப்புத் தொகை. அதுவும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் ,பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. ரோட்ஷோ என்றால் 3 மணி நேரத்திற்குள் ,அதை முடித்து விட வேண்டும்.
அதிகமானால் சம்பந்தப்பட்ட காவல்துறையை அணுகி நேரத்தை கேட்டு தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இது தவிர, இந்த இடத்தில், எந்த நாளில் கூட்டம் நடத்தப் போகிறார்களோ, அதற்கு பதினைந்து நாட்கள் முன்னதாக அவர்கள் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த கண்டிஷன்கள் எல்லாம், ஆட்சி நிர்வாகத்திற்கு, இன்றைய காலத்திற்கு ,அது தேவையானதாகவே உள்ளது.

ஆனால், அரசியல் கட்சிகளுக்கு, அந்த கண்டிஷன்கள் ஒரு கிடுக்கி பிடியாகவே உள்ளது. மேலும், இந்த வாய்ப்புத் தொகை என்பது 20 ஆயிரத்திற்கு மேல் கூட்டப்படும் கூட்டத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வைப்புத் தொகை, அதற்கு மேல் 8 லட்சம், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கூட்டினால் 20 லட்சம் வைப்புத் தொகை,

மேலும் இந்த வைப்பு தொகை ,பொது சொத்துக்கள் சேதம் அடையாமல் இருப்பதற்கு வைக்கப் படுகிறது, என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அந்தந்த அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். இப்படி பல கண்டிஷன்கள் அரசியல் கட்சிகளுக்கு போடப்பட்டுள்ளது.
இதை யார்? நடத்துவார்கள் என்றால் , தமிழ்நாட்டில் திமுக ,அதிமுக தவிர வேறு எந்த கட்சிகளும், பொதுக்கூட்டத்தை நடத்தாது என்று பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல,

புதியதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களால் இவ்வாறு எப்படி இந்த வைப்புத் தொகை கட்ட முடியும்? இது ஒரு பக்கம் அவர்களை நசுக்குகின்ற வேலை என்று அந்த அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும், நாட்டில் அதிக அரசியல் கட்சிகள் இருந்தும், மக்களுக்கு அதனால், எந்த பயனும் ,இல்லாமல் தான் இருந்து வருகிறது.மேலும்,

சமூக நோக்கம் இல்லாமல்! எத்தனை அரசியல் கட்சிகள் இருந்து நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன பயன்? சமூக ஆர்வலர்கள் .